வம்சத்தின்
பெயர் கேட்டு அலைகிறது
என் வானத்தில்
தனித்துவிடப்பட்ட நிலவு.
யுத்தப்பூமியில்
சிதறிவிழுந்த
ரத்த துளிகளில்
புதைந்துக்
கிடக்கும்
பரம்பரை வம்சத்தின்
கோரமுகத்தை
எப்படித்
தோண்டி எடுக்கட்டும்?
காற்றில்
பறந்த போர்க்கால ஒப்பந்தங்கள்
முறிந்து
விழுந்த கிளைகளின் நடுவில்
வண்ணத்துப்
பூச்சிகளை மறந்த
மலர்களின்
கூட்டம்.
எத்தனைக்
கோடி மகரந்தப் பொடிகள்!
எது விழுந்த்தோ
எது கலந்த தோ
கண்களை இறுக
மூடிக்கொண்ட து காற்று.
என் மண்ணில்
முளைக்கிறது
உதிர்ந்த
இலைகளின் எதிர்காலம்
யாருக்கு
வேண்டும்
இங்கே விதைகளின்
விலாசம்?
யுத்தக்களமே
என் பிரசவ
பூமியானதால்
என் பிள்ளைகள்
துறக்கட்டும்
வம்சங்களின்
பெயர்களை.!
எதிரிகளின்
பிள்ளைகள் என்பதைவிட
என் பிள்ளைகளாக
மட்டுமே
இனிஷியல்
இல்லாமல்
இருந்துவிட்டுப்
போகட்டும்.
யுத்தங்கள்
இல்லாத
தேசங்களின்
வரைபட த்தை
தந்தையர்
வதம் செய்து
அவர்களே வரையட்டும்..
(ஐந்திணை
கவிதை தொகுப்பிலிருந்து )
(இக்கவிதை
..நான் சந்தித்த வார்மதர்ஸ் களுக்காக)
No comments:
Post a Comment