Wednesday, August 4, 2010

பாலியல் தொழிலாளர்கள்



மின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனுமதிக்கப்படாத நிறைய விளம்பரங்கள் மின்சாரவண்டிகளில் பார்க்கலாம். சேல்ஸ் கேர்ள் வாண்டட் என்ற விளம்பரத்திலிருந்து "எங்கள் மசாஜில் உங்களுக்கு முழுத்திருப்தி
கிடைக்கும், வீட்டுக்கு வந்து மசாஜ் செய்ய தனிக்கட்டணம்.."
இத்தியாதி சில விளம்பரங்களைப் பார்க்கலாம்.
இந்த விளம்பரங்கள் பெரும்பாலானவை
(பெரும்பாலானவை.. விதிவிலக்குகள் உண்டு)
பாலியல் தொழில் சார்ந்த விளம்பரங்கள் என்பதுதான் அதிர்ச்சி தரும்
உண்மை.

பாலியல் தொழில் குறித்து நாம் வெளிப்படையாக பேசவோ எழுதவோ
தயக்கம் காட்டியதில் சில நியாயங்கள் இருந்தன. நம்மில் பலர் -நான்
உள்பட - ஆண்-பெண் உறவு என்பது அவரவர் தனிப்பட்ட விசயம்.
இதைப் பற்றி சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் பேசுவது அவசியமில்லை
என்றெல்லாம் நினைத்ததும் உண்டு. ஆனால் இன்று பாலியல் என்பது
தனிநபர் சார்ந்த விசயமல்ல.
எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு அரசு செலவு செய்யும் தொகை,
கர்ப்பத்தடைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை,
அமெரிக்கப் பெண்கள் நிராகரித்த பெண்கள் கருத்தடைச் சாதனத்தை
இந்தியப் பெண்களுக்கு 'ஆஹோ ஓஹோ '
என்று புகழ்ந்து அறிமுகம் செய்த இந்தியச் சந்தை..
இப்படியாக ஆண்-பெண் உறவு என்பதும் , பாலியல் தொழில் என்பதும்

அரசு கவலையுடன் கவனிக்க வேண்டியதாகி உலகியல் சந்தையாகி
..என்னவெல்லாமோ ஆகிக்கொண்டிருக்கிறது
.
இந்தச் சூழலில் இவைச் சார்ந்த செய்திகளையும் உண்மைகளையும்
சமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டிய
தருணம் வந்துவிட்டது.

மின்சாரரயில்கள் விளம்பரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தப் போது
இதைப் பற்றிய கள ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கும்
மராத்திய எழுத்தாளர், தோழி கவிதா மகாஜன் நிறைய உண்மைகளைப்
பகிர்ந்து கொண்டார்.







*மும்பை காமட்டிபுரம் 1889ல் வெள்ளையருக்காக உருவாக்கப்பட்டது.
1928ல் அரசு லைசன்ஸ் வழங்கப்படது. 1950ல் லைசன்ஸ் ரத்து செய்யப்படது.
100000 பேர் இத்தொழிலில்.


* பாண்டூப் மேற்குப் பகுதியில் சோனாப்பூரில் பாலியல் பெண் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் இருப்பிடத்தின் அமைப்பு:
ஒரு நீளமான வராந்தா. கடப்பா கல்மேடை. அந்த கல்மேடைதான் கட்டில்.
அப்பகுதி தகரத் தடுப்புகளால் அறைகளாக மாற்றப்பட்டிருக்கும். அந்த அறைகளில் இருவர் நிற்க முடியாது. கல்மேடைக்கு கீழே பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் உடந்தைகள். என்ன பெரிதாகா..இரண்டு பைகள் இருக்கும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 வாடிக்கையாளர்கள் வருவார்கள்
என்கிறார் அந்தப் பெண்.

*பாலியல் தொழிலை நடத்தும் பெண் முதலாளி அந்தப் பெண்கள் கர்ப்பமாக
அனுமதிப்பதில்லை. ஆனால் அதையும் மீறி குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே அவர்களில் சிலர் விரும்புகிறார்கள். ஏனேனில் அவர்களுக்கு என்று உரிமை எதுவுமில்லை. அவர்கள் உடல் கூட அவர்களுக்கானதாக இல்லை.
தாய்-குழந்தை என்ற ஓர் உறவு அவர்களுக்கான ஓர் உரிமைச் சார்ந்த
உணர்வாக இருக்கிறது.

*கர்ப்பம் தரித்திருப்பதை அவர்கள் குறைந்தது 5 மாதமாவது மறைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டால் கர்ப்பம் கலைக்கப்படும்.

