Saturday, August 29, 2020

இந்தி தான் இந்தியப் பிரதமருக்கான தகுதியா ?

 

 

இந்தி தான் இந்தியப் பிரதமருக்கான தகுதியாக

இருக்கிறதா..??!!

அண்மையில் முக நூலில் ஒரு பதிவு வாசித்தேன்.

அப்பதிவு பெருந்தலைவர் காமராஜருக்கு இந்தியும்

ஆங்கிலமும் தெரியாது என்பதை முன்வைக்கிறது.

நேருவின் மறைவுக்குப் பின், லால்பகதூர் சாஸ்திரியின்

மறைவுக்குப் பின் இந்திய அரசியலில் காமராசரின்

செல்வாக்கு உச்சத்தில் இருந்த து என்றாலும் அவர்

“NO HINDI, NO ENGLISH, How can I be PM?”

என்று காமராஜர் சொன்னதாக ஒரு சொற்றொடர்

இப்போதும் ஊடகங்களில் இருக்கிறது.

அப்படியானால் காமராஜர் எந்த மொழியில் நேருவுடனும்

பிற இந்திய அரசியல் தலைவர்களுடனும் உரையாடி

இருப்பார்? என்ற இன்னொரு கேள்வி எழுகிறது.

இங்கே ஊடகங்கள் சொல்வது போல காமராஜர் அவர்களுக்கு

ஆங்கிலமே தெரியாது என்பதல்ல …! பேச்சு வழக்கின்

ஆங்கில உரையாடலை அவர் அறிந்தவர். காமராஜருடன்

பயணித்து அவரைப் பற்றி எழுதி இருக்கும் சாவி அவர்கள்

காமராஜர் தன் பயணங்களின் போது அரசு கோப்புகளை

வாசித்தும் கையொப்பமிட்டும் குறிப்பு எழுதியும் இருக்கிறார்

என்பதையும் அவர் பயணத்தில் வாசிக்கும் புத்தகங்களில்

ஒன்றிரண்டு ஆங்கிலப்புத்தகங்களும் இருக்கும் என்பதையும்

பதிவு செய்திருக்கிறார். 

 

பெருந்தலைவர் காமராஜருடன்  6 ஆண்டுகள்

பத்திரிகை நிருபராக பயணம் செய்த ஜவஹர்

ஆறுமுகம் அவர்கள் (Jawahar Arumugam Arumugam)

நான் காமராஜருடன் 6 ஆண்டுகள் சுற்றுப்பயணம்

செய்த நிருபர். காமராஜ் ஆங்கிலத்தில்

கோப்புகளைத் திருத்துவார். ஹிந்தி புரியும். 

 என்று என் முக நூல் பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறார்.

இன்னொரு நிகழ்வையும் பலர்

எழுதி இருக்கிறார்கள். அதாவது நேரு சென்னை விமான

நிலையத்தில் வந்து இறங்குகிறார். அவரை வரவேற்க

செல்கிறார் காமராஜர். காமராஜர் நேருவை விட உசரம்.

உயரத்திற்கு ஏற்ற உடல் பருமனும் கொண்ட தோற்றம்.

(இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்… ) தன்னை நோக்கி

வரும் காமராஜரைப் பார்த்து “ you are a TALL MAN”

என்று வியப்புடன் சொல்கிறார். அதற்கு காமராஜரோ

“Not as tall as yourself” என்று சொன்னவுடன்..

இருவரும் சிரித்துக்கொள்கிறார்கள்.

இந்தளவுக்கு காமராஜருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறது

என்பதையும் அவர் பதில் சொன்ன விதமும்..

அந்த மனிதனைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

குடியரசு தலைவராக இருந்த பிரானாப் முகர்ஜி

காங்கிரசின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்.

