Thursday, December 28, 2023

பெண்களும் சொத்துரிமையும்

பெண்களும் சொத்துரிமையும்.


இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டப்பின் இதனால் பயனடைந்த பெண்கள் எத்தனைப் பேர்?

சொத்துரிமை கேட்டால் பாசமலர் கருகிவிடும் என்பதால் சொத்தா? அண்ணன் தம்பியா?

 என்ற மன உளைச்சலில் பெண் தள்ளப்படுகிறாள்.

பெரும்பாலான பெண்கள் பிறந்த வீட்டு உறவு நல்லது கெட்டதுக்கு வேணும், ஊரும் உறவும் மதிக்க தாய்மாமன் சடங்குகள் /கட்டுகள் செய்ய வந்து நிற்கணும் அதுதான் முக்கியம் என்றே முடிவெடுக்கிறார்கள்!

நடைமுறையில் இதுதான் பெண்களின் நிலை.


தற்போதுள்ள ஆணாதிக்க சமூக அமைப்பில், தன் திருமணத்திற்குப் பின் பெண் தன் பெற்றோர்களைப் பிரிந்து கணவனுடம் செல்கிறாள். அவள் வாழ்விடம் மாறுகிறது. அப்பெண் ‘’பெண்களுக்கு சொத்துரிமை’ சட்டத்தின் படி பெறுகின்ற நிலத்தை அவள் தொலைதூரத்திலிருந்துகொண்டு  எவ்வாறு பயிரிட முடியும்?  

நிலத்தை விற்பது,  சகோதரன் /உறவினரிடம் பராமரிக்க விடுவது,  மூன்றாவதாக  நிலத்தை குத்தகை முறையில் பயிரிட எழுதிக்கொடுப்பது, இந்த மூன்று வழிகள் தான் அவளுக்கு இருக்கின்றன.


இந்த சமூக அமைப்புமுறை பெண்களுக்கு சொத்துரிமையில் 

வினையாற்றுகிறது.


சீர் , சடங்கு , தாய்மாமன் முறை என்று எதோ ஒரு வகையில் பெண் தன் பிறந்த வீட்டு சொத்துரிமையை பெற்றிருக்கிறார் என்பதும் உண்மைதான்.


நிலம்தான் பெண்.

பூமாதேவி.

எத்தனை பிம்பங்கள் நிலத்தின் மீது பெண்ணுக்கு இருந்தாலும்

அவை அனைத்தும் நிழல்கள் தான்.

நிஜங்கள் அல்ல.

நிஜ வாழ்வில் சாத்தியப்படாதவை

கற்பனை உலகில் பிம்பங்களைக் கட்டமைத்து உலவ விடுகின்றன.


நிலம்.. பெண் ..

பெண் ..நிலம் ..

எப்படி சொல்லிப் பார்த்தாலும் அதன் உரிமை

அவளுக்கு இல்லை.


நிலம் தான் அதிகாரம்.

இன்றைய முதலாளித்துவ கார்ப்பரேட் ஜனநாயகத்தின் வர்த்தக உலகிலும் சரி

ஆட்சி அதிகார அரசியலிலும் சரி..

பெண் எப்போதும் எவ்வளவு 

திறமைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

ஆண்வாரிசு இல்லாத இடத்தில் பெண் வரமுடிகிறது என்ற நிஜம்

அதிகாரத்தில் பெண் இடம் என்னவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.


#பெண்களும்_சொத்துரிமையும்

#women_landrightsact

Sunday, December 10, 2023

எடப்பாடி.. பேசப்படாத அரசியல்




 எடப்பாடி ... 

தமிழக அரசியலில் 

வித்தியாசமானவர்.

அவரை ஜனநாயக அறிவுஜீவிகள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

அவரை " டயர் நக்கி" என்று அசிங்கப்படுத்திய வர்கள் யார் ? யார்? அவர்கள் எல்லாம் ஒரு ஸ்க்ரூவைக் கூட விட்டுவிடாமல் நக்கிப் பிழைத்தவர்கள் தான்! எடப்பாடியை கிண்டலடித்த வர்களின் கோமாளித்தனங்கள் மறந்து விடவில்லை.


அதிமுக கட்சியில் ஓரே தலைமை பீடமாக திகழ்ந்த அம்மாவின் நியமன முதல்வர் ஓ பி எஸ். அவரை   ஓவர்டேக் செய்தார்.

சின்னம்மா ,  தினகரன் அனைவரையும் களத்திலிருந்து சரியான நேரத்தில் அவுட் ஆக்கினார்.

எடப்பாடிக்கு  ஐடி விங் பவர் இல்லை!

பத்திரிகைகள் அவரைக் கொண்டாடவில்லை.

அட.. தமிழ்நாட்டின் எந்த ஒரு பிரபல்யமும் எடப்பாடியைக் கவனிப்பது கூட தங்கள் பெருமைக்கு இழுக்கு என்று நினைத்தார்கள். நினைக்கிறார்கள்! அவர் பின்னால் திரைப்பட நடிகர் நடிகை வெளிச்சங்கள் கிடையாது! சூப்பர் ஸ்டார்களுக்கு அவர் யார் என்றே தெரியாது. 🤫

அவருக்கு போட்டோ இமேஜ் லுக் , கவர்ச்சி எதுவும் இல்லை. அவர் தனக்கென இமேஜ் கிரியேட்டர்ஸ் வைத்துக் கொள்ளவில்லை.

