Saturday, January 4, 2020

சிட்டுக்குருவி என்னைத் தேடியதோ

Related image
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கேது சொந்த வீடு
3 நாட்கள் வீட்டில் இல்லை.
எவ்வளவு தான் மீண்டும் மீண்டும்
நினைவு படுத்திவிட்டு சென்றாலும்
இது பெரிய வேலையா யாரும் நினைப்பதில்லை!
ஆனால் … வீட்டு சன்னலில் அதிலும் குறிப்பாக
அடுக்களை சன்னலில் பெரிய ரகளையே நடந்திருக்கிறது.
தண்ணீர் வைத்திருக்கும் டப்பா முதல் தானியம்
பிரட் வைக்கும் தட்டுகளை தட்டிவிட்டு எல்லாத்தையும்
 கீழே தள்ளி தங்கள் கோபத்தை அவர்கள் காட்டி விட்டார்கள்
. இன்று அதிகாலையில் அவர்களுக்காக என்னைக்
 காத்திருக்க வைத்தார்கள். முதலில் வருவது என் ஆத்தா
காக்கைப்பாடினியாரிடம் வந்த அதே காக்கைகள்.
அடுத்து வருவது என் பாட்டன் பாரதியிடம் வந்த
சிட்டுக்குருவிகள்..
ஹால் சன்னல் மட்டும் ஸ்பெஷலாக
புறாக்களுக்கு. மாறி மாறி ஹாலுக்கும் அடுக்களைக்குமாக 
நடந்து அவர்களிடம் கொஞ்சி பேசி..
இப்படியாடா ரகளை செய்யறது.. என்று கொஞ்சம் 
அதட்டி.. ஒருவழியா அவர்கள் என்னைப் பார்த்து
 சிறகசைத்து குட்மார்னிங்க் சொன்ன பிறகுதான்
 வீடும் மனசும் பழைய நிலைக்கு வந்த மாதிரி இருக்கிறது. 
இன்னும் பாருங்கள்.. ஒரு செட்
புறா ஜோடிகள் சரியாக 11.30க்கு வருவார்கள். 
அவர்களுக்காக காத்திருக்கிறேன்.. 
(வருவார்கள் தானே.. டென்ஷனாக இருக்கிறது)
உறவுகளிடமிருந்து விட்டு விடுதலையாகிவிட
நினைக்கும் இக்காலத்தில் இவர்கள் வேறு
என் வாழ்க்கையில் இடம் பிடித்துவிட்ட து
என்ன மாயமோ..?
அவர்களின் மாயவித்தைகளில் நானும்
சிக்குண்டுவிட்டதை…. ஒத்துக் கொண்டாக
வேண்டும். இது எனக்கு தோல்வியா
அல்லது என் பயணத்தில் இன்னொரு
பாதையா..

1 comment:

  1. வெறுமைச் சாலையில் குளிர் நிழல் மரங்கள்

    ReplyDelete