Saturday, March 18, 2017

மொழிக்கொள்கை




கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடகவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றிருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே ஒவ்வொரு மாநில மொழிக்கும் சம அந்தஸ்த்து என்றே சொல்லப்பட்டது.
நடைமுறை வேறாக இருந்தாலும்.

இந்த அறிவிப்புக்குப் பின் ஊடகங்களில் திடீரென இக்கருத்து
 பேசு பொருளாகி இருப்பது வரவேற்புக்குரியதுதான்.
ஆனால் இதைப் பற்றி பேசுபவர்களும் கருத்துரைப்பவர்களும்
 நடைமுறை சிக்கல் என்ன என்பதை ஏன் பேச மறுக்கிறார்கள்
 என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
 தேசத்துரோகி மாதிரி இனத்துரோகி என்ற பட்டம்
 கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் கூட காரணமாக
 இருக்கலாம். இதை எழுதுவதற்கு முன் நானும்
முன்னெச்சரிக்கையாக இரண்டு வரிகள்
 எழுத வேண்டும்.நான் தாய்மொழிக் கல்விக்கு
 எதிரானவள் அல்ல . எங்கள் வீட்டில் என் தந்தையார்
 எங்கள் அனைவரையும் தமிழ்வழிக் கல்வி கற்கவே
 ஏற்பாடு செய்தார்
 (அவர் தொண்டர் என்பதுகூட காரணமாக இருக்கலாம்!)

நடைமுறை சிக்கல்கள் :
The allocation of cadre officers to the various cadres shall be made by the Central
 Government in consultation with the State Government of the State Government concerned.
 The Central Government may, with the concurrence of the State Government
 concerned, transfer a cadre officer from one cadre to another cadre".
இதுதான் இந்த அரசு அலுவலர்கள் குறித்த இந்தியச் சட்டம்.
 All India Service Officers(IAS/IPS/IFoS) and other Central Government Group A Officers(IFS, IRS, IAAS, IRTS etc) பதவிகள் இந்திய நடுவண் அரசு நியமிக்கும் பதவிகள். இது வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோது பரந்துபட்ட இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவிகள். காலனி ஆத்கத்தின் நிர்வாக முறை வசதிக்கான பதவிகள்.
இப்பதவிகள் குறித்த சட்டதிட்டங்கள் எதுவும் இந்தியக்குடியரசான பிறகும்
மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் அடையவில்லை என்பதையும்
எண்ணிப்பார்க்க வேண்டும்..

எனவே இந்தியக் குடியரசு  அயல்மாநிலத்தவர் பணி புரிய வரும்போது சில விதிமுறைகளை அமுல்படுத்தி இருக்கிறது. அதாவது அயல்மாநிலத்தவர் தான் பணி செய்யும் மாநிலத்தின் மொழியை 6 மாதத்திற்குள் கற்றுக்கொள்ள வேண்டும்.
 அதற்கான பயிற்சி, உதவித்தொகை, நேரம் இத்தியாதி
எல்லாம் கூட ஒதுக்கப்படுகின்றன. ஆனால் நடைமுறையில்
 பிற மாநிலத்தவர் இன்னொரு மாநில மொழியை ஒரு கோப்புகளை வாசிக்கும் அளவுக்கு கற்றுக்கொள்கிறார்களா? அது எந்தளவுக்கு சாத்தியப்படும் ? என்பதையே நாம் சிந்திக்க வேண்டும்.
உதாரணத்திற்கு,
.  ஒரு தமிழர் மராட்டிய மாநில ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிகிறார்.மாநில மொழிக்கொள்கை படி அவர் மராட்டி மொழியைக் கற்க வேண்டும். சரி.. ஐஏஎஸ் படிச்சவருக்கு இன்னொரு மொழி கற்பது ஒன்றும் கடினமில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றலாகிப் போகிறார்.பஞ்சாபி கற்கவேண்டும்.!!
இப்படிப் பேச ஆரம்பித்தால் உடனே நடுவண் அரசு சொல்லுவார்கள்.. அதனால் தான் சொல்லுகிறோம் இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று.
இதுவும் இந்தி மொழி திணிப்பு என்ற  கட்டாய மொழித்திணிப்பின் இன்னொரு
வடிவமாகவே இருக்கும்.
அதுவும் சரியல்ல. அப்படியானல் என்ன செய்ய வேண்டும்?
கட்டாய மொழித்திணிப்பு, இந்தியாவின் இறையாண்மை, இந்திய தேசத்தில் வாழும் பல்வேறு (தேச )இன மக்களின் இறையாண்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு தீர்வு காண வேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால் தான் இதை அரசியலாக்கி ஓட்டுக்கான விலையாக்கிவிடக்கூடாது என்று கருதுகிறேன்
இப்பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதை முதலில் விட வேண்டும். இது குறிதது இந்திய மொழி அறிஞ்ர்களும் கல்வியாளர்களும் இணைந்துதீர்வு காணவேண்டும்

1.

2 comments:

  1. //இந்திய தேசத்தில் வாழும் பல்வேறு (தேச )இன மக்களின் இறையாண்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு தீர்வு காண வேண்டிய காலம் வந்துவிட்டது.

    இந்திய மொழி அறிஞ்ர்களும் கல்வியாளர்களும் இணைந்துதீர்வு காணவேண்டும்//

    அதெல்லாம் அவர்கள் தீர்வு கண்டுவிடுவார்கள். பிரச்சனையில்லை.
    ஆனால் தமிழர்களுக்கு, தமிழகத்துக்கு தீர்வு காண்பது என்பது தான் பிரச்சனையே.
    காரணம் தமிழர்களுக்கு தங்களது சொந்த மொழி தமிழ் மீது இஷ்டமில்லை. இந்தியாவின் மொழியான இந்தி மீது வெறுப்பு.
    அவர்களது கனவு மொழியே பிரிட்டிஸ் நாட்டவரது மொழி.

    ReplyDelete