Friday, May 12, 2017

மோடியின் பூகோள அரசியல் பயணம்



இந்திய பூகோள அரசியலும் தமிழரின் ஏமாற்றமும்.
பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தை முன்வைத்து...
இந்திய இலங்கை உறவை தமிழராகிய நாம் பார்ப்பதற்கும்
 இந்திய நடுவண் அரசு பார்ப்பதற்குமான இடைவெளி
அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகிறது.

இதற்கான முக்கியமான காரணமாக இருப்பது பூகோள அரசியல்.
மாற்ற முடியாத இந்த பூகோள அரசியல் இந்திய அரசின் 
வெளியுறவுக்கொள்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. 
எதை வேண்டுமானாலும் ஒரு
தேசமும் அதன் வல்லாதிக்க அரசும் மாற்றிக்கொள்ள முடியும்.
 ஆனால் அண்டைநாடுகளையோ அல்லது தேசத்தின் 
கடல் எல்லையையோ மாற்றிக்கொள்ளவே முடியாது. 
அதனால் தான்
(International affairs , nations tend to act based on self interest.
Calculation of power and national interests.
Foreign policy text books characterized this behaviour as geopolitical realism)
 பூகோள அரசியல் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 
இதை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டு ஆட்சி செய்தவர்கள்
சோழவம்சத்தினர். அதிலும் குறிப்பாக இராஜ இராஜ சோழனும் 
இராசேந்திர சோழனும்.
அண்மைக் காலங்களில் இந்தியப் பிரதமரின் 
 வெளிநாட்டுப் பயணங்களைக் கூர்ந்து கவனிக்கும் போது
 அப்பயணங்கள் வெறும் செல்ஃபி சுற்றுலா பயணங்கள் அல்ல 
என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். 
மோடியின் இலங்கைப் பயணத்தையும்அந்த வரிசையில் 
முக்கியமானதாக கருத வேண்டும்.
இதற்கான தரவுகள் வெளிப்படையாக பேசப்படவில்லை
 என்றாலும் இந்திய உதவியுடன்
 SIX phase coastal surveillance radar project at seychellas மற்றும் 
மொரீசியஸ் பயணம் தற்போது இலங்கைப் பயணம் ...
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்
 இந்திய வெளியுறவு கொள்கையில் இந்து மகாசமுத்திரத்தில்
 தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய
கட்டாயமும் காலமும் வந்துவிட்டதை உணர்த்துகிறது.
**
வழக்கம் போல மோடி நிறைய காமெடி செய்யவும் தவறவில்லை.
திருவள்ளுவரை முனிவர் என்றார். ஒகே.
 திருக்குறள் சொன்னார்.அதுவும் ஓகே.
 மருத்துவமனை, கல்வி வளர்ச்சியில் உதவி, மலையக மக்களுக்கு
 10,000 வீடு கட்டித்தரும் திட்டம்.. எல்லாம் கேட்க நன்றாகவே
இருந்தது. தன் பேச்சின் ஹைலைட்டாக ஏர் இந்தியா
 விமானச்சேவை வாரணாசியிலிருவ்து கொழும்புக்கு 
என்று சொன்னார் பாருங்கள்.  காசிக்குப் போனால்  புண்ணியம் தானே!
எப்படியோ இலங்கை வாழ் புத்த மதத்தினரும் இந்துக்களும் இந்த விமானச்சேவையைப் பயன்படுத்தி போகிற இடத்துக்குப் புண்ணியம்
தேடிக்கொள்ளும் பாக்கியத்தை அருளினார்.
நாமெல்லாம் எதிர்ப்பார்த்தது போல அங்குப் போய் 
தமிழக மீனவர்களைப் பற்றியோ கச்சத்தீவு பற்றியோ
அவர் எதுவும் பேசிய மாதிரி தெரியல. 
ஒருவேளை ரகசியமா எதாவது பேசியிருக்கலாம்னு 
இப்போதைக்கு மன ஆறுதல் அடைவது தான் நமக்கும் நல்லது.


8 comments:

  1. இந்தப்பயணம் நிச்சயமாக மீனவர்களுக்காக அல்ல.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். வருகைக்கு நன்றி

      Delete
  2. இன ஒழிப்புக் போர்க்குற்றத்தை செய்த நாடு என்ற பிம்பத்தை உலக் நாடுகளின் பார்வையில் இருந்து மறைக்கவே இது உதவும் ,இலங்கை அரசாங்கம் மிகவும் சாணக்கியத் தனமாய் செயல்படுகிறது என்பதே உண்மை !

    ReplyDelete
    Replies
    1. This trip will be more benefit to india only, thats the reason i wrote this is geopolitical ..Thanks friend

      Delete
  3. கச்சத்தீவை மீட்போம் என்பது தமிழக அரசியல்வாதிகளின் ஏமாற்று சுலோகம் மட்டுமே.
    தமிழன்டா! அதனால் அவன் எல்லைகளை மீறி மீன்பிடிக்க வருவான்டா என்று எல்லாம் பேச முடியாது. எல்லை தாண்டி வந்தால் அடிக்காதீங்க, பறிமுதல் செய்த படகுகளை விடுவிப்பது பற்றி தான் பேச முடியும். விழாவுக்கு சென்ற இடத்தில் பேச முடியுமா!

    ReplyDelete
    Replies
    1. இது சரி. ஆனா மெதுவா சொல்லுங்கோ. இல்லாட்டி..

      Delete
    2. நன்றி.
      நான் இப்போதாங்க பிபிசி தமிழ் பார்த்தேன். திருவள்ளுவரை முனிவர் என்று பிரதமர் சொல்லவில்லை. கிரேட் போயெட் என்கிறர்.
      இளையராஜாவின் மகன் தமிழ் இசையமைப்பாளராம், தமிழில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்கிறார்.பிரதமர் தமிழ் பேசுவது மகிழ்ச்சி.
      http://www.bbc.com/tamil/media-39903409

      Delete
  4. மிக அருமை ..

    ReplyDelete