தான் இந்தியப் பிரதமராவதற்கு தகுதி இல்லை என்பதற்கு

அவர் சொன்ன காரணம்.. “though I was elected to the LOK SABHA,

I did not know hindi. And without knowing Hindi, nobody should

Venture to be the PM of India”

இந்த ஒட்டு மொத்த பிம்பத்தையும் சேர்த்து தான்

இந்திய அரசியலையும் இந்தியையும் வாசிக்க

வேண்டி இருக்கிறது. இப்போது தான் தேசியக் கட்சியிலிருந்து

சில வித்தியாசமான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

காங்கிரசு கட்சியின் சசிதரூர் “இந்தி யார்மீது திணிக்கப்படக்

கூடாது “ என்று உரக்க குரல் கொடுக்கிறார்.

“Hindi cannot be imposed even if the Prime Minister is from

Tamil Nadu or West Bengal”

தங்கள் கட்சியின் மூத்த தலைமுறை முன்வைத்த

“இந்தியப்பிரதமருக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்”

என்ற கருத்தை எதிர்த்து ஒலிக்கிறது.

இக்குரல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்..

***

#NO_Hindi_No_PM

#இந்தியப்பிரதமருக்கு_இந்தி_கட்டாயமா

 

 

 

 

Wednesday, August 26, 2020

கட்டமைப்பின்மையில் செயல்படும் கட்டமைப்புகள்

 

கட்டமைக்கப்பட்டதும் படாததும்.
Structure and unstructure 
 
< முழுமையான கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு 
பெண் “விட்டு விடுதலையாகும்” கனவுகளை மட்டும்
காணுகிறாள்.!> 

கட்டமைக்கப்படாத ஆண்களையே (Anarchist)
அதிகமாக பெண்களுக்குப் பிடிக்கிறது.
ஆனால் அந்த அனார்ஜிஸ்ட் ஆணும் கூட
பெண் மட்டும் கட்டமைக்கப்பட்டவளாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறான்!
அரசின்மை என்பதன் அடி நாதமே 
அதிகாரமின்மை.அதிகாரத்தை எதிர்த்தல்.
அதிகாரம் எந்த வகையில் எந்த ரூபத்தில்
 வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாத 
மனநிலைதான்.
அரசு அதிகாரமின்மை தேசம் இதெல்லாம்
 இல்லாத போதும் மனிதன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறான் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.
ஆனால் மீண்டும் அந்த உலகம் சாத்தியமா?!
அதை முன்வைப்பது கூட ஒரு புனைவுலகமாக 
(யுதோப்பியன் ) இருக்கிறது.
 
ஒரு படைப்பாளனுக்கும் அவன் படைப்புகளுக்கும் கட்டமைப்புகள் எப்போதும் எதிராகவே இருக்கின்றன.
கட்டமைப்புகளில் வாழ்ந்து கொண்டே கட்டமைக்கப்பட்ட அனைத்துடனும் அவன் போராடிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் ஒரு கணினி வல்லுனர்க்கோ அல்லது
ஒரு பெரும் கூட்டத்தை வழி நடத்தும் நபருக்கோ
 கட்டமைப்பு தேவைப்படுகிறது.
பெண்ணும் பெண் படைப்புகளும் எழுத்துலகில் 
மட்டுமல்ல.. நடைமுறை வாழ்க்கையிலும் 
ஒவ்வொரு தளத்திலும் கட்டமைப்புகளுக்கு 
எதிராகப்போராட வேண்டியவளாக இருக்கிறாள்.
முழுமையான கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு 
பெண் “விட்டு விடுதலையாகும்” கனவுகளை மட்டும்
காணுகிறாள்.!
எல்லா கட்டமைப்புகளையும் தூக்கி எறிந்த
சித்தர்மரபில் கூட ஆண்களின் பங்களிப்பு 
இருந்த அளவுக்கு பெண்கள் இருந்தார்களா?
ஏன் இல்லை?
 

Tuesday, August 25, 2020

ஞானப்பெண்ணை வாழவிடுவதில்லையே ..ஏன்?

