Sunday, March 31, 2019

ராகுல்காந்தியின் கதகளி !

rahul gandhi in wayanad க்கான பட முடிவு
.கேரள இட துசாரிகளை எதிர்ப்பது என்ற
ராகுலின் முடிவு மதச்சார்பற்ற, முற்போக்கு
சாயங்களை வெளுக்க வைத்துவிட்ட து.

·         மோதிக்கு எதிராக வாக்களியுங்கள் என்றால் அந்த
வாக்குகள் இந்த ராகுலுக்கு ஆதரவான வாக்குகள்.
எனவே… எந்த முகத்தை வைத்துக் கொண்டு
மோதியுடன் மோதப் போகிறார்கள்? இந்த ராகுலை
வைத்துக் கொண்டா?

·         ராகுல்காந்தி தான் அடுத்தப் பிரதமர், ராகுல்காந்தியைப்
பிரதமராக்கியே தீருவேன் என்று நம்ம ஊரு தளபதியின்
சூளுரை இட துசாரிகளை எதிர்க்கும் ராகுலுக்காக என்பது
தர்மச் சங்கடமான விஷயம்.
தளபதிக்கு வேண்டுமானால் அவர் சூளுரைகள்
ஒலிக்குப்பைகளாக இருக்கலாம். ஆனால் அவருடன்
தமிழகத்தில் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ளும்
சிவப்புக் கொடி தோழர்களுக்கு இது பெரிய அடி.

நமக்கு மோதி மீது அறிந்தோ அறியாமலோ
விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். மோதியின்
இந்துத்துவ நம்மை அச்சுறுத்தலாம். ஆனால்
இவை அனைத்தையும் விட நாம் கவனிக்க வேண்டிய
முக்கியமான உண்மை … மோதியை எதிர்க்க
ராகுல்காந்தி சரியான நபரில்லை!
மோதி இளம்வயதிலிருந்தே அவர் விரும்பிய கருத்து
தளத்தில் பயணித்தவர். அதற்கான பயிற்சிகள் எடுத்தவர்.
தன் உடல் உள்ளம் எண்ணம் செயல்பாடு என்று
தன் கருத்து தளத்தை நோக்கி பயணப்படும்
ஆற்றலைக் கொண்டவர்.
ஆனால் ராகுல் காந்திக்கு இதில் எதுவுமே இல்லை.
அதற்கான சூழலில் அவர் வளரவில்லை என்றாலும்
அவர் தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கவே
இல்லை! இந்த உண்மையை இனியும் கைப்பிடி
சோற்றில் மறைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற
முடியாது.
மயிற்கூச்செறியும் விவாதங்களை இத்தருணத்தில்
வைக்க வேண்டாம், அது மோதிக்கு ஆதரவாக
மாறும் என்று என்னை எப்போதும் எச்சரிக்கும்
தோழர்கள் என்னை மன்னிப்பார்களாக.

#Rahulji@Wayanad

Friday, March 29, 2019

இலக்கிய டவுட்டுகள்

தேர்தல் தான் சூடா இருக்குனா
இலக்கியமுமா..
இந்தச் சூடு தாங்காம எம்புட்டு டவுட் வருது பாருங்க எனக்கு!

டவுட் 1
திராவிட இயக்கத்தின் வாரிசுகளுக்கும்
அவர்களின் கவித்துவ அங்கீகாரத்திற்கு
காலச்சுவடு தேவைப்பட்ட து.
ஏன்?

டவுட் 2
திராவிட இயக்கத்தார் எழுதியதெல்லாம்
இலக்கியமல்ல என்று கையில் கம்புடன்
அலைந்தவர்களும்
அதே திராவிட அரசியல் பிரபலங்களின்
மேடைகளை அலங்கரிக்கவும் தவறவில்லை.
இது ஏன்?

டவுட் 3
மலையாள இலக்கிய பிரமுகர்களை
அணுகுவதற்கும்
தமிழ் இலக்கியவாதிகளை அணுகுவதற்கும்
வேறு வேறு அளவுகோல்கள் ..
இது ஏன்?

