நானும் ரஜினிகாந்தை ரசிக்கும் ஒரு புள்ளி உண்டு.
இப்போதும் அவர்
அதில் தனித்து நிற்கிறார்.
அவர் சினிமா உலகின்
சில நட்சத்திர பிம்பங்களை
பொதுவெளியில் உடைத்தவர்.
அதற்கு தனித்துணிச்சல்
வேண்டும். அது
எப்படி வந்தது???
சினிமா நடிகர்
என்றால்…
சிவப்பா இருக்கனும்.
முகச்சுருக்கமே
இருக்க முடியாது.
நரைமுடி அவர்களுக்கு
எட்டிக்கூடப் பார்க்காது.
எப்பொதும் பளபளனு
இருக்கனும்
அதைத் தொடர்ந்து
காப்பாற்றியாகனும்.
இப்படி எல்லாம்
திரையில் மட்டுமல்ல
பொதுவெளியிலும்
தன்னை மேக்கப்புடன்
காட்டுவதில் அதீத
அக்கறை கொண்டிருக்கவேண்டும்.
இதெல்லாம் ரொம்ப
ரொம்ப முக்கியம்.
ஆனால் இவை அனைத்தையும்
உடைத்தவர்
ரஜினிகாந்த் மட்டும்
தான்.
அவர் பொதுவெளியில்
முன்வழுக்கையுடன்
மேக்கப் போடாத
முகத்துடன் ஏறி நிற்கிறார்.
அவருடைய ரசிகர்கள்
அதைக் கொண்டாடி
விசில் அடிக்கிறார்கள்.
அப்போதுமட்டும் அவருடைய
ரசிகர்களையும்
எனக்குப் பிடிக்கிறது.
சரவணா… சிரிக்காதே!
இதில் கொண்டாடவும்
ரசிக்கவும் என்ன இருக்கிறது?
என்று நினைக்கிறாயா..?
தமிழ் நாட்டில்
தலைவர்கள் இன்றும் தலையில்
“விக்” அணிந்து
கொள்கிறார்கள்.
இந்த விக் அணியும்போது
காதோரம்
நரைத்த மயிர் (அது
என்னய்யா..கிருதாவா)
எட்டிப்பார்ப்பது
கொஞ்சம்
விசித்திரமாக இருக்கிறது.
இன்னும் சில இரண்டாம்
மூன்றாம் நிலை
தலைவர்கள்… வயிற்றை
பெல்ட் போட்டு இறுக்கி
மூச்சடக்கி போட்டோவுக்கு
போஸ் கொடுப்பது
அதைவிட பரிதாபமாக
இருக்கிறது.
தலைவர்களின் தலைமுடி
கலைந்திருப்பதே
இல்லை. (என்ன ஜெல்
பயன்படுத்துகிறார்கள்
என்று தெரியவில்லை!)
இப்படியான சமூகத்தில்
தோற்றம் முக்கியத்துவம்
பெறும் சினிமா
உலகின் (சூப்பர் ஸ்டார்) நடிகர்
அதை உடைத்திருப்பது
அவருடைய தனித்துவம்.
அவருடைய தன்னம்பிக்கை.
இதுவும் அவர் ரசிகர்களின்
உளவியலுடன் தொடர்புடையது
என்பது இதன் அடுத்தக்கட்டம்.
60, 70 வயதில்
நம் நடிகர்கள் இளம்வயது நடிகையுடன்
டூயுட் பாடவைத்து
அவர்களை சினிமா உலகம்
தொடர்ந்து வீணடித்துக்கொண்டிருக்கிறது.
அவர்கள் வயதுக்கும்
அனுபவத்திற்குமான கதைகள்
சினிமா உலகில்
எட்டிப்பார்க்க இயக்கு நர்கள்
அனுமதிப்பதில்லையா?
தெரியவில்லை.
அந்த வகையில் இந்தி
திரையுலகில் நடிகர்
அமிதாப்பச்சனின்
வயதிற்கேற்ற கதைப்பாத்திரங்கள்
உருவாக்கப்பட்டு
அதில் அவர் இரண்டாவது இன்னிங்க்ஸ்
கொண்டாடப்பட்டது.
பாவம் நம் தமிழ் கதா நாயகர்களும்!
நல்லதொரு அலசல்...
ReplyDelete