Tuesday, March 19, 2019

தமிழகத் தேர்தல் களம்

<அவர் கட்சியிலேயே சிலர் தோற்பது தான்
அவருடைய எதிர்கால அரசியல் தலைமைக்கு
நல்லது..>
தமிழகத் தேர்தல் களத்தை முக நூல்/வாட்ஸ் அப்
பதிவுகளில் பாய்ந்தோடும் வாழ்த்துகளை
வைத்துக்கொண்டு தீர்மானித்துவிட முடியாது
என்ற புரிதல் இருப்பவர்கள் மேற்கொண்டு
வாசிக்கலாம்.
தேர்தல் கூட்டணி உருவானதில்
காங்கிரசு புத்திசாலித்தனமாக விளையாடி
இருக்கிறது. யார்ப் பக்கமோ போகப்போவதாக
சிலரைச் சந்திப்பதும் சிலரை அழைத்து போட்டோ
எடுத்து போடுவதுமாக திமுக வுக்கு
ஓர் அச்சத்தைத் திட்டமிட்டு உருவாக்கியது.
அத்திட்டத்தின் வெற்றி தான் காங்கிரசுக்கு
கூட்டணியில் கிடைத்திருக்கும் அதிக எண்ணிக்கையிலான
இடங்கள். அதில் பாதித் தொகுதியிலாவது வெற்றி
பெறுவார்களா என்பது அவர்களுக்கே ஐயப்பாடு
உண்டு!
இபிஎஸ் ஓபிஎஸ் ஆட்சியில் தெர்மாகோல்
போட்ட தைக் கூட நகைச்சுவையாக எடுத்துக்
கொண்டு இருவருமே காரியத்தில் இறங்கினார்கள்.
ஊடகத்தில் கோமாளிகள் போல விமர்சிக்கப்பட்ட
இவர்கள் இருவரும் கூட்டணி விசயத்தில்
ரொம்பவும் திறமையாக விளையாண்டு
இருப்பது கவனத்திற்குரியது. எடப்பாடி
ஊடகம் கேலி செய்து கட்டமைத்திருக்கும்
பிம்பம் அல்ல என்பதை நாம் கவனித்தாக
வேண்டும். பிஜேபிக்கு குறைந்தளவு சீட்டுகளைக்
கொடுத்த எடப்பாடி, பாமகாவை தன் பக்கம்
இழுப்பதில் கவனம் செலுத்திய எடப்பாடி,
இப்படியாக இந்த இரட்டையரும்
களத்தில் நன்றாகவே முதல் ஆட்டத்தை
ஆடி முடித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் சிறுபான்மையினராக இருக்கும்
முஸ்லீம்களுக்கு (6 விழுக்காடு)
திமுக, அதிமுக இரண்டு
பெரிய கட்சியிலும் வேட்பாளர்களே
இல்லை! முஸ்லீம் என்றால் முஸ்லீம் லீக்
நபர் என்ற அடையாளத்திற்குள் அடைத்துவிடும்
வழியை இவர்கள் இருவருமே மவுனமாகச்
செய்திருக்கிறார்கள்.
அதிமுகவை விட
திமுக வுக்கு எப்போதும் போல
பன்முகப் பிரச்சனைகள்
இருக்கின்றன. ஈழப்பிரச்சனையைப் பேசி
திமுக வின் ஓட்டு வங்கியை யாரும்
பிரித்துவிட முடியாது என்று அவர்கள்
சொல்வதையே நாமும் நம்புகிறோம்.
ஆனால் காங்கிரசு ஆட்சியில் மத்தியில்
மிக நெருக்கமாக இருந்த கட்சி திமுக.
வலுவான அமைச்சர்கள், தலைவரின் மகள்
என்று கொடி கட்டிப் பறந்தவர்கள்.
அவர்கள் இத்தேர்தல் அறிக்கையில்
நாங்கள் வெற்றி பெற்றால்
இமயத்தில் கல் உடைப்போம்
கங்கையில் மண் எடுப்போம்
என்று எவ்வளவு தான் கவர்ச்சிகரமாகச்
சொன்னாலும்… சொன்னாலும்…
ஆட்சியில் இருந்தப் போது செய்யாத தை/
செய்ய முடியாத தை/
இனி எப்படி செய்யப்போகிறீர்கள் ????????
இந்தக் கேள்வி பொதுஜன களத்தில்
பிரமாண்டமாய் நிற்கிறது..
இதற்கான எந்தப் பதிலும் திமுக கூட்டணியில்
இல்லை. இல்லை,
களத்தில் நிற்பவர்கள் களப்பணி செய்தவர்கள்
பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தார்மீக க்
குரல் கொடுத்தவர்கள் இவர்கள் எவருக்கும்
வேட்பாளர்களாகும் தகுதிகள் இல்லை.
களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் யார் யார்?
அவர்களுக்கும் கட்சிக்குமான தொடர்பு என்ன?
இக்கேள்வி ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களிடமும்
அடித்தளத்தில் எரிதழலாய் எரிந்துக் கொண்டிருக்கிறது!
இது எப்படி எதிர்வினையாற்றும் ?
இதை இப்போது சொல்ல முடியாது என்பதை
ஒத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு
இந்த உளவியலை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
திமுக வுக்கும் திமுக வின் தலைமை திரு ஸ்டாலின்
அவர்களுக்கும் இன்னும் சில பிரச்சனைகள்
இத்தேர்தலில் இருக்கின்றன.
அவர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி
பெற்றால் அது திமுக வின் வெற்றியாக இருக்கலாம்.
ஆனால் ஸ்டாலின் அவர்களின் எதிர்கால
அரசியலுக்கு ?
கட்சியிலேயே சிலர் தோற்பது கூட
ஸ்டாலின் அவர்களுக்கு நல்லது தான்!(
(சரவணா... இது என்ன நிலைமையடா...!!1)
இக்களத்தில் மிக சமார்த்தியசாலி
ஊடகங்கள் அதிகம் கவனிக்காத
டிடிவி தினகரன் அவர்கள் தான்.
காற்றடிக்கும் திசையை அவர் சரியாகவே
கணித்திருக்கிறார். வெற்றி தோல்விகளுக்கு
அப்பால் பிற கட்சிகளின் வெற்றி தோல்விகளையும்
கூட அவர் கட்சியின் வேட்பாளர்கள் தான்
தீர்மானிக்கப் போகிறார்கள்.
அதிமுக வுடன் கூடுமானவரை நேரடி போட்டிகளைத்
தவிர்த்து அதிமுக ஓட்டு வங்கியை மிகத் திறமையாக
கையகப்படுத்தும் தினகரனின் அரசியல்
இனி கவனிக்கப்பட வேண்டியதாகிறது.
சில கட்சிகள் அவர்கள் வாங்கிய சூட்கேஸ்களை
பூட்டி வைத்துக் கொள்வது அவர்களின்
எதிர்காலத்திற்கு நல்லது.
காரணம் அடுத்து வரும் தேர்தல்களில்
அவர்களை யாரும் அழைக்கப்போவதில்லை!
இதுவும் நடக்கும்.

1 comment:

  1. அருமையான கருத்து
    காலம் பதில் சொல்லுமே!

    ReplyDelete