டவுட் 4
இந்த மேடைகள் அடையாளம் காட்டுபவர்கள்
இலக்கியவாதிகளே இல்லை என்று
சொன்னவர்கள் யார் யாரை இலக்கியவாதிகள்
என்று அடையாளப்படுத்தினார்கள்?
யார் யாரை அயல் நாட்டிற்கு கொண்டுபோய்
இதுதான் எங்கள் இலக்கியம் என்று
அறிமுகப்படுத்தினார்கள்?
அதெல்லாம் உண்மையில் இலக்கியமா?
இலக்கிய அரசியல் வாதிகளை எதிர்த்தவர்கள்
இலக்கிய அரசியல்வாதிகளை விட
மோசமான சில முன் உதாரணங்களைக்
கொடுத்திருக்கிறார்களே…
இது ஏன்?
ஆகையினால் பொதுஜனம் கேட்டுக்கொள்வது என்னவென்றால்...
இலக்கிய பீடங்களுக்கு ஒரு வேண்டுகோள்..
யாரும் இலக்கியத்தைப் பிடித்து நிறுத்த
வேண்டாம். அது தானே நிற்கும்.
நிற்காட்டியும் தமிழ்த்தாய் ஒன்றும்
தற்கொலை செய்து கொள்ள மாட்டாள்!

Wednesday, March 27, 2019

TEARS OF THE SUN

TEARS OF THE SUN -
சூரியனின் கண்ணீர்..
tears of the sun க்கான பட முடிவு


ஆஹா .. இந்தத் தலைப்பு தான்
இப்படத்தைப் பார்க்க வைத்தது. அதன் பின்
சூரியனின் கண்ணீர் என்னைச் சூடாக்கி சூடாக்கி
இரும்பை உருக்கியது..
எல்லா ஹாலிவுட் படங்களைப் போலவே
இதுவும் டுமீல் டுமில் படம் தான்.
உலகத்தில் யாரும் செய்ய முடியாத தை
எப்போதுமே அமெரிக்க வீர ர்கள் செய்து
முடிப்பார்கள் என்ற அதே மசாலா தான்.
புருஷ் வில்லிஸ் படங்களின் வரிசையில்
இதுவும் ஒரு படம். இப்படியாக இருந்தாலும்
இந்தப் பட த்தில் வரும் ஒரு வசனம்
என்னைத் தொந்தரவு செய்கிறது!
அந்த வசனம் ரொம்பவும் கனமானதாக
எனக்குள் .. விரிகிறது.
சினிமாவில் கண்ட ஆப்பிரிக வானமும்
மலையும் மண்ணும் ஈழமாக விரிகிறது
அமெரிக்க வீர ர்கள் இந்திய வீர ர்களாக
என் கற்பனைக்குள் மாற்றம் பெறுகிறார்கள்.
நான் இன்னொரு காட்சி திரையை
மனவெளிக்குள் நட த்திக்கொண்டு
என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன்.
சில நேரங்களில் அறிந்தே தன்னைத்
தானே ஏமாற்றிக் கொள்வது கூட
சுகமாகத் தான் இருக்கிறது.
அது என்ன வசனம்……..?
கொஞ்சம் பொறுங்கள் முதலில்
சூரியனின் கண்ணீர் கதையைச் சொல்லி
விடுகிறேன்.
சூரியனின் கண்ணீர் என்ற இத்தலைப்பு தான்
இத்திரைப்படம் பார்க்க வைத்த து.
ஆப்பிரிகாவில் உள் நாட்டுப் போர் அபாயம்
சூழ்ந்தக் காலத்தில் அங்கிருக்கும் அமெரிக்க
பிரஜைகளைக் காப்பாற்றி அமெரிக்க அழைத்து
செல்வது தான் வீர்ர்களுக்கு கொடுக்கப்பட்ட
வேலை. ஆனால் டாக்டர் லினா தான் மட்டும்
அவர்களுடன் வர மறுக்கிறாள். தன் கவனிப்பில்
இருக்கும் 70 நோயாளிகள் காயம் பட்டவர்களையும்
விட்டுவிட்டு வரமாட்டேன் என்று முடிவு செய்கிறாள்.
கதைப் போக்கில் காடுகளுக்குள் காயம்பட்ட
ஆப்பிரிக்க மக்களுடன் பயணிக்கும் போது
அந்த வீர ர்களிடம் இருக்கும் மனிதம்
விழித்துக் கொள்கிறது…
டாக்டரை மட்டும் அழைத்துவரும் வேலையைச்
செய்யாமல் டாக்டரும் சேர்ந்து அனைவரையும்
அழைத்துவரும் திட்ட த்தை அமெரிக்க அதிகாரி
எதிர்க்கிறார். இப்போது அடுத்த என்ன செய்வது
என்று முடிவு எடுக்க வேண்டும்.
தன் சகாக்களுடன் புரூஷ் வில்லிஸ் பேசுகிறார்.
அவர் குழுவில் இருக்கும் இன்னொரு அமெரிக்க
வீர ர் , கறுப்பினத்தைச் சார்ந்தவ ஈமான் வாக்கர்
சொல்லும் வரிகள்..
those Africans are my people too.
For all the years that we were told
to stand down and to stand by...
...you're doing the right thing.
என்பார்.
அதற்கு புரூஷ் சொல்லுவார்...
FOR OUR SINS

