Friday, March 29, 2019

இலக்கிய டவுட்டுகள்

தேர்தல் தான் சூடா இருக்குனா
இலக்கியமுமா..
இந்தச் சூடு தாங்காம எம்புட்டு டவுட் வருது பாருங்க எனக்கு!

டவுட் 1
திராவிட இயக்கத்தின் வாரிசுகளுக்கும்
அவர்களின் கவித்துவ அங்கீகாரத்திற்கு
காலச்சுவடு தேவைப்பட்ட து.
ஏன்?

டவுட் 2
திராவிட இயக்கத்தார் எழுதியதெல்லாம்
இலக்கியமல்ல என்று கையில் கம்புடன்
அலைந்தவர்களும்
அதே திராவிட அரசியல் பிரபலங்களின்
மேடைகளை அலங்கரிக்கவும் தவறவில்லை.
இது ஏன்?

டவுட் 3
மலையாள இலக்கிய பிரமுகர்களை
அணுகுவதற்கும்
தமிழ் இலக்கியவாதிகளை அணுகுவதற்கும்
வேறு வேறு அளவுகோல்கள் ..
இது ஏன்?

டவுட் 4
இந்த மேடைகள் அடையாளம் காட்டுபவர்கள்
இலக்கியவாதிகளே இல்லை என்று
சொன்னவர்கள் யார் யாரை இலக்கியவாதிகள்
என்று அடையாளப்படுத்தினார்கள்?
யார் யாரை அயல் நாட்டிற்கு கொண்டுபோய்
இதுதான் எங்கள் இலக்கியம் என்று
அறிமுகப்படுத்தினார்கள்?
அதெல்லாம் உண்மையில் இலக்கியமா?
இலக்கிய அரசியல் வாதிகளை எதிர்த்தவர்கள்
இலக்கிய அரசியல்வாதிகளை விட
மோசமான சில முன் உதாரணங்களைக்
கொடுத்திருக்கிறார்களே…
இது ஏன்?
ஆகையினால் பொதுஜனம் கேட்டுக்கொள்வது என்னவென்றால்...
இலக்கிய பீடங்களுக்கு ஒரு வேண்டுகோள்..
யாரும் இலக்கியத்தைப் பிடித்து நிறுத்த
வேண்டாம். அது தானே நிற்கும்.
நிற்காட்டியும் தமிழ்த்தாய் ஒன்றும்
தற்கொலை செய்து கொள்ள மாட்டாள்!

No comments:

Post a Comment