ஓர் ஆணை சண்டியர் என்று சொன்னால் ஆண்கள் அதை
பெருமையாக கருதுகிறார்களா என்னவென்று எனக்குத் தெரியாது
. ஆனால் ஒரு பெண்ணை எவராவது " சண்டிராணி "
என்றழைத்தால் மெல்லிய ஒரு புன்னகை
எங்கள் முகத்தில் எட்டிப்பார்க்கிறது.
பெருமையாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல்
சொல்லிச் செல்கிறது..
வாழ்க சண்டிராணியர்.
சண்டிராணி என்று சொன் னவுடன் எனக்கு நடிப்பு அரசி பானுமதி அம்மா
நினைவுக்கு வருகிறார் உங்களுக்கு?!!
. திரையுலகில் எம்ஜிஆரிடன் அவர் சவால் விட்டதும்
கொடுத்த சம்பள பணத்தை திருப்பி அனுப்பியதும்சினிமாக் கதையல்ல.
நிஜம். அதற்காக பானுமதி அம்மாவை எம்ஜிஆர் அவர்கள்
சண்டிராணி என்று அழைக்கவில்லை!
சண்டிராணி மீது கொண்ட அச்சமா மரியாதையானு தெரியல!
சண்டிராணி என்ற திரைப்படத்தை எடுத்தவர் பானுமதி.
அவரே அதில் இரட்டை வேடத்தில் நடித்தார். அதில் ஒரு வேடம் சண்டிராணி!
இந்த சண்டிராணி தான் இசையுலக மேதை எம்.எஸ், விசுவநாதனை இசையமைப்பாளராக இனம் கண்டு தன் சண்டிராணி
படத்தில் இசையமைக்க அழைத்தவர். அதுமட்டுமல்ல,
எம் எஸ் வீ யுடன் ராமமூர்த்தியையும் இணைத்து
இசையுலகில் எம் எஸ் வி இராமமூர்த்தி இரட்டையர்களை
சண்டிராணி படத்தில் கொண்டுவந்தவர்.
சண்டித்தனம் / சண்டித்தனமுள்ளவன் /
சண்டிமாடு / சண்டியன்/ சண்டிவாளம்
சண்டீனம்/ சண்டு / சண்டேசுரநாயனார் / சண்டேசுரப்பெருவிலை
சண்டேசுரர்/ சண்டேஸ்வர நாயனார்/ சண்டை
சண்டைக்கப்பல்/ சண்டைக்கழைத்தல்/
சண்டைக்காரன்/சண்டைக்காரி
சண்டியர்/ சண்டிராணி...
வாழ்க சண்டிராணியர்..
நளினத்தினும் கம்பீரம் கூடுகையில்
ReplyDeleteபார்வைக்கு அப்படித் தோன்றும்
மனத்தளவில் அதிகத் தைரியம்
இல்லையெனில் கம்பீரம் கூடுவதற்கு
வாய்ப்பில்லை
ஆம் கம்பீரமும்,தைரியமுமே
சண்டித்தனம் என்பது என் கருத்து
ஆம், சரியான விளக்கம். மிக்க நன்றி
Deleteநினைத்ததை முடித்தவர்...
ReplyDeleteஆம், அதற்காக எதிர்க்க வேண்டியவர்களை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டவர். நன்றி தனபாலன்.
Deleteசண்டித்தனம் செய்வதற்கும் ஒரு "தில்" வேண்டும்.
ReplyDeleteஆங்.. அதுதான் . மிக்க நன்றி
Deleteசண்டிராணி - பானுமதி அவரின் சில படங்கள் பார்த்ததுண்டு. சண்டிராணி பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது உங்கள் பதிவு கண்டு!
ReplyDeleteநானும் எப்போதோ பார்த்தது. ஆனால் சண்டிராணி என்ற சொல் இப்படம் வெளிவந்தப் பிறகு மிகவும் பரவலானது . பானுமதிக்கும் அப்பெயர் பொருத்தமாக இருந்தது. மிக்க நன்றி
Delete