ஒட்டுண்ணிகள்
இது ஓர் உயிரினம். Parasites
இந்த உயிரினம்
பிறிதொரு
உயிரினத்துடன் நீண்டகால,
நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது.
இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் மற்றது ஓம்புயிர் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப்
பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள்,
ஓம்புயிர்களிலும் மிகவும் சிறியவை.
ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு
சிறப்பாக்கம் பெற்றிருப்பதுடன்;
ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும்
இனப்பெருக்கம்
செய்கின்றன.
இந்த ஒட்டுண்ணிகள் மனித இனத்திலும் உண்டு.
இவை ரொம்பவும் ஆபத்தானவை.
அரசியல், கலை , இலக்கிய
உலகில் பெருகிவரும்
ஒட்டுண்ணிகள் இப்போதெல்லாம்
ஓம்புயிரை விட
அளவிலும் அதிகாரத்திலும்
பெரிதாக இருப்பதால்
ஒட்டுண்ணிகளாக தெரிவதில்லை!
என்பது இன்னும் ஆபத்தானது.
இணையம் மற்றும் முகநூலில்
கூட ஒட்டுண்ணிகள் உண்டு.
அவை நெளிவதும் ஓடுவதும்
அருவெறுப்பானவை என்பதால்
அதைப்பற்றி இடக்கரடக்கல்
காரணமாக விட்டுவிடுவோம்.
ஒட்டுண்ணிகள் மனித இனத்திலும் உண்டு.
ReplyDeleteநாம் பாதுகாப்பு எடுப்போம்!
முன்னெச்சரிக்கையாக இருப்போம்
ReplyDeleteஅருமை
ReplyDelete