அவர் ஒரு சாதாரணமானவன், மேற்கண்ட எதுவும் இல்லாமல் தமிழக அரசியலில் வரமுடியும் என்ற  நம்பிக்கையை முதன்முதலாக கொடுத்தவர்.


அஇஅதிமுக கட்சி திமுகவுக்கு நிகரான தொண்டர்களைக் கொண்ட ஓர் அரசியல் கட்சி.

அவர் தமிழக முதல்வராக இருந்தக் காலத்தில்தான் கொரேனா லாக் டவுண் நேரம். அப்போது நான் தமிழ் நாட்டில் இருந்தேன்.

மிகச் சிறப்பாக அச்சூழலைக் கையாண்டார். 

யூடியூப்பில் சிலர் இப்போதுதான் எடப்பாடி காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை புள்ளிவிவரங்களோடு  முன்வைத்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். அதிமுகவுக்கு உண்மையில் அரசியல் களமாட.. எரிகின்ற பந்தைப் பிடித்து வீசக் கூட  தெரியவில்லையா!

எப்படியோ காலதாமதமாக சில உண்மைகள் வெளிவரத்தான் செய்கின்றன.

இதுவும் தேவைதான்.


எதிர்க்கட்சி பலமில்லாத  ஜனநாயகம் ஒரு கார்ப்ரேட் நிறுவனம் ஆகிவிடும்.


எடப்பாடி போட்டோ.. இதுதான் கொஞ்சம் ஓகே வா இருக்கு! 😏


பிகு😺

நான் அதிமுக அனுதாபியாக கூட இருந்ததில்லை.

யாரும் இதை எல்லாம் எழுதுவதில்லை என்பதால் வழக்கம் போல

நான் எழுத முன் வந்தேன்.

அவ்வளவுதான்.💥🙏

#எடப்பாடி_அதிமுக

#EPS_AIADMK


Friday, December 1, 2023

Gandhi family tree

 இவர்கள் இருந்தார்கள்!!!


நேற்று எதையோ தேடும்போது

மகாத்மா காந்தியின் குடும்ப உறவுகள் கிளை பரப்பி.. Gandhi's Family tree!

பார்க்க பார்க்க பெருமித உணர்வு.

வாழ்ந்து காட்டிருக்கான்யா இந்தக் கிழவன்! ( காந்தி)

இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்ற நிஜம் எனக்கும் அதிசயமாகத்தான் இருக்கு.!

அந்த அதிசயத்தை இன்னும் பிரமாண்டமாக்கியது இந்தப் பெரிசும் !( ராஜாஜி)


இரு மாபெரும் தலைவர்களின் வாரிசுகள் 

திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இன்றைக்கு நடக்கிற அதிகாரப் பகிர்வு திருமண ஒப்பந்தம் அல்ல.

இது அசல் காதல் திருமணம்.

5 ஆண்டுகள் இருவரும் சந்திக்க கூடாது என்று இந்தப் பெரிசுகள் இரண்டும் ஒரு கட்டுப்பாடு விதிக்கிறார்கள். 5 ஆண்டுகளை சந்திக்காமல் காதலோடு வாழ்ந்துக் காட்டி வாழ்க்கையில் இணைந்தவர்கள் இருவரும்.

அந்த ஆண்.. தேசப்பிதா மகாத்மா காந்தியின் கடைசிப் புதல்வன் தேவதாஸ் காந்தி.

அவள்.. வேறு யாருமல்ல.. ராஜாஜியின் மகள் லஷ்மி.

ஆனால் பாருங்கள்..

அந்த வாரிசுகள் இருவரும்

தங்கள் பேராளுமை மிக்க " தந்தையின்" அடையாள அட்டையைக் காட்டியதாக தெரியவில்லை.

இரு தலைவர்களும் கூட அப்படி நினைக்கவில்லை.

(பொழைக்கத் தெரியாத பிள்ளைங்க!)

ஆனா பாருங்க 

இதெல்லாம் இந்திய ஜனநாயக மரபில் இருந்திருக்கிறது என்பது மட்டுமே ! அதிசயமாக பெருமிதமாக இருக்கிறது.

எனக்கு காந்தியை விட ராஜாஜி மீது சில ஒவ்வாமைகள் உண்டுதான்.

அதெல்லாம் இருக்கட்டும்டே சரவணா..

ஆனா.. இப்படியும் வாழ்ந்துக் காட்டிய பெரிசுகள் டே... இந்த இரண்டும்.


அவர்கள் இருவரின் மரபுவழி கிளை பரப்பி நிற்கும் முகமும் முகவரியும் தெரியாத அவர்கள் அனைவருக்கும் கோடானக்கோடி வாழ்த்துகள்.


வாழ்தல் இனிது.

இவர்கள் வாழ்ந்த நினைவுகளுடன் 

வாழ்தல் இனிது.


புகைப்படம் 1)காந்தி தன் மகன் தேவதாசுடனும் பேரனுடனும். 2) ராஜாஜி தன் மருமகன் தேவதாஸ் & பேரனுடன். நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

#mahatmaGandhi_familytree