Wednesday, March 29, 2017

இது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்

Image result for மனுஷ்யபுத்திரன்

எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா
 அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று
 குழப்பமாக இருக்கிறது....
ச்சே சே.. இதெல்லாம் என்ன குழப்பம்.
அப்படி எல்லாம் உங்களை விட்டுவிட மாட்டோம் ஹமீது.

. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். 
இது.. இது சரியான கேள்வி ம.பு
. இன்றுவரை உங்களைப் போன்று நம் சமூகத்திற்காக
மொழிக்காக உழைத்தவர்கள் வாடகை வீட்டில்
 இருக்கிறார்கள் என்பதைக் கூட
என் போன்றவர்களுக்கு நம்ப முடியவில்லை!
அதுவும் அண்மை காலங்களில் தொலைக்காட்சிகளின்
 ஊடாக நீங்கள் சார்ந்து பேசும் அரசியல் கட்சி உங்களை
இன்றுவரை வாடகை வீட்டிலா வைத்திருக்கிறார்கள்!
 என்ன கொடுமை ம.பு!
இதை வன்மையாக கண்டிக்கிறேன் ம.பு.

இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!

டியர் ம.பு.... நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பிஜேபி
அடுத்து ஆட்சிக்கு வந்துவிடும் போலிருக்கிறதே! நீங்கள் குறிப்பிடும் மேற்கண்ட சொற்றொடர்கள் அவர்கள் சொல்வது போல இருக்கிறதே..
மேலும் நீங்கள் சார்ந்திருக்கும் திமுக வாகட்டும்
திராவிட அரசியலாகட்டும்..
தொடர்ந்து ஆட்சி செய்த தமிழகத்தில் இந்த நிலைமையா?
 நீங்கள் திராவிட அரசியலையே நடுத்தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டீர்கள். என் போன்றவர்களுக்கு
அது கொஞ்சம் மனக்கஷ்டமாக இருக்கிறது ம.பு.

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை 
கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது
 முதல் முறையாகக் கேட்கிறேன்
 ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
நான் - நாமாக மாறியதும்
என் - எங்களாக மாறியதும்...
சூப்பர். இது .. #இது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்.#

உங்களுக்கு விரைவில் வேளச்சேரியிலோ அல்லது
 போயஸ் கார்டனில் ரஜினிகாந்தி வீட்டுக்கு அருகிலோ
 சொந்தமாக ஒரு வீடு அமையவேண்டும்.
வீடு மனை அமைய சனிப்பகவானை உங்களுக்காக வழிபடுகிறேன்.

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

4 comments:

  1. வஞ்சகப் புகழ்ச்சி???

    எனக்கென்னவோ..
    (நீங்கள் சொல்வது போலவே) ம.பு மேல் நல்ல உணர்வுகளே வருவதில்லை..
    இந்த மாநிலத்தில் பல லட்சக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்கள் வாழத்தான் செய்கிறார்கள்..
    எழுத்து என்னும் அலிபாபா விளக்கை இவர் இப்படி பயன்படுத்துகிறார்....

    சுய கழிவிரக்கம் ஒரு அளவுக்கு மேல் போனால்
    வெறுப்பைத்தரும்...

    ReplyDelete
  2. இவர் இஸ்லாமியர் என்பதால் வீடு தர மறுத்து இருக்க மாட்டார்கள் இவ்ர ஒழுங்காக வாடகை தருவாரா அல்லது தான் சார்ந்திருக்கும்கட்சியினர் போல அடவாடித்தனம் பண்ணுவார என்று நினைத்து தராமல் இருந்து இருப்பார்கள்

    ReplyDelete
  3. //ஓம் சனீஸ்வராய வித்மஹே
    சாயாபுத்ராய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்//

    இது இன்னா கண்றாவி? ஓஹோ. அரபு மொழில ம.பு வை திட்டுறீங்களா? ஆகட்டும்.

    எரியிற நெருப்பில் எண்ணைய ஊத்தறதும், வெந்த புண்ணில்
    வேள பாய்ச்சுறதும், செத்த பொணத்த அடிக்கிறதும் தப்பு.

    ReplyDelete
  4. மனுஷ்யபுத்திரனின் குற்றசாட்டு முற்றிலும் அரசியலே.
    பதிவர் இல்லை, பலர் மனுஷ்யபுத்திரனை போட்டு உருட்டுவதற்கு காரணம், அவர் இஸ்லாமிய மதவெறியர் கிடையாது, திமுகவை சேர்ந்தவர்.

    ReplyDelete