என் எழுத்துகள்
குறித்து நான் பெருமை கொள்ள
வேண்டிய தருணமிது.
என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்
என் எழுத்துகளை
நானே ஆரத்தழுவி முத்தமிடுகிறேன்.
என் கண்கள்
குளமாகின்றன.
இதுமட்டும் ஏன் என்று தெரியவில்லை!
என்னைக் கள்ள
மவுனத்தில் கடந்து சென்றவர்களையும்
அவர்களின்
சகாயத்தை தங்களின்
ஆதாயங்கள் பொருட்டு
விட்டு விலகிவிட
முடியாத சில நண்பர்களையும்
நான் அறிவேன்.
அவர்கள் மீது
பரிதாபப்படுவது அன்றி
என்னால் வேறு என்ன செய்யமுடியும்?
என் எழுத்துகள்
மீது
அவர்கள் நடத்தும் தீண்டாமையில்
நான் கூனிக்குறுகிப்
போவேன்
என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
என் எழுத்துகளை
வெளியிடக் கூடாது
என்று சிற்றிதழ்களுக்கு வாய்மொழியாகத்
தடை விதித்திருப்பதாக தெரிகிறது.
அவர்களுக்கு என் நன்றி.
என் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும்
பதிப்பகங்கள் கூட திடீரென
மவுனம் சாதிக்கின்றன.
என் பொருட்டு அவர்கள் பதிப்பு தொழில்
நட்டமடைந்துவிடக்
கூடாது என்பதால்
நானே அவர்களிடமிருந்து விலகிக்
கொள்கிறேன்.
என் புத்தகங்களை சென்னையில் வெளியிடவே முடியாது.
அப்படியே
வெளியிட்டாலும்
புத்தக வெளியீட்டு பிரபலங்கள் வரமாட்டார்கள்.
வந்து நாலு
வார்த்தை ஏசி விட்டாவது போகலாம்..
ம்கூம்..
என் பெயருக்கு அப்படி ஒரு
ராசி…!
இப்படியான பெருமைகளை எனக்கு கொடுத்து
தீண்டாமைக்குள்ளான
என் எழுத்துகளை
ஒவ்வொன்றாக கோர்த்துக் கொண்டிருக்கிறேன்.
காந்தியம், கம்யூனிசம், பெரியாரியம், தலித்தியம்,
அம்பேத்கரியம்
, தமிழ்த் தேசியம், இந்திய தேசியம்…
என்று இன்று பரவலாக நாம் அறிந்த இசங்களை
என் வாசிப்புனூடாக
புரிதலினூடாக
விமர்சித்தப்போதெல்லாம் எதிர்கொள்ளாத
அனுபவமிது.
இதுவும் ஒருவகையான கருத்தியல்
அதிகாரப்
பாசிசம் தான்.
அவர்களுக்குத்
தெரியவில்லை….
அவர்களின் நிராகரிப்புகளே
என் எழுத்துகளுக்கான
ஆகச்சிறந்த அடையாளம் என்பது!
புதிய மாதவி! நீ-
ReplyDelete“வெட்ட வெட்டவே துளிர்க்கும் வேங்கை மாமரம்” என்பதை அறியாதவர்கள் ஏதாவது செய்வார்கள். “காலமறிந்து கூவும் சேவலைக்
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது,
கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும்
கணக்காய்க் கூவும் தவறாது!”
நமக்கெல்லாம் எதிரியா இருக்க ஒரு தகுதிவேணும்பா! நீபாட்டுக்குப் போய்க்கிட்டே இரு! நாடு உன் கூட வரும்!
நட்புக்கு நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇணையம் என்பது ஜனநாயகமானது. அதில் நீங்கள் இயங்கிக்கொண்டிருக்கும்போது ஏன் வருந்தவேண்டும்? வெறும் முன்னூறு பிரதிகள் அச்சடித்து அதுவும் மூன்றாண்டுகள் வரை விற்காமல் இருக்கும் தமிழ்ப் புத்தகச் சந்தையில் நீங்கள் இல்லாமல் போவது யாருக்கு நஷ்டம்? தொடர்ந்து இணையத்தில் எழுதுங்கள். PUSTAKA போன்ற தளங்கள் இப்போது திறந்துள்ளனவே, உங்கள் நூல்களை அதில் வெளியிடலாம். அவர்களிடம் தீண்டாமை இல்லை. வாழ்த்துக்கள்!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)
Thank you. My books started coming as ebooks by Pustaka.
Deleteகவலைப் படாதீர்கள்
ReplyDeleteபுத்தகம் எத்துனைப் பேரைச் சென்றடையும்
இருக்கவே இருக்கிறது இணையம்
பல நாடுகளைக் கடந்து ,
உங்களின் எழுத்துக்களை எடுத்துச்செல்லும்
இணையத்தில் எழுதுங்கள்,தொடருங்கள்
அக்கறைக் காட்டும் நட்புக்கு நன்றி.
Deleteஇலை மறை காயாக
ReplyDeleteமாங்காயையா பூசணியையா
காட்டப்போகின்றனர் - ஒரு
கலைஞரை எப்படி மூடலாம்?
தங்கள் எழுத்துகள் வெளிவரும்...
#போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்.#என்று கூலிக்கு எழுதியவரே ஊக்கமாய் சொல்லும்போது உங்களுக்கு என்ன குறைச்சல் ?உங்களின் குரல் இறுதி வரை மட்டுமல்ல ,அதற்கு பிறகும் பேசப் படும் !
ReplyDeleteஆஹா..அருமை. மிக்க நன்றி.
Deleteஎதிர்ப்பைக் கண்டு எதற்கு வேதனை. உங்களுக்கான வலைப்பக்கமும் மின் புத்தகங்கள் வெளியிடும் வசதியும் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள்...
ReplyDelete