Showing posts with label POLITICS. Show all posts
Showing posts with label POLITICS. Show all posts

Saturday, August 8, 2026

இந்திய கார்ப்பரேட் ஜனநாயகம்.



வாயைத் திறந்து வலிய வந்து மாட்டிக்கிறதுனா அது இதுதானா!🙂

இப்போ 900 கோடியானு

வாயைப் பிளந்து கேட்டுட்டு

அடேங்கப்பா... நீங்க எம்புட்டு பெரிய ஆளுனு நினைக்கிறதோடு நின்னுட்டா நல்லது சரவணா..

ஆனா.. தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்பி வருகின்றன.


பூதம் 1:

தேர்தல் பத்திரம். Electoral Bonds.

2018- 2024 வரை கார்ப்பரேட்டு கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க செய்த ஏற்பாடு.🙂

இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு விநியோகிப்பார்கள். அது கையில் கிடைத்த 15 நாட்களுக்குள் அந்தப் பத்திரத்தை SBI வங்கியில் பணமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளப்படாத பத்திரங்கள் பிரதமர் நிதியில் சேர்க்கப்படும். 

இந்தப் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகளின் பெயர்கள் ரகசியமாக இருக்கும். இது இந்திய சட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணைய சட்டத்திற்கு எதிரானது என்பதால் உச்ச நீதிமன்றம் இதை தடை செய்தது. அதன் பிறகு தான் SBI தேர்தல் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகளின் பெயர்களை வெளியிட்டது. 


பூதம் 2:


தேர்தல் பத்திரம் முடிந்தால் என்ன!?🙂 இப்போது வந்திருக்கிறது தேர்தல் அறக்கட்டளை. (Electoral Trust) கார்ப்பரேட்டுகள் இந்த அறக்கட்டளையில் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியை செலுத்தி விடுவார்கள். தேர்தல் அறக்கட்டளையிலிருந்து 

அந்த நிதி அரசியல் கட்சிகளுக்கு போய்விடும் 🔥🙂

தேர்தல் அறக்கட்டளை பெற்ற நிதியில் 95% அரசியல் கட்சிகளுக்கு போய்தான் ஆக வேண்டும். 

🔥🔥🔥🔥

இந்த பூதங்களிடமிருந்து நிதி பெற்ற அரசியல் கட்சிகள் எவை? எவ்வளவு நிதி பெற்றன? எந்தக் கட்சி அதிகம் நிதி பெற்றிருக்கிறது?

எல்லா விவரங்களும் கட்சிவாரியாக கார்ப்பரேட்டுகளின் பெயர்களுடன் வெளிவந்திருக்கிறது.

🔥🔥

தேர்தல் பத்திரங்களை மிக அதிகமாக வாங்கிய ஒற்றை நிறுவனம் பியூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம். 1368 கோடி.

இதில்

TMC 540 கோடி

DMK 509

BJP 100

மீதி இதர கட்சிகள்.

🔥🔥

2024-25 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral trust)

மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை மொத்தம் ரூ.3,826 கோடி.

இதில் 3157.65 கோடி பாஜக பெற்றுள்ளது.( தகவல் ADR)

🔥🔥🔥🔥

இதில யாரும் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல.

நிறுவனங்கள் ஏன் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கின்றன?

🙂சும்மா..🙂

இந்திய ஜனநாயக முதலாளித்துவம் என்பது இதுதான்.

Monday, March 4, 2024

ஒரு கோணல் மரத்தின் கதை

     புதிய இந்தியா வரவேற்கிறது. வாருங்கள். வருவதற்கு முன், ஜனநாயக அடிப்படையிலான குடியுரிமை, அடிப்படை உரிமைகள் என்ற சிந்தனைகளைக் கதவுக்கு வெளியே கழற்றி வைக்கவும்

ஸ்டாண்டப் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்டப் இந்தியா, மேக் இன் இந்தியாமாபெரும் நம்பிக்கையைத் தந்த இந்தபுதிய இந்தியாவின் திட்டங்களைக் காணவில்லை! யாரும் தேடவும் இல்லை.

ஏன் இத்திட்டங்களின் நோக்கம் நிறைவேறவில்லை?

இவை ஏன் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை?!

மிகையான விளம்பரங்களுடன் மேடை பேச்சுகளுடன் வெளியான இத்திட்டங்கள் இப்போது எங்கே இருக்கின்றன? அப்படியே இருந்தாலும்

இதன் பயனாளிகள் யார்?

     இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி நமக்கு நம்பிக்கை தருகிறது.

இந்தியாவில் கல்வித்துறை வளர்ச்சியும் இந்தியாவின் திறங்கள் குறித்த வளர்ச்சியும் ஏன் தலைகீழ் விகிதமாக இருக்கின்றன? நம் நாட்டிலிருக்கும் 53% தொழில் நிறுவன ங்களில் வேலை இருக்கிறது என்றாலும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் தேவையான திறன்கள் இல்லை!! எனவே யாரையும் வேலைக்கு எடுக்கமுடியவில்லை என்று இந்திய திறன் அறிக்கை வெட்கமின்றி சொல்கிறது. 2030ஆம் ஆண்டிற்குள் திறன் குறைபாட்டில் ஒரு பெரும் நெருக்கடியை இந்தியா எதிர்கொள்ள வேண்டி இருக்குமென சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்திருக்கிறது. அதன்விளைவாக இந்தியா தன் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) சுமார் 1.6 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் ! ஆனால் அதைப் பற்றி ஆள்வோருக்கு எந்தக் கவலையும் இல்லை. இதுதான்புதிய இந்தியா’ .

     ஒருபக்கம் நம் தரவுகள் கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றன. இணைய கட்டுப்பாடு கண்காணிப்பு என்ற பெயரில் ஜன நாயகத்தின் குடியுரிமை குரல்வளை நெறிக்கப்படுகிறது.

     ஒவ்வொரு பிரச்சனைகளையும் தரவுகளுடன் அணுகி இருக்கிறார் பரகால பிரபாகர். அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள் கூட அதிகாரத்திடம் உண்மையைப் பேச அச்சப்படுகிறார்கள் என்பதை இப்புத்தகம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. புதிய இந்தியா ஒரு கோணல் மரம். இந்த கோணலுக்கு காரணம் ஆளும் கட்சி மட்டுமல்ல, திராணியற்ற எதிர்க்கட்சிகளும் தான்.

     சமகால அரசியலைப் பற்றி பேசுபவர்களுக்கும் எதிர்கால இந்தியாவைப் பற்றி உண்மையான தேசப்பக்தியுடன் அணுகுபவர்களுக்கும் இப்புத்தகம் ஒரு தீர்க்கமான பார்வையைக் கொடுக்கும். பக்கத்திற்கு பக்கம் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய புத்தகமாகவும்  நம்மை அதிகம் யோசிக்க வைக்கும் புத்தகமாகவும் இருக்கிறது.

     இக்கட்டுரைகளை எழுதி இருக்கும் பரகால பிரபாகர் அவர்கள் இன்றைய நம் இந்திய அரசின் நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமனின் கணவர் என்பதையும் ஒரு தகவலாக மட்டும் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. பரகால பிரபாகருக்கும் அக்கட்டுரைகளை தமிழாக்கம்ச் செய்திருக்கும்ப்ரெண்ட்லைன் ஆர், விஜயசங்கர் அவர்களுக்கும் புதிய இந்தியாவின் வாழ்த்துகளும் நன்றியும்.

தமிழில் எதிர்வெளியீடு..

 



Friday, October 6, 2023

பெரியாரியம் > காந்தியம் > கலை இலக்கியம்

 தமிழ் மண்ணில் பெரியாரியம் எந்தளவுக்கு

தமிழ் கலை இலக்கிய வடிவமாக வெளிவந்திருக்கிறது ?

ஏன் பெரியாரியம் மேடைப்பேச்சுகளுடன் ஆரம்பித்து

அதிலேயெ தேங்கி அதைவிட்டு வெளியில் வரமுடியாமல்

மூச்சுத்திணறுகிறது?

இக்கேள்வியை முன்வைத்தவுடனேயே என் தோழர்கள்
கொதித்தெழுவார்கள். சும்மா பொங்குவதால்
அடுப்புத்தான் பழுதடையும்.
இப்படிப் பொங்கிப் பொங்கியே அடுப்பிலிருக்கும்
பாத்திரமும் காலியாகும். வேறென்ன கண்டோம்?
இத்தனைக்கும் திராவிட அரசியல் தலைவர்கள்
னிமா துறையில் கதை வசனம் எழுதியவர்கள்
என்பதும் அதன் ஊடாக அவர்கள்
எதை மேடைகளில் பேசினார்களோ அதையே அவர்களின் கதைப்பாத்திரங்களையும் பேச வைத்தார்கள், அவ்வளவுதான்.
அதைத்தாண்டி பயணிக்கவில்லை.
இதெல்லாம் நேற்று "பரிணயம்" மலையாள திரைப்படம்
பார்த்த முடித்தப்பின் உறுதியானது.