வரலாற்றில் அதிகாரம் செய்த துரோகங்கள்
குற்றங்களுக்காக ...
அதே அதிகார வெளியிலிருந்து ஒரு குரல்
ஒலிக்கும் போது..
சூரியனின் கண்ணீர் ... சூடாகவே இருக்கிறது.

Monday, March 25, 2019

ஜெயலலிதா VS நயன்தாரா

ஜெயலலிதா நயன்தாரா க்கான பட முடிவு
ஜெயலலிதா என்ற பெண்ணுக்கு கிடைக்காத நீதி
நயன்தாரா என்ற பெண்ணுக்கு கிடைத்துவிட்ட து.
மகிழ்ச்சி.
அன்றைய திமுக தலைவர் கலைஞர் செய்யாததை
இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் செய்திருக்கிறார்.
வாழ்த்துவதில் தயக்கமில்லை!
தேர்தல் களம்..விளையாட்டு மைதானத்தில்
வீசப்பட்ட பந்து ராதாரவியின் பேச்சு.
அவுட் ஆகிவிடக்கூடாது என்பதில்
கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.
வீசிய பந்தைப் பிடித்து அதையும் விட
வேகமாக வீசி தனக்கு சாதகமாக்கிக் கொள்வது
என்பது உண்மையில் சாணாக்கியத்தனம்
அதற்காக ஸ்டாலினைப் பாராட்ட வேண்டும்.

 சரவணா..
இப்போது நீ கேட்கப்போகும் கேள்வி என்ன
என்று எனக்குத் தெரியும்.
ராதா ரவியின் பேச்சுக்கு கைதட்டும் தமிழர்களை
அவர்களின் ரசனையை யார் உருவாக்கினார்கள்?
யார் வளர்த்தார்கள்! என்று தானே..
ம்ம்ம்
யானறியேன் பராபரமே..!


Saturday, March 23, 2019

FIREBRAND MOVIE

firebrand movie review க்கான பட முடிவு
FIREBRAND – feminist movie
இப்படித்தான் இத்திரைப்படம் குறித்த
விமர்சன ங்கள் வெளிவந்தன.
பெண்ணிய திரைப்படம் என்ற அடையாளமே
இத்திரைப்பட த்தைப் பார்க்க வேண்டும்
என்ற ஆவலைத் தூண்டியது. இன்னொரு காரணம்
இத்திரைப்பட த்தில் நடித்திருக்கும் நடிகை usha Jadav.
பிரியங்கா சோப்ரா தயாரித்திருக்கும் இத்திரைப்படம்
பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு
சமர்ப்பணம் என்று சொல்கிறது. 

