Monday, May 22, 2017

யாளி - இந்தியன் டிராகன்



கோவில்களுக்குப் போகும் போது சாமிக் கும்பிடுகிறோமொ
இல்லையோ கோவிலைச் சுற்றி இருக்கும் தூண்களில்
இருக்கும் நம் கலைத்தோட்டங்கள் நம்மை ஏமாற்றுவதில்லை.
புராணக்கதைகள் சிற்பங்களாக … என்பதை எல்லாம் தாண்டி
தமிழரின் கற்பனை வளம் பிரமிப்பூட்டும். அதில் குறிப்பாக யாளி.
யாளியைப் பற்றிய புராணக்கதைகளும் உண்டு.
சங்க இலக்கியத்தில் வரும் ஆளி தான் யாளி, (ஆனை தான் யானை என்பது போல) என்ற கருத்தும் உண்டு.
டைனசர் போல யாளியும் உயிருடன் வாழ்ந்து அழிந்துப்போன
 உயிரினமா?னு கேட்டா ,… 
அதற்கான தரவுகள் எதுவும் நம்மிடமில்லை.
என் மகனின் பார்வையில் யாளி இந்தியன் டிராகன்.

யாளி தமிழரின் கற்பனைத் திறனின் உச்சம் .
யாளி வெறும் கற்பனையின் வெளிப்பாடு மட்டுமல்ல,
அது நம் மெய்யியல் வெளிப்பாடு என்று தமிழ்நேயம் 
மெய்யியல் தலைப்பில்
எப்போதோ வாசித்த கட்டுரை நினைவுக்கு வருகிறது.

யாளி விலங்குமல்ல, மனிதனுமல்ல தேவனுமல்ல
பறவையுமல்ல பூச்சியும் அல்ல..
அது நிற்பது விண்ணிலும் அல்ல மண்ணிலும் அல்ல
நீரிலும் அல்ல நிலத்திலும் அல்ல.
மாறாக நிலம் நீர் ஆகாயம் , பறவை விலங்கு மனிதன்
இவை அனைத்தையும் ஒருசேர இணைத்து பார்த்த தமிழனின்
கற்பனையின் வெளிப்பாடு யாளி.
பிரபஞ்சத்தின் உயிரியக்கத்தின் குறியீடு யாளி.
மனிதன், மனிதனின் அறிவாற்றல், மனிதனின் காதல், அழகு, வீரம்
என்ற மனித மையப்பார்வையைக் கடந்து பயணித்த தமிழனின் கலைப்பயணம் நம் யாளி.
இந்த பிரபஞ்சத்திற்கு தமிழன் வழங்கிய பரிசு யாளி

Harry potter, lord of the rings, game of the thrones,, ஏகப்பட்ட aliens movies…
என்று இன்று கற்பனையில் தொழில்நுட்பத்துடன் காட்டப்படும்
சினிமாக்களைப் பார்க்கும் போதெல்லாம் யாளி என் முன்
கம்பீரமாக …என்னை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.

4 comments:

  1. .வாழ்க..வளர்க..அன்புடன் ஸ்ரீநாத். ஒரு மூத்த சாமான்ய எழுத்தாளன்..பாக்யா இதழில் சாருடன் இருக்கிறேன்.வலைபதிவு நண்பர்களின் பதிவுகளை அச்சில் கொண்டுவர கரம் நீட்டுபன்.வாருங்கள்..srrinath@yahoo.com, 8428672556.

    ReplyDelete
  2. 2017

    .வாழ்க..வளர்க..அன்புடன் ஸ்ரீநாத். ஒரு மூத்த சாமான்ய எழுத்தாளன்..பாக்யா இதழில் சாருடன் இருக்கிறேன்.வலைபதிவு நண்பர்களின் பதிவுகளை அச்சில் கொண்டுவர கரம் நீட்டுபவன்.வாருங்கள்..srrinath@yahoo.com, 8428672556.

    ReplyDelete
  3. கோயிலுக்கு சென்றதில்லை...அதனால் யாளி என்ற அழகியல் தெரியவில்லை.........

    ReplyDelete