இத்திரைப்படம் 1994ல் வெளிவந்திருக்கிறது.
தங்கள் சமூகத்தில் பெண்களின் பரிதாபமான நிலையை
அவள் உணர்வுகளை ரொம்பவும் துல்லியமாக
கதைப்போக்கில் காட்டி இருப்பார்கள்.
கதைமுடிவில் அப்பெண் தன்னைக் கர்ப்பினி ஆக்கியவனே
அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு
அவன் தான் தகப்பன் என்பதை ஒத்துக்கொள்ள
வரும் காட்சியில்
"இவனில்லை என்பாள் அவள்.
என் பிள்ளைக்கு தகப்பன் தேவை என்றால்
ஒரு நளனோ பீமனோ தகப்பன் என்று
சொல்லிக்கொள்கிறேன்" என்பாள்.
(கதைப்போக்கில் கதகளி ஆடிய மாதவன்
அந்த வேடத்தில் வந்துதான் அவளோடு இருந்தான். )

அதன்பின், அப்பெண் இராட்டையில் நூல் நூற்பதோடு
திரைப்படம் முடியும்.
அவள் காந்தியம் பேசவில்லை,
ஆனால் இக்காட்சி கொடுத்த அழுத்தமும் வீரியமும்
விளக்கமும் அவள் எவ்வளவு வசனங்கள்
பேசி இருந்தாலும் வராது.
இப்படியான வெளிப்பாடுகளை
பெரியாரியமும் கொடுத்திருக்க வேண்டும். ..

சம் திங்க் இஸ் மிஸ்ஸிங்க்.

Thursday, September 14, 2023

அறிஞர் அண்ணாவின் வேண்டுகோள்.




 "என்னைப் பின்பற்றுகிறவர்களும்

நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "

அறிஞர் அண்ணா.
**
உங்களை நாத்திகர் என்கிறார்கள், நீங்கள் நிஜமாகவே
நாத்திகர்தானா?
"இல்லை"
அறிஞர் அண்ணாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நேர்காணல்
மிகவும் முக்கியமானது. பத்திரிகையாளர் ஏ. எஸ். ராமன் அவர்களுடன், அண்ணாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற
இந்த நேர்காணல் அண்ணாவின் மறைவுக்குப் பின்
13/04/1969 இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வெளியாகிறது.
இந்திய தேசத்தின் அறிவுஜீவிகள் வாசித்த,
கொண்டாடிய பத்திரிகை இ.வீ.
ஏ. எஸ். ராமனின் இக்கேள்விக்கு அறிஞர் அண்ணாவின்
தெளிவான பதில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
"மதத்தைப் பற்றிய கேள்விக்கு வருவோம், உங்களை
நாத்திகர் என்கிறார்கள். நீங்கள் நிஜமாகவே நாத்திகர்தானா?
"இல்லை.
நிறுவனமயமாகும் மதங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை
. மதம் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பது
என்னுடைய முடிவு. நான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவன்
. விக்கிரகங்களை வழிபடவும் மாட்டேன்.
விக்கிரகங்களை உடைப்பதை ஆதரிக்கவும் மாட்டேன்."👌
மும்பையிலிருந்து, அதாவது அன்றைய பம்பாயிலிருந்து
வெளிவந்த "சங்கர்ஸ் வீக்லி' இதழில் இந்த வார ஆளுமை
என்ற தலைப்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த
அறிஞர் அண்ணாவின் பேட்டி 5/3/1967
தேசிய இதழில் வெளிவந்திருக்கிறது.
அதிலும் இதே கேள்வி வேறொரு விதமாக.
"உங்களை நாத்திகர் என்கிறார்கள்.
இதற்கு உங்கள் பதில் என்ன?"
அப்படியில்லை. எனக்கு 'உண்மையான நம்பிக்கை' உண்டு.
எனது சேவையையும் பணிகளையுமே வழிபாடாகக் கருதுகிறேன்.
எம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதே
\ எனது நோக்கம். அதே சமயம், அவர்கள் ஆத்திகர்கள்
என்ற போர்வையில் போலி வேடதாரிகளாகிவிடக் கூடாது
என்ற கவலையும் உண்டு.
அடுத்தக் கேள்வியில் தன் கருத்தை தெளிவாக
தன் "சொர்க்கவாசல்' திரைப்படத்தில் முன்வைத்திருப்பதாக
அண்ணா விளக்கம் அளிக்கிறார்.
அறிஞர் அண்ணா தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்களாக
இப்பேட்டியில் சொல்வது ,