 அறிவான பெண்களுக்கு

அதுவே சுமையாகிவிடுகிறதா?
 
Wisdom is differ from knowledge.. 
 
எல்லா மனிதர்களுக்கும் பசி உண்டு
தாகம் உண்டு.. காதல் உண்டு
கண்ணீர் உண்டு.
அது அவளுக்கும் உண்டு.
ஆனால் அவளுடையை சாதாரண 
அபிலாஷைகளை அவளைச் சுற்றி 
இருக்கும் ஆண்கள் எந்த மாதிரி 
எடுத்துக் கொள்கிறார்கள்?
ஏன் அவளை விலக்கி வைக்கிறார்கள்?
அவள் தனித்துவமானவள் என்று
சொல்லுவதன் ஊடாக அதன் அடித்தளத்தில்
அவள் தனித்துவிடப்பட வேண்டியவள்
என்பதும் சேர்ந்தே வெளிப்படுகிறது.
அவளுடன் உரையாடுகிறார்கள்
விவாதம் செய்கிறார்கள்
ஏன் காதலிப்பதாக கூட பாவனை
செய்கிறார்கள்.
ஆனால் அவளின் சூடு தாங்காமல்
போட்டு உடைத்துவிட்டு கடந்து
சென்றுவிடுகிறார்கள்.
அவர்களால் அவளை நெருங்கமுடிகிறதே தவிர
அவளை தங்களுக்குள் ஏற்றுக்கொள்ள
முடியாமல் அல்லது தெரியாமல்
அவஸ்தைப் படுகிறார்களோ?!!

Sakthi Vikatan - 06 July 2009 - காரைக்கால் ...

 

எனக்குப் பிரியமான என் புனிதவதிக்கு
அதுதானே நிகழ்ந்தது?
 
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.”
 
(திருவந்தாதி)

Thursday, August 20, 2020

சீனாவின் டிராகுலா ஆட்டம்

 

சீனா பெரிய பெரிய்ய அணைகளைக் கட்டி
வைத்திருக்கிறது. கொட்டும் மழையில்
 அணைகள் நிரம்பி வழிகின்றன. 
அந்த அணை நீரிலிருந்து எடுக்கும்
மின்சாரத்தின் அளவு அதிகம். 
இப்போ கொஞ்ச காலமாக சொல்லிக் 
கொண்டிருக்கிறார்கள்.. அந்த அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரின் கனம்.. 
பூமியின் சுழற்சி அச்சை கொஞ்சமாக 
சரித்திருக்கிறதாம். பூமி சுழலும்
வேகமும் அந்த அளவுக்கு இத்தனூண்டு குறையுதாம்..
 
 
 
அப்புறம் சீனாவின் மலைத்தொடர்களுக்கு நடுவிலிருந்து வினோதமான ஒரு சப்தம் வரத்தொடங்கி இருக்கிறதாம்.
அதை ஒரு பறவையின் சப்தம் என்று சீன அரசு அறிவித்தப் பிறகும் மக்கள் அதை நம்பவில்லையாம். சிலர் அந்த மலையை
நோக்கி பயணிக்கிறார்கள். எல்லா இடங்களிலும் அந்த மலையின்
சப்தம் அவர்கள் கைபேசியில் பதிவாகி எதிரொலிக்கிறது.
உலகின் மிகப்பெரிய விண்வெளித்தளம்.. ஏலியன் ஸ்டேசனில்இருந்து இவர்கள் அனுப்பிய சிக்னலை ஏலியன்ஸ் கேட்டு
இருக்கலாம். ஏலியன் வந்திருக்கலாம். ஏலியன்ஷிப் இறங்கி இருக்கலாம்.. இப்படியாக ஏகப்பட்ட ஏலியன் கதைகள் ஒரு
பக்கம். இன்னொரு பக்கம் அவர்கள் இதுவரை நேரில் கண்டிராத டிராகனின் சப்தம் தான் என்று சொல்கிறார்கள்.
மலையடிவாரத்தில் வசிக்கும் முதியவர்கள் இம்மாதிரியான ஒரு சப்தம்.. ஒலி அலையை இதுவரை தாங்கள் கேட்டிருக்கவில்லை
என்று சொல்வதை நம்ப வேண்டும்.
சரவணா…
இப்படியாக சீனா.. தான் கட்டி இருக்கும் பெரும் சுவரை இடித்துக்கொண்டு ரொம்பவும் தான் ஆட்டம் போடுகிறது.
டிராகுலா… ஆட்டம்

