ஈவெரா என்ற தந்தை
பெரியாருக்கு யுனெஸ்கோ
விருது/அங்கீகாரம்
கிடைத்ததா கிடைக்கவில்லையா
இந்த ஆய்வுகள்
தீவிரமாக நடக்கின்றன.
ஆனால் யுனெஸ்கோ
விருது கொடுத்தாலும்
கொடுக்காவிட்டாலும்
பெரியார் பெரியார் தான்
.
பெரியாரை உங்களில்
சிலர் வெறுக்கலாம்.
பெரியாருடன் பலர்
முரண்படலாம்.
பெரியாரை அறியாமலும்
அறிந்தும் கூட
விமர்சிக்கலாம்.
அதெல்லாமே அவரவர் நிலைப்பாடு.
இன்னும் சொல்லப்போனால்
தனிப்பட்ட நபரின்
உரிமை. ஆனால் பெரியார்
என்ற சொல்
சமூகவியல் வரலாற்றில்
அவரை எதிர்ப்பவர்களும்
விமர்சிப்பவர்களும்
ஆதரிப்பவர்களும் தவிர்க்க
முடியாதப் புள்ளி.
அதுதான் பெரியார்.
கொடுக்காத விருதை கொடுத்ததாக எதுக்கு பிராடுத்தனம் பண்ணனும்
ReplyDeleteவிருது கொடுக்கப்படாதது உண்மையானால் அதைப் பெயருடனே வந்து சொல்லலாமே! அப்படிச் சொல்லத் துணிவு இல்லை என்பதிலிருந்தே விருது கொடுக்கப்பட்டது உண்மைதான் எனத் தெரிகிறதே!
Deleteஎனக்கு கணக்கு இல்லாதபடியால பெயரில் வர முடியவில்லை
DeleteRishabraj Rajendra
விருது கொடுக்கப்படவில்லை
கொடுத்து இருந்தால் ஓசி சோறு வீரமணி இப்போதாவது வெளிப்படுத்தலாமே
இறந்த பிறகு வழங்கப்படும் விருதுகளால் பயனேதும் இல்லை.
ReplyDeleteபெரியாரை இழிவுபடுத்துகிறவன் பொறுக்கி. நம்புகிறவன் அயோக்கியன்.
நம்பப்படுவதற்குப் பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை; உண்மையிலேயே வாழ்ந்த மனிதர்! பெரியாரைப் பின்பற்றுகிறவன் - உங்கள் பாணியில் சொன்னால் நம்புகிறவன் - அத்தனை பேரும் கெட்டவனாகத்தான் இருப்பான் என எப்படிச் சொல்கிறீர்கள்? விளக்க முடியுமா? உலகில் எத்தனையோ பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் எனத் தேவை கிடையாது. ஆனால் பலர் மதிக்கும் பெரிய மனிதர் ஒருவரைப் பற்றிப் பேசும்பொழுது மரியாதையாகப் பேச வேண்டும்! நா காக்க!
Delete'இழிவுபடுத்துகிறவனை நம்புகிறவன்' என்று எழுதியிருக்க வேண்டும். தவறு செய்துவிட்டேன்.
Deleteஉங்களைப் போலவே பெரியார் மீது அளவகடந்த மரியாதை கொண்டவன் நான்.
நீங்கள் கண்டித்ததில் எனக்குக் கொஞ்சமும் வருத்தம் இலலை.
நன்றி நண்பரே.
அளவ கடந்த-அளவு கடந்த
Deleteநீங்கள்தாம் என்னைப் பொறுத்தருள வேண்டும்! நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது தெரியாமல் எழுதி விட்டேன். பொறுத்தருளுங்கள்!
Deleteதிரு இ.பு. ஞானப்பிரகாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றியுடன்
Deleteமிக்க மகிழ்ச்சி கவிஞரே!
Delete'கடவுளின் கடவுள்' என்னும் வலைப்பக்கத்தில(இப்போது முடக்கப்பட்டது) பெரியாரைப் போற்றிப் பல பதிவுகள் எழுதியவன் நான்.
ReplyDeleteதளத்திற்கு வருகை தந்திருக்கிறீர்களா?
இல்லை ஐயா! நான் பதிவுலகில் எப்பொழுதாவது ஒருமுறை மிகச் சிலரின் பதிவுகளை மட்டுமே எட்டிப் பார்ப்பவன். உங்கள் வலைப்பூவுக்குக் கூட வந்திருக்கிறேன்; ஆனால் அதிகம் படித்ததில்லை. அதற்காக வருந்துகிறேன்.
Deleteகைபேசியில் எழுதுவதால் பிழைகள் நேர்கின்றன. மன்னியுங்கள்.
ReplyDeleteபரவாயில்லை ஐயா! தாங்களும் என்னைப் பொறுத்தருள வேண்டும்!
Deleteஉங்கள் முதல் பின்னூட்டத்திலெயே இழிவுபடுத்துகிறவனை நம்புகிறவன் அயோக்கியன் என்று தான் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் அதைத் தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி .@ பசி பரமசிவம்.
ReplyDeleteமிக்க நன்றி நட்பே.
ReplyDeleteசிறந்த பதிவு
ReplyDeleteபாராட்டுகள்