இனம் புரியாத யுகாந்திர
மவுன ங்களுக்குப்
பிறகும்
எப்படி வேண்டுவது
உன்னை?
உன் தரிசனம் மறுக்கப்பட்ட
ந ந்தனின் மகள்
நான்.
ருத்திர தாண்டவத்தை
ஆன்ந்த தாண்டவமாக்கி
அருள் பாலிக்க
வேண்டும்..அய்யனே.
உன் பூஜையில் மலராக
முடியாது.
உன் தோட்ட த்தில்
வேராகவும் முடியாது.
இதெல்லாம் முடியாது
தான்..
உன் உற்சவம் முடிந்து
உன் பக்தர்களுக்கெல்லாம்
நீ அருள்பாலித்தப்பிறகு..
சிதம்பர தரிசனம்
தரலாம் தானே..!
கொடியின் அசைவுகள்
அறியாத
காற்றும் உண்டோ..
உன் தேர்க்கால்களிடம்
கேட்டுப்பார்,,
அருகில் வந்ததும்
கொடிகள் படர்ந்ததும்
மலையும் காடும்
சாட்சியாய் நின்றதும்
உன் அடிமுடி அறியாத
ரகசியமல்ல..
குளிரிலும் காற்றிலும்
தள்ளாடும் கொடி
நினைவுகளின் கனம்
தாங்காமல் சரியுமோ..
தேர் பார்க்குமோ
கொடி படர தேர்க்கால்கள் நிற்குமோ.
ஆன்ந்த நடனம்..
ஆருத்திரதரிசனம்..
ஓம் நமசிவாய..
ஓம் நமச்சிவாய....
ReplyDelete