Wednesday, June 7, 2023

ஜெயமோகனின் அறம் (கதைகள்)

 எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வாசித்துமுடித்தேன்.



ஜெயமோகன் விமர்சனங்களுடன் கூடிய
தவிர்க்க முடியாத மாபெரும் எழுத்தாளுமை
என்பதை மீண்டும் மீண்டும் .. ..
அறம் கதைகளில் யானை டாக்டர் அனைவராலும்
அடிக்கடி பேசப்படுகிறார். யானை டாக்டரை
நினைக்காத ஜெ.மோ வாசகர்கள் இருக்கவே முடியாது.
யானை டாக்டர் கொண்டாடப்பட்ட அளவுக்கு
யானை டாக்டர் ஜெ. மோ வட்டத்தில் நினைவு
கூரப்பட்ட அளவுக்கு ,
'வணங்கான்' ஏன் நினைக்கப்படவில்லை?
வணங்கானும் யானை டாக்டர் எழுதப்பட்ட
அதே அறத்தின் பக்கத்தில்தான் வணங்கானாக
நம் சமகாலத்தின் ஒரு மாபெரும் வரலாற்று நாயகனாக
கம்பீரமாக நிற்கிறான்.
குமரி, நெல்லை மாவட்டக்காரர்களுக்கு
வணங்கான் மாபெரும் சரித்திர புருஷன்.
ஆனால் யானை டாக்டர் தான் நினைக்கப்பட வேண்டும்.
காரணம் அந்நியன் திரைப்படத்தில் பேசப்பட்டவைதான் முக்கியம்.
யானை டாக்டர் நல்லவர்தான். சூழலியல் முக்கியம்தான்,
அதெல்லாம் இல்லை என்று சொல்லவில்லை.
அதைக் கொண்டாடும் மன நிலையையும் சொல்லவில்லை.
அதை மட்டுமே கொண்டாடிக்கொண்டிருக்கும்
மன நிலைக்குள் இன்னும் இருக்கிறது
எழுதப்படாத வணங்கானின் வரலாற்றுப் பக்கங்கள்.
வணங்கான்..அளவுக்கு சமகால இந்திய வரலாற்று
அரசியலை ஜெ.மோ வேறு எந்தக் கதையிலும் எழுதி
இருக்கிறாரா என்று தெரியவில்லை.ஆனாலும்
வணங்கான்... சாய்ஸ்லில் விட்டுவிட
வேண்டியவனாகவே இருக்கிறான்.
மீண்டும் மீண்டும்
யானை டாக்டரை நினைப்பவர்களுக்கு
வணங்கான் ஏன் நினைவுக்கு வருவதில்லை
என்பதில்
இப்போதும் இருக்கிறது
என்னால் புரிந்து கொள்ள முடியாத
வாசகவெளி.
அவரவருக்கு அவரவர் "அறம்"
(சரவணா.. புரிந்து கொள்ள முடியாத
என்பதில் இருக்கிறது
எழுத முடியாதப் புரிதல்களும் வாசகவெளியும்.)
வணங்கான் பக்கங்கள் அறம் கதை தொகுப்பு
வாசிப்பை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது.
நன்றி ஜெ.மோ.