Sunday, August 16, 2026

Governor The Saviour

 


பொருளாதாரம் என்பது என்ன?

ஒரு நாட்டில் நடக்கும் போர் நம்மை எப்படி பாதிக்கும்?

ஒரு நாடு பிரிந்தால் / உடைந்தால் அது நம்மை எப்படி பாதிக்கும்?

இதெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள பெரிய்ய பொருளாதார மேதையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை! 


விடுதலைக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட சவால்களில் மிகவும் முக்கியமானது 1991ல் எதிர்கொண்ட திடீர் பொருளாதார சரிவு. 


காரணம்:

 1)அரபு நாடுகளில் யுத்தம் 🔥


2);சோவியத் யூனியன் உடைந்தது. அதனால் சோவியத்து டன் இந்தியா வைத்திருந்த இந்திய ரூபாயிலான பண பரிமாற்றம் முடிவுக்கு வருகிறது.


இந்திய அரசு? 

அப்போது தடுமாறிக் கொண்டிருந்தது. 

இந்த அசாதாரணமான நெருக்கடியை ரிசர்வ் வங்கி கவர்னர் வெங்கிடரமணன் எதிர்கொண்ட விதம்..

 

நம் இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நாட்கள்..

இதை எல்லாம் பாருங்கள்.


அசல் ஹீரோக்கள் யார்?னு புரியவரும்.


🔥

90 களில் நான் வங்கியில் export dept ல் இருந்தேன். இந்தச் சூழல் என்ன என்பதை அறிவேன். இந்த திரைப்படம் என் அந்த நாட்களை நினைவூட்டியது. மாலை 5 மணிக்கு ரிசர்வ் வங்கிக்கு எங்கள் வங்கியின் அன்றைய இருப்பை உறுதி செய்யும் வேலை. எவ்வளவு டென்ஷன். நம்பர்கள் எல்லாம் டாலர் பில்லியனில்! 

இப்போ நினைத்தாலும் கை நடுங்குகிறது..

அந்த இக்கட்டான இருண்ட நாட்களில் நம்மைக் காப்பாற்றிய silent saviour  அவர்தான்.

🔥

இதில் இன்னொரு முக்கியமான அரசியல் செய்தி.. வாஜ்பாய் அவர்கள் அரசியல் / எதிர்கட்சி என்பதை எல்லாம் தாண்டி நம் தேசம் தான் முக்கியம் என்று கை கொடுத்த தார்மீகம்.

🔥



.

No comments:

Post a Comment