இது சாதாரணமான நிகழ்வு தான்.
எல்லா இடங்களிலும் நடப்பது தான்.
ஆனால் இதை எல்லாம் எப்படி சாதாரணமாக
கடந்துப் போவது?
என் குடியிருப்பின் மாடிப்படிகளை அவன் தண்ணீர் விட்டு
கழுவி விட்டிருக்கிறான். சலவைக் கற்கள் பளபளக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன் கட்டாயம்
இப்படிக் கழுவுவது அவன் வேலை.
அடுக்குமாடிக் கட்டிடம். வேலை அதிகம் தான்
அதனாலோ என்னவோ அவன் மனைவியும்
சேர்ந்து வந்திருந்தாள்.
அது மட்டுமல்ல ஒவ்வொரு தளத்திலும் கழிவறை
வசதிகளும் உண்டு. அதையும் மறக்காமல் கழுவி
விடுவார்கள். காலையில் ஆரம்பித்தால் பிற்பகல்
தாண்டி மாலை வரை நீடிக்கும்.
இதோ.. சிறார்கள் பட்டாசு வெடிக்கிறார்கள்.
தற்போது பட்டாசுகளின் அளவு குறைந்திருக்கிறது என்றாலும் வெடிக்கத்தான் செய்கிறார்கள். நாளையும் நாளை மறுநாளும் தோட்டமெங்கும் கட்டிடத்தின் சுற்றுப்புறம் எங்கும்
பட்டாசு வெடிகளின் கழிவுகள் சிதறிக்கிடக்கும்.
அதை அவர்கள் தான் பெருக்கி எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு நாங்கள் அனைவரும் மறக்காமல்
தீபாவளி டிப்ஸ் கொடுத்துவிடுவோம்.
இது எல்லாம் எல்லா இடங்களிலும் நடப்பது தான்
என்கிறீர்களா..?
அப்படித்தான் நினைக்கிறேன் நானும்.
ஆனாலும் என்னவொ நெருடலாகவும்
குற்ற உணர்வாகவும் இருக்கிறது.
அவனுடனும் அவளுடனும் சேர்ந்து வந்திருந்த
அவர்களின் மகனைப் பார்க்கும்போது.

உண்மை அவர்களும் மனிதர்கள்தானே... வேதனைதான்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி
Delete
ReplyDeleteஎப்போது அடுத்தவர்களின் செய்கைகளை பார்த்து மனது நெருட ஆரம்பிக்கிறதோ அப்போது அடுத்தவ்ரகளின் உணர்வை புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டோம்
நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்யலாம்.
ReplyDeleteம்ம் செய்யலாம். ஆனால் பிரச்சனை அதுவல்லவே. வரவுக்கு நன்றி.
Deleteநெஞ்சில் அறையும் உண்மை!
ReplyDeleteஆம். ஆனால் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். பழகிவிட்டது நமக்கு. ... மிக்க நன்றி.
Deleteமகனுடன் என்ற வரி வலி தருகிறது..
ReplyDelete