சாமர்செட் மாம், பெர்னாட்ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்,
ஹெச். சி. வேல்ஸ், ஆல்பிரட் மார்ஷல்.
அண்ணாவின் வேண்டுகோள் இதுதான்.
"என்னைப் பின்பற்றுகிறவர்களும்
நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "
அறிஞர் அண்ணாவைப் போற்றுகிறேன்.
ஒரு தலைமுறை அவரைப் பின்பற்றியது.
ஒரு தலைமுறை அவர் பெயரை மட்டும்
பிடித்துக் கொண்டது.
இன்று அவர் சிலையாகவும்
அரசியலில் பெயராகவும் மட்டுமே
இருக்கிறார்.
. ****
எனக்கும் என் அரசியலுக்கும்
என்றும் அவரே என் வழிகாட்டி.
என் ஆசான்.
அதனால்தான்
அண்ணாவைப் போற்றுகிறேன்,
இன்று அண்ணாவின் பிறந்த நாள். 15 செப்.











#புதியமாதவி_மும்பை20230915

Tuesday, September 12, 2023

முமபையில் ஒரு பனைமரம்

 


மும்பையில்

உங்களோடுதான் இருக்கிறேன்.

ஆனால் உங்களில் ஒருத்தியாக இல்லை.
இது மும்பையின்
புறக்கணிப்பு அல்ல.
என்மீதும் என் எழுத்தின் மீதுமான
உங்கள் தீண்டாமையும் அல்ல.
என்னை என் தனித்துவத்தை
வேறு எப்படித்தான் காட்டுவீர்கள்?!
நன்றி.
எனக்கே என் அடையாளத்தை
நானே மறந்துப்போனாலும்
அடிக்கடி நினைவூட்டும்
உங்கள் அன்பில்
நனைகிறேன்.
மீண்டும் நன்றி.
உங்கள் மாடித்தோட்டத்தில்
ரோஜாக்கள் பூக்கலாம்.
துளசியைக் கூட வளர்க்கலாம்.
ஆனால் பனைமரங்கள்
முளைப்பதில்லை.
நானும்தான்.
மீண்டும் மீண்டும் நன்றி.

Thursday, September 7, 2023

அண்ணாவின் திராவிடமாடல் 1

 அண்ணாவின் திராவிட மாடல்..



திமுக வின் தலைமையகம் 2/12/1951ல் திறக்கப்பட்டது.
சென்னையில் சொந்தமாக ஓரிடம் வாங்கி அதில் தன்
அரசியல் கட்சியின் தலைமையகம் செயல்பட
வேண்டுமென்பது அண்ணாவின் அன்றைய
கனவாக இருந்த து. கனவு கண்டவுடன் அதை நனவாக்கும்
சூழல் அன்றில்லை. அன்றைய திமுக என்பது வேவேவேறு ..
. திமுக.
    தங்கசாலை தெருவிலிருந்த அண்ணாவின் உறவினர் இல்லத்தில்தான்
திமுக கட்சி அலுவலகம் நடந்து கொண்டிருந்தது.
கட்சியின் ஏடான திராவிட நாடு பணிகளும்
அந்த அறையில் தான் நடந்தன.
கொஞ்சம் கொஞ்சமாக அவர் சேமிப்பும் தம்பிகளின் நிதியுமாக
சேர்த்த ரூ. 13000/ ல் ராயம்புரம், சூரிய நாராயணசெட்டி தெருவிலிருந்த கட்டிடத்தை வாங்கினார்.
திமுகவின் அறிவகம், தலைமைச்செயலகமாக உருவெடுத்தது.
அந்த அறிவகம் திறப்புவிழாவில் திமுகவின் தலைமைச்செயலகத்தை திறந்துவைத்தவர் அண்ணாவின் தம்பி
குமரி மாவட்ட வி.எம்.ஜாண் அவர்கள்.
அன்று குமரி மாவட்டத்தில் திமுகவுக்கு பெரிய
செல்வாக்கெல்லாம் கிடையாது..!
ஜாண் அவர்களைக் கொண்டு திறந்து வைப்பதன் மூலம்
திமுகவின் தேர்தல் வெற்றிக்கு அது எந்த வகையிலும்
தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.
ஆனாலும் அறிஞர் அண்ணா தேர்ந்தெடுத்தவர் வி. எம் ஜாண்
என்பதில் இருக்கிறது அண்ணாவின் திராவிடமாடல்.
வி. எம் ஜாண் அவர்கள் இந்திய சாதி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட
சமூகத்தைச் சார்ந்தவர். ( நன்றி இந்துதமிழ்)
அண்ணாவின் திராவிட மாடல் இங்கிருந்து ஆரம்பமாகிறது.
எந்தவொரு மாற்றமும் முன்னேற்றமும்
எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்
என்பதை தன் கட்சிக்கும்
தம் தமிழ்ச் சமூகத்திற்கும்
இப்படித்தான் உணர்த்தினார் அண்ணா.

