Wednesday, July 31, 2019

எந்தப் பெண்ணுக்கு 3 நாட்கள் விடுமுறை??


Imageஇதைப் பேசி இருப்பவர் என் அன்புக்கும்
 மதிப்புக்கும் உரியரவிக்குமார் எம்.பி. 
(திமுக எம். பி என்று சொல்லவா அல்லது வி.சி. எம்.பி
என்று சொல்லவா.. விடுங்கள். எப்படியானாலும்
 அவர் தமிழகத்தின் எம்.பி. அதுபோதும்!)

இவர் எந்தப் பெண்களுக்காக
 இதைப் பேசி இருப்பார் என்று
யோசித்து யோசித்து இந்த மழை நேரத்திலும்
 மண்டைக்காய்கிறது!

வர்க்க ரீதியாக பேசி இருந்தாலும் சரி,
சாதி ரீதியாக பேசி இருந்தாலும் சரி..
இவர் எந்தப் பெண்களுக்காக பேசி இருக்கிறார்?

வரப்போரத்தில் பிரசவித்து
கதிர் அறுக்கும் அருவாளால்
 தொப்புள் குடியை அரிந்த அவள்
ஓடையிலே கால்கழுவி
ஓடிக்கொண்டிருக்கிறாள்..
அவளுக்காகவா..  பேசி இருக்கிறார்???
இல்லை…
பட்டுப்போன்ற சானிடெரி நாப்கினைத்
தொட்டுப்பார்க்கும் ஆசையில்
அம்மாவின் கிழிந்தப் புடவை
தொடைகளில் அறுக்க
குனிந்து வளைந்து
மாடிப் படிகளில் ஏறி இறங்கி
பத்துப்பாத்திரம் கழுவி
வீடு வீடாக ஓடிக்கொண்டிருக்கும்
அவளுக்காக பேசி இருக்கிறாரா..?
இந்த 3 நாட்கள் யாருக்காக?

யார் யாருக்கு அறிவித்த 3 நாட்கள்?
யார் வீட்டில் இந்த 3 நாட்கள்?
யாருக்காக பேசுகிறோம் இந்த 3 நாட்களை????
ரவிக்குமார்.. யாருக்காக பேசி இருப்பார்
அந்த 3 நாட்கள்  விடுப்…..பை…..

Sunday, July 28, 2019

நனைந்த சொற்கள்

Thanks to Sri N Srivasta .. frm his facebook page dated 24 July 2019
The word 'gila' of Faarsi origin is commonly used in Hindi and Urdu to mean wetness. The word also can be interpreted as a complaint. Rain causes havoc whether in shortage or excess. Not just people and property but even words get wet in the rain says this poem in Tamil by Poet #Puthiyamaadhavi_Sankaran which is reproduced here with prior permission from the poet together with an English translation by moi:
கண்ணாடி சன்னல்களில் பட்டுத்தெறிக்கும் 
பெருமழையின் அதிகாரம்
 குடைக் கம்பிகளை வளைத்து சிதைக்கிறது. 
நினைவுகளின் சாபம் துரத்தும் மழைக்காலத்தில் 
மின்னலின் சுமை தாங்காமல் 
சிவலிங்கம் இரண்டாகப் பிளக்கும் ஓசையில் 
தண்டவாளங்கள் அதிர்கின்றன...
மெல்ல எட்டிப் பார்க்கிறேன்.
இருள் கவிந்திருக்கிறது.
மழையில் நனைந்த சொற்களை
தேகத்தின் சூட்டில் காய வைக்கிறேன்.
நாளை உலர்ந்த சொற்களுடன்
விடியும் பொழுதுக்காய்.
The power
of the heavy rain
scattering off
glass window panes
bends and distorts
the spokes of the umbrella.
When the Shivling
breaks into two
unable to bear
the burden of lightning
in rainy season
chased by the curses
of memories,
rails reverberate.
I peep out slowly.
Darkness has gathered.
I dry the words
dampened by rain
in body heat
for tomorrow
to dawn with
dried words.
~Sri 11:35 :: 23.07.2019 :: Noida

Friday, July 26, 2019

COW EXHALES OXYGEN


Image result for cow exhale oxygen
பசுமாடு ஆக்சிஜனை வெளியிடுகிறது.
பசுமாட்டைத் தடவினால் சுவாசப்பிரச்சனை இருக்காது.
பசுமாடு கூட இருந்தா காச நோய் கூட குணமாகிடும்

ட்டேய்  ட்ட்டேய்ய்ய்ய் சரவணா….
இந்த மாதிரி ஆட்களை எங்கிருந்துடா தேடிப் பிடிச்சி
மா நிலங்களுக்கு முதல்வராக்குகிறீங்க!
தாங்க முடியலடா …

பசுமாடு சமஸ்கிருதம் தமிழ் பேசுகிறது என்று
சொன்னீர்கள்.. எதோ கனவு கண்ட தாக நினைத்துக் கொண்டோம்.
எதோ ஒரு நதி நீரைப் பருகினால் பெண்களுக்கு
சுகப்பிரசவமாகிவிடும் , ந்னோ சிசரியன் என்று
சொன்னீர்கள்.. வடிவேலு காமெடி மாதிரி ரசிச்சிட்டு
போயிட்டோம்
இப்போ உங்க பிரச்சனை என்ன?
பசுமாட்டை ராஷ்டிர மாதா என்று அறிவிக்கனும்..
அவ்வளவுதானே.. தாராளமா சொல்லிட்டுப் போங்க.
பசுமாடு ராஷ்டிரமாதா வாகிட்டா காளைமாடு
ராஷ்டிர பிதா ஆகிவிடும்!
எருமை மாடு ராஷ்டிர தாத்தா ஆகிவிடலாம்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டாம்.
பசுமாடுகளை வைத்து நேரா ஆக்சிஜன் கொடுக்கலாம்.
(உங்களுக்கு மட்டும்.. !)
அதுக்காக பசுமாடு ஆக்சிஜனை சுவாசித்து
ஆக்சிஜனை வெளியிடுகிறதுனு.. சொல்லி
பசுமாடுகளை குழப்பி விடாதீர்கள்..
பசுமாடுகள் சாதுவானவை.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
நாடும் தான்.
Image result for cow exhale oxygen


·         உத்தரகாண்ட் மா.
·          நில பிஜேபி முதல்வர் திரிவேந்திரசிங்க்
·         ராவத் டேராடூனில்
·         Trivendra Singh Rawat said cows are the only animal that can exhale oxygen
·         The Uttarakhand CM also said massaging cows can cure breathing problems
·         He went on to say that living in close proximity with cows can cure tuberculosis.
·         Uttarakhand Animal Husbandry Minister Rekha Arya, who said the cow is the
·          "only animal that not only inhales oxygen, but also exhales it".
·          Her remarks came on the floor of the Uttarakhand Assembly
·         on Wednesday when a resolution was passed,
·         seeking the status of "rashtra mata" (mother of the nation) for the cow.