பெரியார் பேரணியில்
ஸ்ரீராமனும் சீதாப்பிராட்டியும்
நிர்வாணமாக ஆடையின்றி
அழைத்துச் செல்லப்
பட்டார்களா..
?! தர்பார் புகழ் ரஜினி சார் அவர்கள்
இதை எதிர்ப்பதும்
மன்னிப்பு கேட்க மாட்டேன்
என்று சிலிர்ப்பதும்…
எனக்கு உண்மையிலேயே
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..
பெரியார் அப்படி
செய்தாரா..
அப்படி செய்திருந்தாலும்
அது சரிதானா
இம்மாதிரியான மண்டைக்காயும்
தீவிரமான
கருத்துகளை ரஜினி
பேசுவது அவருடைய
பஞ்ச் டயலாக்கை
விட சூப்பரா இருக்கு!!
சேலத்தில் 1971
ல் இப்படி ஸ்ரீராமனும் சீதாப்பிராட்டியாரும்
அவமதிக்கப்பட்டிருப்பதை
இன்றைய ரஜினி துணிச்சலாக
கேள்விக்கேட்க
அன்றைய சக்கரவர்த்தி திருமகன் எழுதிய
அறிஞர் சாணக்கியர்
மதிப்பிற்குரிய ராஜகோபாலாச்சாரியார்
ஏன் அமைதியாக இருந்திருக்கிறார்?
ச்சே.. ராஜாஜியின் அறிவு
அறம் நேர்மை மீது
சந்தேகம் வருகிறது.. !!!
அப்புறம் ரஜினி
சார்… உண்மையிலேயே ஆடையின்றியா
அல்லது .. என்ன
நடந் த து என்று நான் நேரில் பார்க்கவில்லை.
அப்படியான ஒரு
சந்தர்ப்பமோ சூழலோ இல்லை.
சரி .. அதை எல்லாம்
விட்டுத்தள்ளுங்கள் ரஜினி சார்.
அப்படியே நடந்திருந்தாலும்
அதெல்லாம் ஒரு நாள் கூத்து..
ஒரு புகைப்படம்
கூட சாட்சியாக காட்டமுடியாது இருப்பதாக
தெரிகிறது… ஆனால்..
பாருங்கள்… அழிக்க முடியாத சாட்சியங்களாக
நிர்வாணத்தில்
பெண்ணுடல்.. கோவில் கண்ட இடமெல்லாம்
இருக்கிறது. கும்பமேளாவில்
சிரிக்கிறது…
இதை எல்லாம் என்ன
செய்யலாம் ரஜினி சார்..??
பெரியார் .. நிர்வாணத்தை
அவமானத்திவிட்டார்.
இவர்கள் நிர்வாணத்தைக்
கொண்டாடுகிறார்கள்.
ஒன்று அரசியலாகிறது..
இன்னொன்று கலையாகிறது.
இரண்டிலும் பெண்ணுடல்..
ஆடையின்றியே
காட்சிப்பொருளாகி
இருக்கிறது.
சீதாப்பிராட்டி
நிர்வாணப்படுத்தப்பட்டிருந்தால்
அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்
ரஜினி சார்… பெண்கள்
பார்த்துக் கொள்வார்கள்.
உங்கள் திரைப்படங்களில்
பெண்களை நிர்வாணமாக
நீங்கள் காட்டவில்லை.
ஆனால் அதைவிட “ஹாட்டா”
காட்டி இருக்கிறீர்கள்..
அப்போதெல்லாம் பெண்ணுடல்
மீது ஏற்படாத மரியாதை
சீதாப்பிராட்டியின் பெண்ணுடல்
மீது உங்களுக்கு
ஏற்பட்டிருப்பது உங்கள் ஆன்மீகத் தெளிவு!
அந்த திரைப்படக் காட்சிகளை நானும் காட்சிப்படுத்த விருப்பமில்லை.
அந்தப் பெண்கள்
ரத்தமும் சதையுமாக நான் பார்த்த
உயிருள்ள ஜீவன்
கள். திரையில் கலை என்ற போர்வையில்
அவர்கள் வியாபாரப்படுத்தப்பட்டிருக்கலாம்.
அதையே நானும்
செய்துவிட முடியாது
..
எப்படியோ.. பரட்டை…
நீங்க பத்த வச்சிக்கிட்டே
இருங்க.. எரியட்டும்.
எரியட்டும்..
அந்த நெருப்பில்
பெரியார் மட்டுமல்ல
நீங்களும் நாங்களும்
தெரிகிறோம்..
எரியட்டும்..
#rajini_periyar
படங்களுடன் சாட்டையடி கேள்விகள் தொடுத்தது அருமை.
ReplyDeleteஎனது கேள்வியும் இதுதான் அதுக்கு இப்ப என்ன ?
முதலில் இவன் எது சொன்னாலும் சர்ச்சையாக்குகின்ற ஊடகங்களை ஒழிக்கணும்.