திரைக்கதையும் இது தான். 
பள்ளிக்கூடம் போகும் வயதில் மாணவியை
ஒருவன் பாலியல் வல்லாங்கு செய்கிறான்.
அது அவளுடைய குற்றமல்ல.
ஆனாலும் சமூகத்தின் அவமானப் பார்வையைத்
தாங்க முடியாமல்  பெற்றோர்கள் அவளை
அனாதையாக விட்டுவிட்டு  போய்விடுகிறார்கள்.
 நீதிமன்றமோ அப்பெண்ணைக் கூண்டில் ஏற்றி
பலமுறை வல்லாங்கு செய்கிறது. அவர்களின்
கேள்விகள் அவளைத் துகிலுரிக்கின்றன.
தொண்டு நிறுவனத்தின் ஆதரவில் படித்து
வக்கீலாகும் அவள் மணமுறிவு வாங்கிக் கொடுப்பதில்
வெற்றி பெற்ற டைவர்ஸ் வக்கீலாக பெயர் எடுக்கிறாள்.
அவளைப் பற்றி அனைத்தும் அறிந்த அவள் தோழன்
அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.
அவர்களின் திருமண வாழ்வில் கணவன் மனைவி
உடலுறவு அவளுக்கு பாலியல் வன்முறையாகவே
தொடர்கிறது. கணவனின் உடல் அக்கணத்தில்
அவளை வல்லாங்கு செய்த அந்த ஆணின் உடலாக
மாறி .. அவர்கள் உறவை கேள்விக்குறியாக்கும்
நிலைக்குத் தள்ளுகிறது. காதல் கணவனும் தன்னுடைய
இந்தப் பிரச்சனையால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
திருமண உறவை முறித்துக்கொண்டு நண்பர்களாகவே
இருக்கலாம் என்று அவள் நினைக்கிறாள்.
ஆனால் அவன் அவளுடைய கடந்த காலத்தை
அவள் மறக்க வேண்டும் என்பதற்காக அவளுடன்
போராடுகிறான். மருத்துவர் உதவியை நாடுகிறார்கள்.
மருத்துவர் அவளுக்கு நட ந்த தை எல்லாம் தினமும்
எழுதி கண்ணாடி முன்னால் நின்று வாசிக்கச் சொல்கிறார்.
தினமும் எழுத எழுத வாசிக்க வாசிக்க…
எழுத எழத வாசிக்க வாசிக்க…
அது அவளிடமிருந்து விலகி ஒரு கதையாகிவிடுகிறது.
அந்த இரவில் அவளைச் சந்திக்க வரும்
இன்னொரு ஆடவனுடன் அவள் தன்னை மறந்து
உடலுறவு கொள்கிறாள்.
அக்காட்சி வரும் போது..
மனம் படபடக்கிறது.
எல்லா சினிமாக்களிலும் காட்டுவது போல
கணவன் இப்போது வரப்போகிறான்
கதவைத் திறக்கப்போகிறான் என்று
 நினைக்கிறோம். ஆனால் அப்படி எதுவும்
நடக்கவில்லை.
ஊருக்குப் போன கணவனை உடனே வரச்
சொல்லுகிறாள்.
அவளிடம் ஒரு மாற்றம் இருப்பதை அவனும்
உணர்கிறான். அவளும்  நடந்த அனைத்தையும்
சொல்கிறாள்.
மாதவ்… நீ எப்போதும் சொல்வாயே..
காதல் வேறு, உடலுறவு வேறு என்று.
நேற்று அதை உணர்ந்தேன்…
ஓர் ஆணுடலும் பெண்ணுடலும் மட்டும்
நேற்றைய உறவில் இருந்த தை உணர்ந்தேன்.
அவ்வளவு தான். அதில் காதல் எதுவுமில்லை”
என்று சொல்லும் போது…
அவன் அவளைக் கட்டி அணைத்துக் கொள்கிறான்.

