Saturday, March 11, 2017

சூப்பர் ஸ்டார் ... சூப்பர் பரதநாட்டியம்..

.
Image result for aishwarya rajinikanth bharatanatyam


இந்தப் பாருங்கோ சூப்பர் ஸ்டார்.. உங்க ஸ்டைலே உலகமகா நடிப்பாக்கி நீங்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டாராகி உங்களுக்கு பாலாபிஷேகமெல்லாம்
நடத்தி நீங்க ஒரு தடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி நி னைச்சி...
இன்னிக்கு வரைக்கும் ... உங்களைக் கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம் என்பதாலேயே நீங்க ரொம்பவும் எல்லைத்தாண்டி ..
அய்யோ அய்யோ... ...
உங்கள் மகள் என்பதற்காக திருமதி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களை ஐ.நாவின் இந்திய கலாச்சாரா தூதுவராக நியமதித்ததைக் கூட நாங்கள் ஏற்றுக்கொண்டு
விட்டோம் என்பதற்காக
(Aishwarya R Dhanush, UN ambassador for gender equality in India)
அவரை இந்தியாவின் பரதநாட்டிய கலைமாமணியாக
நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது டூ மச் ... சா ..
உங்களுக்கே தோணல..
மார்ச் 8 மகளிர்தினக் கொண்டாட்டத்தில்
அவர் ஆடியதை சூப்பர் டான்ஸ் என்று வேணும்னா
சொல்லிக்கொள்ளுங்கள். "சூப்பர் " உங்களின்
குடும்பப்பெயராகிவிட்டதாக சொல்லிக்கொள்கிறோம்.
ஆனால் ப்ளிஸ் பரதநாட்டியம்னு மட்டும் சொல்லிடாதீங்க..
இது பரதநாட்டியம்னா அப்புறம் நீங்களெல்லாம்
சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்மினி அம்மானு
ஒரு நடிகை அதுதான் நம்ம தில்லானா மோகனாம்பாள்
ஆடியதை என்ன நாட்டியம்னு சொல்றது?

நான் ஒரு தடவை தான் சொல்லுவேன்.
இப்படியே ஆட ஆரம்பித்தா அப்புறம் நான் அழ ஆரம்பிச்சிடுவேன்...
ஹேங்ங்

4 comments:

  1. ஒரே டமாசு தான்...! ஹா... ஹா...

    ReplyDelete
  2. ஹாஹா... உங்கள் ஆதங்கம் புரிகிறது.

    நல்ல வேளை நான் பார்க்கலை!

    ReplyDelete
  3. ஐ.நாவின் ஒரு இந்திய தூதுவர் என்பதற்காக பரதநாட்டிய கலைமாமணியாக நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது டூ மச்சே.

    ReplyDelete