..
(என்ன திடீர்னு சீனா பக்கம் போயிட்டீகனு
கேக்காதீக. நம்ம ஊரு செய்தியைப் பேசிப்பேசி ரொம்ப போரடிக்குதுங்க்க்க்கே..)


Saturday, August 15, 2020

இந்திய தேசியக்கொடியின் பயணம்

 கொடி எண்: 1

 

ஆக 07, 1906ல் கொல்கொத்தா க்ரீன்பார்க்கில் ஏற்றப்பட்ட கொடி.

 

கொடி எண்: 2

 

1907ல் பாரீசில் Madame Coma ஏற்றிய கொடி.

கொடி எண் : 3

அன்னிபெசண்ட் அம்மையாரும் லோகமான்ய திலக் அவர்களு 1917 ஏற்றிய கொடி.

கொடி எண்: 4

1921ல் விஜயவாடா காங்கிரசில் இளைஞர்கள் கொண்டுவந்தக் கொடி. ஆரஞ்சு இந்துக்களையும் பச்சை இசுலாமியர்களையும் குறிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்ட காந்தியடிகள் இந்து இசுலாமியர்கள் அல்லாத இந்தியர்களை நடுவில் வெள்ளையாக சேர்க்க சொல்கிறார்! கொடி எண் 5ஐப் பாருங்கள்!

கொடி எண்: 5

  1931ல் கொடியில் வெள்ளை நிறம் இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் நடுவில் வந்து விடுகிறது. காந்தியின் இராட்டை வெள்ளை நிறத்தின் மீது

ஏற்றி வைக்கப்பட்டு இராட்டை சுழல ஆரம்பிக்கிறது.

கொடி எண்: 6

ஜூலை 22, 1947 ல் இந்திய தேசியக்கொடி காந்தியின் இராட்டை சின்னத்தை அகற்றிவிட்டு அசோகரின்

தர்ம சக்கரத்தை கொண்டு வந்து கொடியின் மையத்தில் வைத்துவிடுகிறது. 

இப்படியாக தர்மசக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.

நியாயம் தர்மங்கள் எல்லாமே ஏன் வெள்ளை நிறத்தில்

.. வெள்ளை நிறம் யாரை அடையாளப்படுத்துகிறதோ

அவர்களுக்கு மட்டும் தான் தர்மசக்கரம்.. கட்டுப்படுத்தும்

என்பதாலா..

அல்லது தர்மசக்கரத்தை மூவண்ணங்களுக்கும் மையமாக்கியதும் அதை நோக்கிய விடுதலையும் தான்

தேசியக்கொடி முன்வைக்கும் விடுதலை அடையாளமா..

..ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை.

இப்படியாக தேசியக்கொடி இன்றைய வடிவத்தைப்

பெற்றுவிட்டது. இதை மாற்ற வேண்டும் என்று இன்றுவரை

யாரும் குரல் கொடுக்கவில்லை!  இப்படியாக தேசியக்கொடி

காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெய் ஹிந்த்.

ஜனகண மன.