ஆண் பெண் உடலுறவில்
காதல் இல்லை என்றால் அது வெறும்
இரு உடல்களின் பசி, ஹார்மோன் களின்
வேலை.. “
காதலுடன் நடக்கும் உடலுறவு  தான்
ஆண் பெண் உடலுறவுக்கான அர்த்தம்..
இப்படியாக நான் புரிந்து கொண்டேன்.

பாலியல் வன் கொடுமை என்பது
அதை அனுபவித்த பெண்ணின் வாழ்க்கையை
அவள் உறவுகளிலும் நினைவுகளிலும்
கடைசிவரைத் துரத்திக் கொண்டே தான்
இருக்கிறது.
சுன ந்தாவின் கணவன் கதைப்பாத்திரம்
ஒரு கனவுப்பாத்திரமாகவே ..இருக்கிறது.
சுன ந்தாக்களுக்கு இம்மாதிரி கணவர்கள்
வாய்ப்பார்களா?

அவளும் நேருவும்

இலக்கியவேல் மாத இதழில்  " அவளும் நீங்களும்"
என்ற தொடர் எழுதுகிறேன்.
அவளைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்தப் பக்கங்கள்,'
 தெரியாதப் பக்கங்கள், நீங்கள் கண்டும் காணாமல்
புரட்டும் பக்கங்கள், நீங்கள் காண மறுக்கும் பக்கங்கள்,
நீங்கள் கண்டு கொண்டாலும் அவள் பார்வையை
புரிந்து கொள்ள மறுக்கும் பக்கங்கள்...
இப்படியாக அவளும் நீங்களும்...
 நம்பிக்கையுடன் நீங்கள் வாசிக்கலாம்..
காரணம்.
அந்த உரையாடல் அவளுக்கானதல்ல
உங்களுக்கானது தான்.

மார்ச் இதழில்
அவளும் நேருவும்

Archana Balmukund Sharma
அவளும் நேருவும்

அவள் வாழ்ந்த இட த்தையும் வாழ்ந்த
வாழ்க்கையையும் கொண்டாட முடியாதுதான்.
அவளைக் கொண்டாடுவதும் நம் நோக்கமல்ல.
அவள் அந்த இட த்தில் அவளைப் போல
வாழ்ந்தப் பெண்களுக்கு வழிகாட்டியாக
இருந்தாள் என்றும்  சொல்ல வரவில்லை.
. ஆனால் பாதுகாப்பாக இருந்தாள்.
பெண்ணுடலைப் பேசும் பெண்ணியத்தளம்
அப்பெண்களின் பாதுகாப்புகளைப் பற்றிப்
பேச வேண்டிய அவசியத்தை உணரவில்லை.
உடல் உழைப்பையும் உழைப்பாளர்களின்
உரிமையையும் முன் நிறுத்தும் தொழிற்சங்கங்களில்
அப்பெண்களுக்கான உரிமைகள் பேசப்பட்ட து இல்லை.
நுகர்ப்பொருளின் தரத்தையும் பாதுகாப்பையும்
முதன்மைப்படுத்தும் முதலாளித்துவம்
இந்த நுகர்ப்பொருட்களை ஜடப்பொருளாக க் கூட
தங்கள் சந்தை வணிகத்தில்  கணக்கு வைப்பதில்லை..
அதனால் தான் தங்களின் பாதுகாப்புக்காக
தங்களின் உரிமைகளுக் காகப் போராடிய
அவளைக் காமட்டிபுரம் தங்களின் காவல் தெய்வமாக
கொண்டாடியது.
இன்றும் காமட்டிபுரத்தின் விளக்குகள் மின்னும்
குடிசைகளில் அவள் புகைப்படம் பூஜைக்கு
உரியதாக மாட்டப்பட்டிருக்கிறது.

