தந்தை பெரியார் ஒரு சமூகவியல் கருத்தை முன்வைக்கிறார். அக்கருத்து
மீள்வாசிப்பில் சிந்தனைக்குரியதாக விரிகிறது. (பெரியார் சிந்தனைகள் தொகுப்பு)
"கால தேச வர்த்தமானங்களுக்கு ஒத்த முறையில்
எந்த ஒரு சமூகத்திலும் சில பழக்க வழக்கங்கள் , சடங்குகள் நடைபெறுகின்றன, இவற்றைத் தவறு என்று
சொல்ல முடியாது.
இஸ்லாமியர்களின் உறவுமுறை திருமணங்களை
முன்வைத்து இக்கருத்தை விவரிக்கிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் ஐவரைத் திருமணம்
செய்து கொண்ட திரெளபதி கதையையும் மறக்காமல்
குறிப்பிடுகிறார். இப்படி எல்லாம்
சமூகத்தில் சில பழக்க வழக்கங்கள் இருந்தன
என்று தெளிவுபடுத்துகிறார்.
இக்கருத்தை விரித்தெடுத்தால் புராணக்கதைகள் குறித்தும்
சடங்குகள் குறித்தும் நாம் முற்றான எதிர்நிலை எடுத்திருக்க
வேண்டிய அவசியமில்லை என்பது புரியவரும்.
காலந்தோறும் சடங்குகள் மாறிக்கொண்டுதான் வருகின்றன.
இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் பேரணி நடத்துவதும் உண்ணாநோம்பிருப்பதும்
தமிழ் / தமிழர் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் " தமிழ் வாழ்க" என்ன்று மூழங்குவதும் கூட
இன்றைய காலக்கட்டத்தின் சடங்கு அல்லாமல் வேறு என்ன!
சடங்குகளையும் வழிபாடுகளையும் மிகவும் கடுமையாக
விமர்சனம் செய்த தந்தை பெரியாருக்கும்
சிலை எடுத்ததும் மாலை போடுவதும் கூட வழிபாடாகி
சடங்காகி விட்டது என்று
பெரியாரியக்க சிந்தனையாளர் அய்யா ஆனைமுத்து போன்றவர்கள் கவலைப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
மகாபாரதக் கதையை திரெளபதி மொழியில் சொல்லும்
கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் "பருவம்" நாவல்
பெரியார் சொன்ன சமூகவியல் கருத்தினை
முன்வைத்து எழுதப்பட்டிருப்பதையும் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக பருவம் நாவல் எழுதுவதற்கான முன் தயாரிப்புகள் மற்றும் ஆய்வுகள் குறித்து பைரப்பா எழுதி இருக்கும் ஆசிரியரை மிகவும்
முக்கியமானது.
(http://old.thinnai.com/?p=60801171)
ReplyDeleteஒரு நீண்ட கட்டுரைக்கு
அருமையாக முன்னுரையாக
இதைக் கருதுகிறேன்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
மிக்க நன்றி. எழுதவேண்டும் .
DeleteRamasamy does not have brain to understand great Ithihasam like Ramyan and Mahabharatham
ReplyDeleteIS IT?
DeleteYes, Puthiya Madhavi, you are right. I have read that novel twice, one for the heck of it, Second time very slowly enjoying every word of Paavannan, the translator.
ReplyDeleteHai chithan, how are you? thanks for the comment.
Delete#ஆசிரிய(வு)ரை மிகவும்முக்கியமானது#
ReplyDeleteஅதைப் பற்றியும் நாங்கள் அறியக் கொடுக்கலாமே :)
Its writer's research work on indian society especially the particular people life style, they still have some customs of those days, very long introduction of his field work
ReplyDeleteபார்ப்பனர்களும் இந்து மத வெறி கொண்ட மேட்டுக்குடி முட்டாள்களும் பெரியார் இந்து மதத்தை விமர்சித்ததுபோல் மற்ற மதங்களை விமர்சிக்கவில்லைனு மூக்க்கால் அழுது ஒப்பாரி வைப்பார்கள்.
ReplyDeleteபெரியாரின் அந்நிலைப்பாடு ஓரளவுக்கு உண்மைதான்.
நான் சிறுவயதில் யாரோடையாவது சண்டை போட்டுட்டு வருவேன். பொதுவாக என் மாமா மகன்களிடம் அல்லது தெருவில் உள்ள நண்பர்கள் . என்ன பிரச்சினைனாலும் யாரு தப்பு செய்து இருந்தாலும் என் அம்மா என்னைத்தான் அடிப்பாங்க. நீ எதுக்கு யாருடனும் சண்டை போடுற? உன்னைத்தான் என்னால கண்டிக்க முடியும் மற்றவர் குழந்தையை நான் குறை சொல்லவோ திட்டவோ முடியாது என்பார்கள். பெரியார் அதேபோல் தான் பிறந்து வளர்ந்த தன் மதத்தில் உள்ள குறைகளைத்தான் உரிமையாக கண்டித்தார். பார்ப்பனப் பண்டாரங்களை "பாம்பைப் போல்" நடத்தினார். பார்ப்பான் ஒரு இஸ்லாமியனாகவோ, யூதனாகவோ இருந்து இருந்தால் பெரியார் பார்ப்பானையும் கண்டுக்காமப் போயிருப்பார். இந்து இந்துனு சொல்லிக்கொண்டு நாந்தான் உயர்ந்த இந்து நீ மட்டமான இந்துனு சொல்லிக்கொண்டு திரிந்த பார்ப்பானைத்தான் அளவுக்கதிகமாக விமர்சித்தார். மூளையில்லா பார்ப்பானுகளுக்கும் இந்துமத வெறி பிடித்தவனுகளுக்கும் இதெல்லாம் புரியாது. பகவான் பகவான்னு சொல்லிச் சொல்லி சுயபுத்தியில்லாமல் மூளை மழுங்கிவிட்டதால், பெரியாரை வில்லனாக்கி நாட்டில அனைவரையும் பண்டாரமாக்கி விட்டானுக. The idiot calling himself as "ravikumar" falls in that category too! He lacks brain to analyze periyaar but he calls others not having brain. Typical "paarppana" thinking!