பெரிய்ய்ய்ய் புடுங்கி நான்..எப்படி எல்லாம் பெருமைப் பீத்திருக்கேன்..நினைச்சுப் பார்த்தா வெட்கமா இருக்கு ஆத்தா..என்னால ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது வாசிக்காம உசிரோடவே இருக்க முடியாதுனு சொல்லிட்டு அலைஞ்சிருக்கேன்.
தேர்வு காலத்தில் கூட பாடப்புத்தகமல்லாத ஒன்றிரண்டு புத்தகம் வாசிப்பேன்.அம்மா மருத்துவமனையிலிருந்தக் காலங்களில் புத்தகங்களுடன் அம்மா அருகில்..புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கும் என்னையே அம்மா பார்த்துக் கொண்டிருப்பார். என்னமா.. ஏதாச்சும் வேணுமானு கேட்டுட்டு மீண்டும் புத்தகத்தில் ...அம்மா நான் வாசித்துக் கொண்டிருப்பதையே ஏக்கத்துடனும் பெருமையுடனும் பார்த்துக்கொண்டே இருப்பாள். புத்தகங்களின் தாள்களை புரட்டிக் கொண்டிருப்பேன்...இப்படியாக வாசித்தலின்றி நானில்லை என்பது..ஹம்பக்..ஒன்றிரண்டு புத்தகங்கள் வாசிக்க கிடைத்தன..அதுவும் மமுடிந்துவிட்டது.. நான் உயிரோடு தானிருக்கிறேன். மூச்சுக்காற்று நின்றுவிடவில்லையே!...
தலையில் நானே ஒட்டிக் கொண்டதும் தானே வந்து ஒட்டிக் கொண்டதுமான எல்லா கிரீடங்களும் உடைந்து உடைந்து காலடியில் விழுகின்றன. என் நிழலே எனக்கு அன்னியமாக இருக்கிறது...ராட்சதக் காற்றாடிகளுக்கு காற்று இரையாகிப் போனதை மகேந்திர மலை செய்வதறியாது பார்த்துக் கொண்டே அசைவற்று இருக்கிறது..

No comments:
Post a Comment