ரஜினி அரசியலுக்கு
வரப்போகிறார் வரப்போகிறார்
ஊடகங்களின்
சின்னத்திரை எங்கும் ரஜினிமயம்.
ரஜினி அரசியலுக்கு
வரவேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின்
விருப்பமும்.
.. ரஜினியும் மோடியும் ஒத்துப்போகும் இந்துத்துவ புள்ளி,
ரஜினியும்
எம்ஜியாரும் இணையும் திரையுலகப் புகழ்… இப்படியான
பார்வையை
முன்வைத்து ரஜினியின் அரசியல் வாழ்க்கையைக்
கொண்டாட அவருடைய
ரசிகர் கூட்டம் தயாராக இருக்கலாம்.
ஆனால் ரஜினியும்
மோடியும் வளர்ந்த விதமும் வளர்க்கப்பட்ட
விதமும் ஒன்றல்ல.
மோடி கடுமையான பயிற்சிகள் கொண்ட
ஆர் எஸ் எஸ்
இயக்கத்தின் பின்ணனியில் வளர்க்கப்பட்டவர்.
அதுவும் இமயமலைக்கு
தியானம் செய்ய கிளம்புவதும் ஒன்றல்ல.
எம்ஜியாரின்
திரையுலக வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும்
ஒன்றுடன்
ஒன்று இணைந்து ஒன்றில் ஒன்றாக கரைந்து வளர்ந்தது
வளர்க்கப்பட்டது.
அன்றைய அரசியல் சூழலும் இன்றைய அரசியல் சூழலும்
ஒன்றல்ல.
அதைவிட முக்கியமானது அன்றைய அரசியல் பின்னணி கொண்ட
எம்ஜியார்
ரசிகர்களுக்கும் இன்றைய ரஜினி ரசிகர்களுக்கும் இருக்கும்
வேறுபாடு. இதெல்லாம் ஆய்வுக்குரியவை.
இருந்தாலும்
ரஜினி, நீங்கள்
அரசியலுக்கு வரவேண்டும், அது நடந்துவிட்டால்
அதன் பின்
அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படும்
தமிழ்ச் சினிமாவின்
கதாநாயகர்களின் கனவுகள்
ஒரு முடிவுக்கு
வந்துவிடும்.!! (அப்பாடா..)
அதற்காகவேனும்…
ரஜினி.. நீங்கள் அரசியலுக்கு வாருங்கள்.
மிகச் சுருக்கமாக எனினும்
ReplyDeleteமிகச் சரியான அலசல்
வாழ்த்துக்களுடன்...
நடக்கட்டும்... நடக்கட்டும்...
ReplyDeleteநடந்ததெல்லாம் நல்லதா தெரியவில்லை. நடக்கப்போவதாவது நல்லபடி இருக்க வேண்டும். நன்றி நட்புக்கு.
Delete
ReplyDeleteதமிழ்ச் சினிமாவின் கதாநாயகர்களின் கனவுகள்
ஒரு முடிவுக்கு வந்துவிடும்.////
மிக மிக சரியாக சொல்லியிறுக்கீங்க
எப்படியோ தமிழகம் தப்பித்தால் சரிதான். மிக்க நன்றி.
Deleteதமிழன் மானமுடன் வாழவே முடியாது போலயே....
ReplyDeleteகவலையாகத்தான் இருக்கிறது. அதற்காக ..க்டைசிவரை எல்லாவகையிலும் போராடுவோம். மிக்க நன்றி
Deleteரஜினி, ஜெயலலிதா, மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் னு மூனு பேரையும் கம்ப்பேர் பண்ணியிருந்தால் ஓரளவுக்கு அர்த்தமா இருந்து இருக்கும். ஆமா தமிழ்நாட்டு அரசியலில் நடிகர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி எதுக்கு வந்து நிக்கிறாருனு தெரியலை.
ReplyDeleteஅப்படி மோடியை அகற்றி ஜெயலலிதாவை உள்ளே கொண்டு வந்திருந்தால் உங்க "தியரி" சுத்தமாக அர்த்தமற்றதாகி இருக்கும்னு தெரிந்தேதான் செய்து இருப்பீங்க.
ரஜினி அரசியலுக்கு வாங்க! தோல்வி அடைந்து இனிமேல் எந்த நடிகனும் அரசியலில் இறங்காமல்ப் போக வழி வகுங்கனு உங்க "பெரிய" ஆசை.. அடேங்கப்பா! ரஜினி அரசியலுக்கு வந்துதான் உங்க சமீப அரசியல் சூழலை நாறடிக்கணுமா என்ன?
டாஸ்மாக் வருமானத்தை வைத்து, பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் இன்றைய அரசியல் சூழலில் ரஜினி அரசியலில் தோற்பதென்ன மிகவும் சாத்தியம்தான். அப்படித் தோற்றாலும் நாளைக்கு விஜய் வராமல் இருக்கப் போகப் போவதில்லை. சிவாஜி பாக்யராஜ் விஜய் காந்த், இப்போ ரஜினி வர முயல்வதுபோல..
***அதைவிட முக்கியமானது அன்றைய அரசியல் பின்னணி கொண்ட
எம்ஜியார் ரசிகர்களுக்கும் இன்றைய ரஜினி ரசிகர்களுக்கும் இருக்கும்
வேறுபாடு.***
அதைவிட முக்கியமானது...
தொப்பியையும், மேக் அப்பையும் எப்போவுமே அகற்றி தன்னைக் காட்ட மிகவும் பயந்த உங்க இதய் தெய்வம் எம்ஜியாரும், வழுக்கை மண்டையாய் வந்து நிக்கும் ரஜினிக்கும் உள்ள வேறுபாட்டை விட்டுட்டீங்க? ஏன் உங்க தியரிக்கு "ஃபிட்" ஆகலையோ?