Sunday, May 7, 2017

ஜீரோ மைல்.. இந்தியாவின் மையப்புள்ளி



இந்திய மண்ணின் மையப்புள்ளியில் கால் பதித்து நிற்கிறேன்..
 என்னைச் சுற்றி மொழிகளும் இனங்களும் நாடுகளும் 
புலிகளும் மான்களும் பூக்களும் காடுகளும் மலைகளும்.
என்னைச் சுற்றும் வளையங்கள் ஒவ்வொன்றாக விரிகின்றன 
.மையப்புள்ளியிலிருந்து கோடுகளை. வரைகிறார்கள் அவர்கள்
உங்கள் தொலைவுகளை நானே தீர்மானிக்கிறேன்.
என் பெருவிரல் அசைவுகள் உங்கள் நாடு நகரங்களை
 மாற்றிவிடும் வல்லமை கொண்டவை.
உங்கள் எல்லைகளின் நீள அகலங்களை நான் தீர்மானித்துவிட்டேன்.
கனவில் என்னைத் தீண்டிய கடலின் அலைகள்
முத்தமிட முடியாத தொலைவில் என் குடிசை.
எட்டுத்திசைகளும் எனக்குள் அடக்கம்.
ஓம் நமசிவாய.

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட இந்திய மண்ணின் 
நிலபரப்பளவை கணக்கிட்டப்போது Great Trigonometrical Survey,
 பிரிவினைக்கு முந்திய இந்தியாவின் மையப்புள்ளியாக நாக்பூரில் இருக்கும் இவ்விடத்தைக் கணக்கிட்டார்கள். இந்த மையப்புள்ளியிலிருந்து இந்திய பெருநகரங்களின் தூரத்தைக் கணக்கிட்டார்கள். 1802 ல் ஆரம்பித்த இந்த
சர்வே 1871 முடிவடைந்தது. இந்த சர்வே தான் இமயத்தின் எவரெஸ்ட், கே 2, கஞ்சன்சங்கா சிகரங்களின் உயரத்தை ( கடல்மட்டத்திலிருந்து ) கணக்கிட்டது.
நிலப்பரப்பை அளந்த இந்த சர்வே இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆரம்பமாகவும் ஆவணமாகவும் இன்றுவரை திகழ்கிறது.


7 comments:

  1. தடோபா வனத்தில் புலிகளை பார்த்து இப்போ வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்திய மையப்புள்ளியிலும் நிற்கிறீர்கள். அருமையான சுற்றுலா.

    ReplyDelete
  2. எனக்கு அங்கு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது
    தவறவிட்டுவிட்டேன்
    அடுத்த முறை அவசியம் செல்லவேண்டும்
    சுருக்கமாக எனினும் அவசியமாக தகவல்கள்
    மற்றும் படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. Its nearer to railway station on the main rd, but people at nagpur don't realize the historical important of this site

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Its nearer to railway station on the main road, but people at Nagpur don't realize the historical important of this site,

      Delete
  3. நல்லதோர் தகவல். பல முறை நாக்பூர் வழியே சென்னை வந்தாலும் நாக்பூரில் இறங்கி அங்கே உள்ள இடங்களைப் பார்க்க முடிந்ததில்லை. போக வேண்டும். பார்க்கலாம்!

    ReplyDelete