* இப்படிக் குழந்தைக்குத் தாயான பெண் ஒருத்தி தினமும் தன்னிடம் மட்டுமே
வரும் வாடிக்கையாளரை ஒரு நாள் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லி
இருக்கிறார். வெளியில் வந்தவுடன் வாடிக்கையாளரைக் காணவில்லை.
சிறிதுநேரத்தில் தன் குழந்தையையும் காணவில்லை என்பதைக் கண்டு
அதிர்ச்சியில் தேடி இருக்கிறார். குழந்தை கல்மேடைக்கு கீழே
கிடைத்தது.. குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வழிய.
தொண்டைக்குழி வரை குழந்தைக் காயத்துடன். மருத்துவ உதவிக்கு
போனபோது குழந்தையின் நிலமையைக் கண்ட மருத்துவர் மயங்கி
விழுந்தார்.. !கொடுமையிலும் கொடுமை. நம் கற்பனைக்கு அடங்காத
மிருகக்கொடூரம்.

*ஆண் பாலியல் தொழிலாளர்கள்
-----------------------------------
*மும்பையில் அதிகம் ரேட் வாங்குபவர்கள் இவர்கள்

*விளம்பரம், சினிமா ஆசை என்று வந்தவர்களின் மறுபக்கம் இது.

*ஒரு நாளைக்கு 5000 முதல் 50000 வரை வாங்குகிறார்கள்.

* விடுமுறை நாட்களில் மொரிசியஸ், பாங்காக் என்று அழைத்துச்
செல்லப்படுகிறார்கள். அதற்குத் தனி சார்ஜ் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

* மேல்தட்டு வர்க்க பெண்களுக்கான உடல் தேவையாகவே இவர்கள்
பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே 40 வயதுக்குப் பின்
பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அல்லது பிச்சை எடுக்கும் குரூப் லீடரிடம் விற்கப்படுகிறார்கள்.

பாலியல் தொழிலிருந்து மீட்கப்பட்ட சில பெண்கள் மீண்டும் அத்தொழிலுக்கே
வந்துவிட்டார்கள் என்பதும் இன்னொரு அதிர்ச்சியான உண்மை.

மண், பெண்ணுடல், நிறுவனமயம் என்ற புத்தகத்தில் ம.செந்தமிழன்
அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவு வருவதற்கு
முன் பல ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண்களில் ஒரு சாரார்
ஓர் ஆண்+ ஒரு பெண் சமூக கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்தார்கள்
என்றும் அவர்கள் தான் பரத்தையர் என்றும் எழுதி இருக்கிறார்.
இன்று நாம் கொள்ளும் பரத்தையர் - உடலைப் பணத்திற்காக
விற்கும் பாலியல் தொழில் செய்வோர். ஆரம்பத்தில் அப்படி இல்லை
என்கிறார்.

பாலியல் தொழில் இன்று நேற்று உருவானதல்ல. எல்லா நாடுகளிலும்
அனைத்து நாகரிகச் சமுதாயத்திலும் இத்தொழில் தொடர்ந்து வந்திருக்கிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பாலியல் உறவுகள் குறித்தக் கிளுகிளுப்பும்
சிலருக்கு மிருக உணர்வுகளின் மரபணு தொடர்ச்சியும் இருக்கிறது.
வார, மாத, நாளிதழ்களில் எப்போதும் யாருமே எழுதி அனுப்பாத
மருத்துவர் கேள்வி - பதில் பகுதி வெளிவந்துக் கொண்டுதானிருக்கிறது!
கிட்டத்தட்ட 98% வாசகர்கள் என்னவொ அப்படியே மேம்போக்காக
அந்தப் பக்கத்தைப் புரட்டுகிற மாதிரி பாலியல் சார்ந்த கேள்வி பதில்களை
வாசிக்கத்தான் செய்கிறார்கள்.

அண்மையில் சமூகம் அங்கீகரிக்காதப் பாலியல் உறவு சார்ந்த செய்திகள்
அதிகமாகப் பத்திரிகைகளில் வருகின்றன. குறிப்பாக தந்தை- மகள்
பாலியல் கொடுமை. இவைகளுக்கான காரணங்களை உள ரீதியாகவும்
புற காரணிகள் ரீதியாகவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

----------------------

17 comments:

  1. பாலியல் தொழில் என்பது சர்க்கரை பூசப்பட்ட வார்த்தையாகத் தெரிகிறது. விபசாரம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். இது குறித்த தோழர் மதிமாறனின் பதிவு இங்கே: http://mathimaran.wordpress.com/2010/04/28/article-301/

    ReplyDelete
  2. மன்னிக்கவும், முந்தைய பின்னூட்டத்திலிருப்பது வேறு பதிவுக்கான சுட்டி. சரியான சுட்டி இது: http://mathimaran.wordpress.com/2010/03/25/article291/

    ReplyDelete
  3. so we can expect sonapur penkal kathai from u very soon.

    ReplyDelete
  4. super post like it...
    keep up the GOOD WORK :-)

    ReplyDelete
  5. super post like it...
    keep up the GOOD WORK :-)

    ReplyDelete
  6. விபச்சாரம் ஒரு சமூக சீர் கேடு என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதனை பாலியல் தொழில் என அங்கீகரித்தல் ஆணாதிகத்தின் மற்றொரு பக்கம்.