Thursday, April 13, 2023

உனக்கு மரணமில்லை.



 I am not in the habit of entering into controversy with my opponents

unless there are special reasons which compel me to act otherwise.

my opponent being the Mahatma himself, I feel I must attempt to

meet the case to the contrary which he has sought to put forth.

அண்ணலின் கட்டுரையை ஹரிஜன் இதழில்
மீள்வாசிப்புக்கு கொண்டுவருகிறார் மகாத்மா.
(ஜட்பட் மண்டலுக்கு தயாரித்து அழைப்பு மறுக்கப்பட்ட
அதே கட்டுரை!)
அது குறித்து காந்திக்கு நன்றி சொல்லும் அண்ணல்
அக்கட்டுரையில் தான் முன்வைத்திருக்கும் எந்தக்
கேள்விக்கும் மகாத்மா பதில் சொல்லவில்லை.
ஆனால் கட்டுரையின் தரவுகள்மீது நம்பிக்கை இல்லை
என்று சொல்கிறார்,
அதைச் சுட்டிக்காட்டும் அண்ணல் அம்பேத்கர்,
தரவுகள் நீங்கள் மதிக்கும் சமஸ்கிருத புலமைமிக்க
திருவாளர் திலகரிடமிருந்து பெற்றவை என்று
பதில் சொல்லி இருக்கிறார்..
மகாத்மாவும் ஹரிஜன் இதழும் இதை
எப்படி எதிர்கொண்டிருக்கும்??
வழக்கம் போல கடந்து சென்றிருக்குமா!?
.
எதையும் கள்ள மவுனத்தில் கடந்து செல்வது
எளிது.
ஆனால் வரலாற்றில் அந்தக் கேள்விகள்
எப்போதும் நிற்கும்?
அதைக் கடந்து செல்ல முடியாமல்
வரலாறுகளை சிதைக்கலாம்.
குடி நீரில் மலம் கலக்கலாம்.
எரிக்கலாம்
புதைக்கலாம்
அட.. என்ன நீங்கள் என்ன செய்தாலும்
அந்தக் கேள்வி
மீண்டும் மீண்டும் முளைக்கும்.
அப்போதெல்லாம்
நீ பிறக்கிறாய்.
உனக்கு மரணமில்லை.
ஜெய்பீம்.

#puthiyamaadhavi_20230414

Friday, January 20, 2023

கருஞ்சட்டை தோழர்களும் அய்யப்ப பக்தர்களும்

 