Thursday, August 13, 2020

மாபெரும் தமிழ் கனவு

 

சூடான விவாதங்கள்..
இந்து தமிழ் திசையிடம் கேட்க வேண்டிய 
கேள்விகளை என்னிடம் கேட்டால்...??!?!. 
புத்தகம் விற்பனை அமோகமாக நடந்திருக்கிறது..
 சரவணா... 
 புத்தகம் வாங்கினால்.. வாசித்து தான் ஆகவேண்டும்
 என்ற கட்டாயம் இல்லை.. 
அப்படியானால் ஏன் புத்தகம் வாங்கினார்கள் 
என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது.. 
இது ரொம்ப நல்லா இருக்கு சரவணா.
 
சும்மா., பயமில்லாமல் கேட்டுத்தான் பாருங்களேன்
 
 https://youtu.be/T_LxTQVIzKU
 

Saturday, August 8, 2020

கொரொனாவில் மறைந்திருக்கும் அரசியல்

கொரொனாவுக்குள் மறைந்திருக்கும் 
உயிர்க்கொல்லிகள்
EIA 2020.. & தேசியக்கல்விக்கொள்கை SGD4 
 
இந்த இரண்டும் நம் மண்ணையும் 
மனிதர்களையும் நேரடியாக தாக்கும் 
அதிகாரமிக்கவை.
நாடாளுமன்றத்தில் பேசி விவாதித்து முடிவு
செய்ய வேண்டியவற்றை எல்லாம் ஊரடங்கு
காலத்தில் அவசரம் அவசரமாக
  சட்டமாக்கிவிட துடிக்கிறது அரசு..
சமஸ்கிருதம் வந்துவிட்ட தாக்கும் என்று
ஒற்றை வாலைப் பிடித்துக்கொண்டு 
தொங்கும் சமாச்சாரமல்ல
 இந்த தேசியக்கல்விக்கொள்கை.
கல்வி நம் அடிப்படை உரிமை 
என்பதிலிருந்து மாற்றப்பட்டு 
கல்விக்கு வழங்கப்படும் அரசுமானியங்களை
புதைத்துவிட்டு எல்லாமோ வணிகம்.. என்ற
சந்தைக்கலாச்சாரத்திற்கு மாற்றுகிறது..
இதில் நம் கலாச்சாரத்தை மறந்துவிடவில்லை
என்ற பாசாங்கு காட்டுவதற்கு ஆயக்கலைகள் 
64 கற்பிக்கப்படும் என்று வசனம் பேசுகிறது.
நாளந்தாவை அழித்தவர்கள் 
நாளந்தா பல்கலை கழகத்தை 
முன்னுதாரணமாக பேசுகிறார்கள்!
 
EIA 2020..
இயற்கை வளத்தின் மீது இந்த மண்ணில்
வாழும் ஜீவராசிகளுக்கான உரிமையைப் பறிக்கிறது.
(அதுவும் கொரொனா காலத்தில்..!)
குடிமக்களின் கருத்து கணிப்பு தேவையில்லை..
உங்கள் நிலத்தில் உங்கள் நதியில்
என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கும்
அதிகாரம் உங்களுக்கு இல்லை!
இதில் ரொம்பவும் சாதுரியமாக
தொழில் பட்டியலை மாற்றி இருப்பதன் மூலம்
 எந்த வல்லுனரும் ஆய்வு நட த்தி 
ஒப்புதல் தரவேண்டிய அவசியமிருப்பதை 
அபகரித்திருக்கிறது.
மேலும் 25 நச்சுத் தொழில்களுக்கான 
30 விதிகளைத் தளர்த்தி இருக்கிறது. 
( 30 conditions that will dilute the
Notification for over 25 toxic industries)
 
