Monday, May 22, 2017

தோழியின் காதல்

tamil-sangam-literature.jpg (149×173)
சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவியின்
பெயர் குறிப்பிடப்பட்டிருக்காது.
தலைவனோ தலைவியோ அரசனோ அரசியோ அல்ல.
அதிகாரத்தின் வாசனையைப் பேசும் காதல் அல்ல
சங்க இலக்கியம்.
இப்படியாக நிறைய நிறைய வண்டி வண்டியாக சங்க
இலக்கிய தலைவன் தலைவி சிறப்பு குறித்து கற்பித்திருகிறார்கள்.
கொண்டாடி இருக்கிறோம் நாமும்.
அப்போதும் சரி… இத்துணை ஆண்டுகள் கழித்தும் சரி..
எப்போதும் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான்
இந்த சங்க இலக்கியத்தில் புரியாதப் புதிராக இருக்கிறது.
அதாவது, 
காதலுக்குத் துணை புரியும் தோழிக்கோ தோழனுக்கோ
காதலே இருந்திருக்காதா..?

தோழியின் காதலைப் பற்றி எவ்விடத்தும்
இலைமறை காயாகக் கூட சின்னதாக ஒரு குறிப்பு கூட
இல்லையே..! ஏன் ?

தோழி தானே செவிலி மகளே என்று தொல்காப்பியம்
ஓர் அடையாளம் காட்டுகிறதே..
இச்சமூக அமைப்பைக் கூர்ந்து நோக்கும் போது
என்னவோ நெருடலாக இருக்கிறதே..
காதலில் கூட 
இன்னாரின் காதலைத்தான்  கொண்டாடலாம்,
இன்னாரின் காதலைத்தான் பாடலாம்,
இன்னாரின் காதலைத்தான் ஏற்றுக்கொள்ளலாம்
என்று ஏதாவது எழுதாதச்  சட்டம் இருந்திருக்குமோ?

காதலைப் பற்றி இவ்வளவு தெளிவாகப் பேசும் 
தலைவியின் தோழியோ அல்லது தலைவனின் தோழனோ
 தங்கள் காதல் கதையைப் பேசி
இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்!

காதலைப்பற்றிப் பேச தோழி, தோழன் என்ற பாத்திரங்கள்
சங்க இலக்கியத்தில் ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டன்
என்று சமாதானப் படுத்திக் கொண்டாலும் இந்த உத்தியை
இவ்வளவு கறாராக சங்க இலக்கியம் விதிவிலக்கின்றி
கொண்டொழுக என்ன காரணம்? 

2 comments:

  1. அருமையான ஆழமான யோசனை
    இதில் எனக்குப் பட்டது
    தோழியானவள் காதல் வயப்பட்டாள்
    அவள் பாட்டுடைத் தலைவியாகி விடுவாள்தானே
    இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படி நினைத்ததுண்டு. அப்படியானால் தொல்காப்பியர் தோழிதானே செவிலியின் மகளே என்று ஏன் சொல்ல வேண்டும்? செவிலி தாயின் தோழியாம்.. இப்படி ஒரு பரம்பரை காட்டப்படுகிறது. ஆனால் தோழியும் செவிலியும் மிகவும் அறிவானவர்களாக அறவுணர்வுள்ளவர்களாக காட்டப்படுகிறார்கள். மிக்க நன்றி ரமணி சார்.

      Delete