Sunday, January 22, 2017

நந்தி ஸ்லோகம் வீரவணக்கம்

.
தமிழரின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வீரமரணம் அடைந்த
தமிழினக் காளையர் கீரனூர் அருகேயுள்ள லெட்சுமணப்பட்டியைச் சேர்ந்த தம்பி மோகன் என்ற ராஜபாலுவுக்கும்
இலுப்பூர் அருகேயுள்ள ஓடுகரை ஊரைச் சேர்ந்த தம்பி இராஜாவுக்கும்
வீரவணக்கம். இராஜாவின் மனைவி மகன் மகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ''இன்று காலை புதுக்கோட்டை மட்டத்தில் ராப்பூசல் கிராமத்தில் நான் துவங்கி வைத்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், துரதிர்ஷ்டவசமாக 47 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது, ''ஆனால், மாடுகளுக்கு எந்த துன்புறுத்தலுக்கு நடக்கவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே, இப்போட்டிகள் நடந்தது'' என்று
உறுதி செய்திருக்கிறார். அவருடைய நீதி தவறாத நெறிமுறையை
எண்ணி எண்ணி... எண்ணி எண்ணி...

(நந்தி ஸ்லோகம்)

நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ!!

ஓம் நமசிவாய.

3 comments:

  1. காளை பறந்தது
    சிங்கம் இறந்தது
    நரி சிரித்தது
    பண்பாடு சிறந்தது.

    ReplyDelete
  2. வருத்தம் தந்த உயிரிழப்பு.

    இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு யார் இனி..... :(

    ReplyDelete