பஞ்சாபில் ஒரு கேன்சர் டிரெயின் 
ஓடிக்கொண்டிருக்கிறது
அதைப் பற்றி நமக்குத் தெரியாது.
கேரளாவில் நிலச்சரிவு.. உயிருடன் 
மண்ணில் புதைந்துப்போன மனிதர்கள் 
என்ற கொடூர நிகழ்வை
தொடர்மழையால் கேரளாவில் நிலச்சரிவு.. 
உயிர்ப்பலி என்ற ஒற்றைச்செய்தியில் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.
ஏன் தொடர்கின்றன இந்த நிலச்சரிவுகள்?
நம் மேற்குத்தொடர்ச்சி மலையின் பாறைகள் 
ஆட்டம் காணும் அளவுக்கு என்ன நடக்கிறது 
இந்த மண்ணில்?
இமயமலையை விட பழமையான 
நம் மேற்குத்தொடர்ச்சி மலையின்
 இருப்பு பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
Ecological problem என்பது குளிரூட்டப்பட்ட
அறையில் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுடன்
பேசிவிட்டு கலைந்து போகும் விடயமல்ல.
இது நம் வாழ்க்கை.
நமக்கு என்ன வேண்டும் ..?
என்ன வேண்டாம்!
எது வளர்ச்சி? எது முன்னேற்றம்?
இதை எல்லாம் இனி நாம் திவீரமாக
மீள்வாசிப்பு செய்தாக வேண்டும்..

Thursday, August 6, 2020

நரேந்திரமோதியும் பிரதமர் மோதிஜியும்


அயோத்தியில் ராமர்கோவில் கட்ட
நாள்செங்கல் வைத்தாகிவிட்டது.
இனி.. எல்லோருக்கும் சுபிட்சம்!
இந்த விழாவில் மோதி என்ற தனிநபர்
கலந்து கொண்டிருந்தால் அதைப்பற்றி
பேசுவதற்கில்லை. மோதி என்ற தனிநபர்
(இந்து மத நம்பிக்கையாளர்) கலந்து கொள்கிறார் என்பதற்குப் பதில் அழைப்பிதழில் தெளிவாக
அச்சிடப்பட்டிருக்கிறது..
“ நரேந்திர மோதி.,“பிரதமமந்திரி”யாகவே
அழைக்கப்பட்டு, கலந்து கொண்டிருக்கிறார்.
வரலாற்றில் இந்தியாவின் முதல் பிரதமர்
பண்டித ஜவஹர்லால் நேரு காலத்திலும்
இம்மாதிரியான ஒரு நிகழ்வு நடைபெற்றது.
சோம நாதர் கோவில் திறப்புவிழாவில்
அன்றைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்
கலந்து கொள்வதாக முடிவு செய்துவிட்டார்.
நேரு அழைப்பை ஏற்கவில்லை! அதுமட்டுமல்ல..
அவர் குடியரசு தலைவருக்கு எழுதிய
கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
““I confess that I do not like the idea of your associating
yourself with a spectacular opening of the Somnath Temple.
This is not merely visiting a temple, which can certainly be
done by you or anyone else but rather participating in a
significant function which unfortunately has a
number of implications.”
அத்துடன் நேரு மாநில முதல்வர்களுக்கு கடிதம்
அனுப்புகிறார்.
இந்த விழா அரசு விழா அல்ல,
இதற்கும் நடுவண் அரசுக்கும் எவ்விததொடர்பும்
கிடையாது. மேலும் இந்தியா மதச்சார்பற்ற நாடு
என்பதற்கு தடையாக எதுவும் நிற்கமுடியாது "
என்றுகடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கொசுறு செய்தி..
அயோத்தியில் கோவில் கட்டியே தீருவேன்
என்று சூளுரைத்த அத்வானியை விழாவில்
காணவில்லை.
குடியரசு தலைவர் .. அழைக்கப்படவில்லையா
அல்லது வரவில்லையா... தெரியாது!

அயோத்தி இராமன் எப்போதுமே
இந்துக்கடவுளாக மட்டுமில்லாமல்
இந்திய அரசியலாகிப்போனதையும்
சேர்த்து வாசிக்க வேண்டி இருக்கிறது.
சோமநாத்கோவில் கட்டியதும்
இன்று உச்சநீதிமன்ற வாசல்வரை போய்
மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட இருக்கும்
அயோத்தி ராமர்கோவிலும் ஒன்றல்ல. !