Friday, March 10, 2017

நீல. பத்மநாபன் - மீள்வாசிப்பு



எழுபதுகளில் வெளிவந்த மகத்தான படைப்புகளில்
ஒன்றாக பலராலும் பேசப்பட்ட நாவல் நீல. பத்மநாபனின்
"தலைமுறைகள்" . 80 களில் கல்லூரிகளில் பல கருத்தரங்குகளில் விவாதிக்கப்பட்ட நாவலும் இதுதான்.
மதுரை பல்கலை கழகத்தில் நீல. பத்மநாபனின் படைப்புகள்
குறித்து ஒரு நாள்  சிறப்பு கருத்தரங்க நடந்தப்போது
 நான் முதுகலை முதலாமாண்டு மாணவி.
 நீல. பத்மநாபன் வந்திருந்தார். அன்று அவர் படைப்புகள் குறித்து
 என்ன பேசினார்கள் என்ன விவாதித்தார்கள்
என்பதை எல்லாம் விட இன்றுவரை என் நினைவில்
 மறக்காமல் இருப்பது அன்று அவர் அணிந்திருந்த
 நீலநிறக் கலர் சட்டையும் அதற்கு மேட்சான பேண்ட்டும்
 குறுந்தாடியும்  ஒல்லியான தீர்க்கமான பார்வையுடன் கூடிய முகமும்...ம்ம்.ம்ம். .. இதெல்லாம் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அப்படியே நினைவில் இருப்பதற்கு காரணம்...
 சரி அதெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்.
தலைமுறைகளின் உண்ணாமலை ஆச்சி மாதிரி நானும்
எதையோ சொல்ல வந்து வேறு எதையோ
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அப்போது எங்கள் பேராசிரியராக இருந்த  தி.சு. நடராசன் சார் அவர்கள் தலைமுறைகள் நாவலை கார்க்கியின் நாவலுடன் ஒப்பிட்டெல்லாம் விதந்தோதி ஆகச்சிறந்த ஒப்பியல் ஆய்வெல்லாம் செய்திருந்தார்.
 எனவே எவ்வித மறுப்புமின்றி தலைமுறைகள் நாவலைக்
 கொண்டாடுவது எங்களின் கடமைகளில் ஒன்றாக மாறிப்போனது.
மீண்டும் தலைமுறைகள் வாசித்தேன். பள்ளிகொண்டபுரம் நாவலில் அன்ந்தநாயரின் கதைப்பாத்திரம் அளவுக்கு
திரவியம் வளரவில்லை.
உண்ணாமலை ஆச்சி மட்டுமே தலைமுறைகளின்
பக்கங்களில் நம்முடன் பயணிக்கும் கதைப்பாத்திரமாக இருக்கிறார். மற்றவர்கள் எல்லோரும் நிழல் கதைப் பாத்திரங்கள் மட்டும் தான்.
அதிலும் தலைமுறைகள் நாவலில் நாகு என்ற பெண்ணைச் சுற்றி
அவளுக்கு அவள் கணவனால் இழைக்கப்பட்ட கொடுமை
தலைமுறைகளின் மாறிவரும் மதிப்பீடுகளைப் பற்றியதாக
இருந்தாலும் கூட முக்கியமான கதைப் பாத்திரமான நாகு
எந்த இடத்திலும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை!
அவளைப் பற்றிய பிரச்சனைகள் குறித்து கதையோட்டத்தில்
அவள் தம்பியாக வரும் திரவியம் தான் பேசிக்கொண்டே இருக்கிறான். உண்ணாமலை ஆச்சி தலைமுறைகள் கடந்த
சம்பிரதாய மீறல்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் .
பள்ளிக்கொண்ட புரத்தில் கதை உத்தியும்
அனந்தநாயரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போன அவர் மனைவி கார்த்தியாயினியும் பிற  கதைப் பாத்திரங்களும் தலைமுறைகளைத் தாண்டி நம் வாசிப்பு அனுபவத்தில் நிரந்தரமாக நம்முடன் பயணிக்கிறார்கள்...
தலைமுறைகள் நாவலில் கதை சொல்லியாக நீல. பத்மநாபன்,  பள்ளிகொண்டபுரத்தில்  படைப்பாளராகி
கதைப் பாத்திரங்களில் உயிர்ப்புடன் ...
.
எனவே அப்போதும் சரி..இத்தனை ஆண்டுகள் கடந்து
 இரு நாவல்களையும் மீள்வாசிப்பு செய்தபோதும் சரி..
பள்ளிகொண்டபுரம் நீல.பத்மநாபன் ... பசுமையாக.


7 comments:

  1. ....இரண்டு நாவல் களுமே வாசகர்களை கவர்ந்த சிறந்த நாவல்கள் தாம். இரண்டிலுமே நீல பத்மநாபன் தன் திறமையைக் காட்டி பாத்திரங்களை படைத்திருக்கிறார் - என்பது என் கருத்து.

    ReplyDelete
  2. இரண்டுமே அருமையான நாவல்கள்தான்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. நல்ல நாவல்களை மீளப்படிப்பது சுகமே

    ReplyDelete
  4. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    ReplyDelete
  5. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    ReplyDelete
  6. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    ReplyDelete
  7. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    ReplyDelete