அவளும் அவர்களில் ஒருத்தியாகத்தான் வாழ்ந்திருக்கிறாள்.
அவளும்  நம்மைப்போல ஒரு குடும்பத்தில் (குஜராத்தில்)
பிறந்து வளர்ந்தவள். காதல், கற்பு, ஒழுக்கம் , நியாயம்
தர்மங்களைப் பேசும் குடும்பம்.. எல்லா பெண்களையும்
போல பதின்ம வயதில் அவளுக்கும் காதல் வருகிறது.
காதல் தான் எத்தனை அழகானது.
கவித்துவமானது. புனிதமானது..
அவளும் காதலித்தப் போது அப்படித்தானே
நினைத்திருப்பாள். ஆனால் அவளுடைய காதல்
அவளைக் காமட்டிபுரத்தில் தள்ளியது.
அவள் காதலனே அவளை விற்றான்.
இப்படித்தான் அவள் அந்த தொழிலுக்கு வருகிறாள்.
ஆனால் அவள் தன்னைப் போல
இத்தொழிலுக்கு தள்ளப்படும் பெண்களுக்காக
போராட முன் வருகிறாள்.
அவள் குரல் தனித்து ஒலிக்கிறது.
கங்குபாய் சொல்கிறாள்…

“ நீங்கள்  நினைக்கலாம். இதை
எல்லாம் நாங்கள் விரும்பிச் செய்வதாக.
நான் சொல்வதை நம்புங்கள்.
எங்கள் தொழில் ஒன்றும் நீங்கள்
நினைப்பது போல அவ்வளவு எளிதானதல்ல.
நம் தேசத்திற்காக எல்லையில் நின்று
தொடர்ந்துப் போராடும்  படைவீர ர்கள்
இருப்பதால் தான் நீங்கள் நிம்மதியாக
இருக்கிறீர்கள். ஒருவகையில் நாங்களும்
அவர்களைப் போலத்தான். எங்கள் உடல்
ஆண்களின் மிருக இச்சைக்கும் அதீத
காமப்பசிக்கும் தீனிப்போட்டுக்கொண்டே
இருப்பதால் தான் உங்கள் பெண்கள்
பாதுகாப்பாக இருக்கிறார்கள். நிம்மதியாக
நடக்கிறார்கள்…”

தூய்மைவாதம் பேசுபவர்களுக்கு கங்குபாயின்
சொற்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இன்றும் பெண்ணிய தளத்தில் கங்குபாய்
முன்வைத்த இக்கருத்து விவாதப் பொருளாகவே
வலம் வருகிறது.
காமட்டிபுரத்திற்கு வந்துச் செல்லும் ஆண்கள்
தங்கள் முகமூடியைக் கழட்டுவதே இல்லை!

இத்தொழிலில் இப்பெண்களுக்கு இலவசமாக
கிடைப்பது பால்வினை வியாதியாகத்தான்
இருக்கிறது. கருக்கலைப்பின் மாத்திரை
மருந்துகளைத் தாண்டியும் இப்பெண்கள்
பிரசவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம்
குறித்து யாருக்கும் கவலை இல்லை.
இப்பிரச்சனைகளை முன்வைத்து போராடிய
கங்குபாய் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற
வேண்டும் என்று
பாரதப் பிரதமர் நேருவைச் சந்திக்கிறாள்.

இத்தொழில் செய்யும் பெண்களைச் சந்திக்கும்
எல்லோரும் சொல்லும் அறிவுரைகளைத்தான்
நேருவும் அவளிடம் சொல்கிறார்.
அவளும் நேரு சொல்வதை எல்லாம்
கேட்டுக்கொள்கிறாள்.
நேருவிடம் கேட்கிறாள்..

“எனக்கும் நீங்கள் சொல்வதைப் போல
வாழ்வதற்கு ஆசை தான்.
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு
நான் தயாராகத்தான் இருக்கிறேன்.
யார் தருவார்கள் அந்த வாழ்க்கையை!
நீங்கள் என்னைத் திருமணம் செய்து
கொள்வீர்களா பண்டிட் ஜீ ?”