    ReplyDelete
  7. நினைக்கவே பயங்கரமான விசயங்களை எழுதி இருக்கிறீர்கள்.. மாதவி

    ReplyDelete
  8. //சமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டிய
    தருணம் வந்துவிட்டது.//

    எங்கே மாதவி.. ம்ம்ம்

    இவர்களைப் பற்றி விமர்சிக்கும் கூட்டம்.. கரிசனம் இருப்பதைப்போல நடிக்கும் கூட்டம்... இவர்களை வைத்து விளம்பரம் சேர்ர்கும் மற்றொரு கூட்டம்... இது தானே நடந்து வருது..ம்ம்ம்

    பாலியல் தொழிலாலர்களின் மனதில் படிந்து கிடைக்கும் சலிப்பை போக்கவே நமக்கு பல நாட்கள் ஆகும்...
    பாலியல் தொழிலாளர்கள் பற்றிய செய்தி வந்தால் பெரும்பாலோனோர் அது எப்பேர்பட்ட செய்தியாக இருக்குமென்ற ஆர்வத்தினாலே படிக்கிறார்களே ஒழிய... அக்கறையால் அல்ல...

    அவர்களுக்கும் நம் எல்லோரையும் போலவே உரிமை கோரும் உரிமை இருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம் ம்ம்ம்ம்

    ReplyDelete
  9. விபச்சாரம், விபச்சாரம் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை.. இதை ஒரு தொழிலாக செய்பவர்களை விமர்ச்சிக்க நமக்க்கு யாருக்கும் உரிமை இல்லை... விபச்சாரம் விபச்சாரி போன்ற feminising the issue முற்றிலும் அகற்றப் படவேண்டும்..

    ReplyDelete
  10. இதுக்கு தொடர்பான ஒரு பதிவு கூடுதல் thought propagation பண்ண...

    புவனேஸ்வரிகள் பேசா (*தேவைப்*) பொருட்களா?

    உங்களுத படிச்சிட்டு திரும்ப வாரேன்...

    ReplyDelete
  11. விபச்சாரம் என்பது எந்த ஏட்டில், எந்த பதத்தில் பாவிக்கப்பட்டு பின்பு அங்கீகரிக்கப்பட்டது....

    அவங்களோட தேவை என்ன என்பது அவங்களுக்கே நன்கு தெரியும்
    நம்மை விட..

    காசுக்காக உடலுறவில் ஈடுபடுவது மட்டும் விபச்சாரம் இல்லை..

    ReplyDelete
  12. கட்டுப்படுத்த முடியாத தொழில்களை முறைப்படுத்தலாம், அதைத்தான் அரசுகள் செய்யவேண்டும்.

    ReplyDelete
  13. அருமையான கட்டுரை

    ReplyDelete
  14. சோனாபூர் பெண்கள் குறித்து ஒரு கள ஆய்வு
    செய்யுங்கள். உண்மை ரொம்ப வலிமையானது

    ReplyDelete
  15. மிக அருமையான கட்டுரை.. உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளது.. பெண்ணால் எழுதப்பட்டது கூடுதல் வலு சேர்க்கிறது.. உண்மையில், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை தர வேண்டும்.. அவர்களை விமர்சிப்பதை, கைது செய்து அழகிகள் என்று பத்திரிக்கையில் செய்தி போடுவதைத் தவிர்த்து - அவர்களது மீட்புக்கும், அதனைத் தொடர்ந்த வாழ்வுக்கும் வழி செய்ய வேண்டும்.. விருப்பப்பட்டு வந்தால் பரவாயில்லை.. ஆனால், ஏமாற்றப்பட்டோ அல்லது வறுமையின் காரணமாகவோ வந்தால், அந்தக் காரணிகளை நிவர்த்தி செய்வதே நீண்ட கால நலனுக்கு வழிவகுக்கும்.. நன்றி..

    ReplyDelete
  16. விபச்சாரம் என்ற சொல் பெண்ணுடன் மட்டுமே தொடர்புடையதாக எல்லோரும்
    நினைக்கிறோம்.
    அதனால் தான் ஆண் பாலியல் தொழிலாளர்கள் பற்றியும் குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  17. பாலியல் தொழில்ன்னு ஏன், கௌரவப் படுத்துற மாதிரி பேசணும், 'காமப் பசி தீர்க்கும்' மனிதர்கள் அல்லது அடிமைகள் ன்னு சொல்றது தான் சரி,
    புனே புதவார் பேட் என்ற இடத்தை கடக்க நேர்ந்தது, அது ஒரு காலைப் பொழுது, மணி ஒன்பது இருக்கும்,
    காலையிலேயே, பெண்களை அலங்கரித்து, வாசலில் அமர்த்தியுள்ளார்கள்,
    யார் காமத்தையாவது தீர்த்தால் தான், அவர்களுக்கு உணவு என்ற தகவல் அறிந்த போது, மிக்க அதிர்ச்சி . . .
    இத்தனைக்கும், அருகிலிருக்கும் லக்ஷ்மி ரோடு இந்தச் சுவடுகள் ஏதுமின்றி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பது, நிதர்சனமான முரண், ஆனால் உண்மை.
    இத்தனைக்கும் கலாசாரத்தில் மேலோங்கிய நாடு . . . அட போங்கைய்யா . .

    ReplyDelete