GOA INC17 BJP13 OTH10 AAP0
MANIPUR INC28 BJP21 OTH11 PRJA0
13 > 17
21 > 28
இது பிஜேபி கணக்கு.
காங்கிரசுக்கு கோவாவில் தேவை 4. மணிப்பூரில் தேவை 3
பிஜேபிக்கு கோவாவில் தேவை 8, மணிப்பூரில் தேவை 10
மொத்தமா திருடி இருக்கிறது பிஜேபி.
திருடறது என்று முடிவு பண்ணிட்டா அதில் மொத்தமா திருடறது
கொள்ளை இலாபம் என்பது கார்ப்பரேட் அரசியல் உத்தி.
எங்கள் வெற்றியை பிஜேபி திருடி ஆட்சி யமைக்கிறது என்று
ராகுல்காந்தி சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால்
அரசியல் நியாயம் தர்மங்களுக்கு அப்பாற்பட்டது.
கணக்கு என்பது வெறும் கூட்டல் கழித்தல்
பெருக்கல் வகுத்தல் மட்டுமல்ல. அரசியல்கணக்கு என்பது
புள்ளிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
புள்ளிகளை எந்த இடத்தில் எப்போது வைக்கிறோம் என்பதைப்
பொறுத்தே கணக்குகளின் விடைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
புள்ளிகள் அரசியலில் பூஜ்யங்களுக்கு மதிப்பைக் கூட்டுவதிலும்
குறைப்பதிலும் பெரும்பாங்காற்றுகின்றன. .
இதெல்லாம் புரியாட்டா கூட பரவாயில்லை.
4 சட்டசபை உறுப்பினர்களை வாங்குவதை விட
8 சட்டசபை உறுப்பினர்களை வாங்க அதிக பணம்
தேவைப்பட்டிருக்குமே. ஊழலுக்கு எதிரான ஆட்சியாக
தங்களைச் சொல்லிக்கொள்ளும் மோடிஜி பிஜேபி
வகையறாவுக்குத் தான் இந்த ஊழல் கணக்கு வெளிச்சம்.
. இது பிஜேபி " நடுவண் அரசு அதிகாரம்" என்ற
அனாதிஷியாவைக் கொடுத்து ஜனநாயக ஆபரேஷனை
வெற்றிகரமாக செய்துவிட்டது. ஆனால் ஜனநாயகம்
என்ற நோயாளி தான் அநியாயமாக செத்துப்போய்விட்டார்.
OPERATION SUCESS. PATIENT DIED.
.
ஆபரேஷன் அமித்ஷா!
ReplyDeleteசரியோ தவறோ ஆனால் ஆப்ப்ரேஷனை சக்ஸாக முடித்த மோடியையும் அமித்ஷாவையு நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்
ReplyDelete