நேரு அவளிடம் என்ன பதில் சொல்லி இருக்க
முடியும்? !
அவர் சட்டையில் குத்தியிருந்த ரோஜாக்களின்
முட்கள் முதல் முறையாக அவரிடம் எப்போதும்
நிரம்பி இருக்கும் வசீகரமான புன்னகையை
காயப்படுத்தின.

இப்பெண்களின் வரலாறு காளியின் கோரதாண்டவத்துடனும்
தசாராவின் கொண்டாட்ட்த்துடனும் முடிந்துவிடுவதில்லை.

தசாரா பண்டிகையின் போது தீமைகளை
அழித்தொழிக்க 9 நாட்களும் பூமிக்கு வரும்
தேவியரின் (காளி, கொற்றவை) சிலைகளைச்
செய்ய இந்தப் பெண்களின் வீட்டிலிருந்து
ஒரு பிடி மண் … வேண்டும். கங்கைக் கரையிலிருந்து
மண், பசுமாட்டின் மூத்திரம், பசுவின் சாணம்,
இத்துடன் இந்தப் பெண் கொடுக்கும் அவள்
பாதம் பட்ட அவள் வீட்டு ஒரு பிடி மண்
எடுத்து தேவியின் சிலைகள் செய்யப்படுகின்றன..
கோவில் பூசாரியோ அல்லது சிலை செய்பவரோ
அப்பெண்கள் வாழும் தெருவுக்குப் போய்
அவள் வீட்டு வாசலில் காத்திருந்து
அவள் மறுத்தாலும் கெஞ்சிக் கேட்டு
பெற வேண்டும். ஏனேனில் அவள் தரும்
ஒரு பிடி மண் கிடைக்கவில்லை என்றால்
தேவியின் சிலை பூரணத்துவம் பெறாது.
இந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது.
இது ஏன்?
இதற்காக சொல்லப்படும் காரணங்கள் எத்தனை
இருந்தாலும்..
அத்தனையும் புனைவுகளின் தந்திரங்களாகவே
இருக்கின்றன.

பெண்வழிச் சமூகம் மாறி சமூகத்தின் தலைமை இடம்
ஆண் கையில் மாறும் போது பெண்ணின் விவசாய
நிலமும் உற்பத்தியும் ஆண் வசமாகிறது.
மருதம் கொடுக்கும் உற்பத்தி வளம்
சொத்து மதிப்பாக மாற்றம் பெறும் போது
அதை தனக்குப் பின் தன் வாரிசு மட்டுமே
அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.
இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை
திருமண உறவில் உறுதி செய்யப்படுகிறது.
இந்த ஏற்பாட்டை எதிர்க்கும் பெண்களை
ஆண்களின் அதிகாரம் விலக்கி வைக்கிறது.
இப்பெண்கள் ஒரு பெண்ணுக்கான சிறப்பும்
தகுதியும் அடையாளமும் திருமணம் என்று
மாற்றப்படுவதை எதிர்க்கிறார்கள்.
அப்பெண்ணுடலை இழிவுப்படுத்திய ஆண்மைய
அதிகார சமூகம்
தாய்ச்சமூகத்தின் அறிவாகவும் ஆற்றலாகவும்
வலிமையாகவும் இருந்தப் அப்பெண்களை
அவ்வளவு எளிதில் மறந்துவிடவில்லை.
அதன் எச்சமாகத்தான் அப்பெண்ணின்
ஒரு பிடி மண்ணில் தேவியின் ஊர்வலங்கள்
இன்றும் தொடர்கின்றன.
பெண்ணுடல் வரலாற்றில் நடக்கும் இந்த
முரண்பாடு.. மகிசாசுரணின் வத த்தில்
முடிவு பெற முடியாமல் தொடர்கிறது.