பெரியாரே கருப்பு சட்டையுடன் வந்தாலும்

அவரும் அய்யப்பன் பக்தராகிவிடுவார்!
கருஞ்சட்டை தோழர்கள் என்னை மன்னிக்கவும்.
விமான நிலையத்தில் கொஞ்சம் அளவுக்கு மீறிய மரியாதையுடனும் புன்னகையுடனும் என்னைப் பார்ப்பதாக நினைத்தேன்.
போர்டிங்க் காத்திருப்புக்கு நுழைவதற்கு முன் பாதுகாப்பு சோதனை செய்த பெண்மணி நான் போர்த்தி இருந்த சால்வையை எடுக்கச் சொன்னார்.
அய்யப்பன் கோவில் போயிட்டு வரீங்களா
என்று கேட்டார்.
என் டுயூப் லைட் வழக்கம்போல எரியல.
ஏன் அப்படி கேட்கறீங்கனு ட்டப்போதான்
அப்பெண் என் சந்தேகத்தை தீர்த்தார்.
கருப்பு கலர் சால்வை போர்த்தி இருப்பதைதான்
அவர் அப்படியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
அது அவர் குற்றமல்ல.
அன்று விமானம் தாமதமாக வேறு கிளம்பியது.
எங்குப்பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள்.
கருப்பு சட்டைப் போட்டுக்கொண்டு
தந்தை பெரியாரே வந்தாலும்கூட
இனி,
சாமியே சரணம் அய்யப்பாதான்.
இப்படி ஒரு கற்பனையில் நானும்
கருப்பு சால்வையைப் போர்த்திக்கொண்டு.
புத்தமத அடையாளங்களை
இந்துமதம் தனக்கானதாக்கிக் கொண்டதாக
படித்திருக்கிறேன்.
இன்றும் அதெல்லாம் தொடர்கிறது.
இது தந்தை பெரியாரின் தோல்வி அல்ல.
பெரியார் அங்கீகாரம் பெற்றுள்ள அதே நேரத்தில்
அவர் தகர்க்க விரும்பிய பலவும் இன்றும் நிலவுவதை
பெரியாரியத்தில் தோல்வியாக கருத முடியாது.
அவர் பெயரை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு
அவர் கருத்துகளை புறக்கணித்துவிடும் இன்றைய
சந்தர்ப்பவாத அரசியலுக்கு அவரைப் பொறுப்பாக்க
முடியாது.
சமூக அரசியலில் கிராம்சி சொல்வதுதான் சரி,
“மரபு வழிபட்ட நிலைபாடுகளுக்கு எதிரான
புதிய நிலைபாடுகளை பெருமக்கள் திரள்
தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்ப முடியாது”
20.10.1945 நாளிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் கருஞ்சட்டைப்படை
குறித்த அறிவிப்பை எடுத்து வாசிக்கிறேன்.
திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படை மாநாடு
11.05.1946, 12.05.1946 ஆகிய நாட்களில் மதுரையில்
நடைபெற்றபோது மாநாட்டுப் பந்தல்
வன்முறையாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
திராவிடர் கழகக் கொடிகள் கொளுத்தப்பட்டன.
மாநாட்டில் பங்கேற்றோர் மீது
வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன.
கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் தோழர்
நிர்வாணமாக்கப்பட்டார்.
கருப்பு ஆடை அணிந்தவருக்கு இதுவும் நடந்திருக்கிறது!
எதையும் முழுமையாக எதிர்த்து நிற்கமுடியவில்லையா
அதையே தனதாக்கி கொள்வதன்மூலம்
அதன் அடையாளத்தை துடைத்துவிடமுடியும்..
இப்போது நானும்..இதை நம்புகிறேன்.
என் வாழ்நாளில் நடந்து கொண்டிருக்கும்
இந்த சமூக அரசியலின்
நான் பார்வையாளர் மட்டும் தானா?!

Sunday, October 16, 2022

காணாமல் போன கண்ணதாசனின் "சேரமான் காதலி"

 


கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’
காணாமல் போனது ஏன்?
கண்ணதாசனுக்கு சாகித்திய அகதெமி விருது
சேரமான் காதலி நாவலுக்காக.!
(இப்படியான சாகித்திய அகதெமி செய்த சேட்டைகள் நிறைய உண்டு)
அவ்வளவுதான்.
அதைப் பற்றி யாருமே பேசமாட்டார்கள்.
பிறகென்ன…?
 
யாருக்குத்தான் பிடிக்கும்!
 
 
உண்மையில் சேரனே அப்படி செய்திருந்தாலும்
அதைப் போயி கண்ணதாசன் எழுதி இருக்கலாமா!???
அதுதானே…
 
கதைப்படி மூன்றாம் சேரமான் பெருமாள் 
முடிசூட்டிக் கொள்ளும்போது
கண்ணதாசன் ஒரு கற்பனை காதலியை உருவாக்கினார்.
அவள் யூதப்பெண் யூஜியானா.
பதவியேற்கும்போது அவள் கர்ப்பவதி.
அரசன் பதவிக்கு அது ஆபத்து என்று நம்பூதிரிகள் நினைக்கிறார்கள்.
எனவே அவளை இஸ்ரேலுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
ஆனால் அதன் பின் சேரமானுக்கு இன்னொரு காதல் வருகிறது.
(வரக்கூடாதா என்ன?)
அரபுக்கப்பலில் வந்து இறங்கும் சலீமாவுடன் காதல்.
இப்போ சலீமா கதைப்பாத்திரம் உண்மையான வரலாறு.
சலீமாவை மணக்க அரசன் இசுலாமியராக வேண்டும்.
சலீமாவை அரசன் திருமணம் செய்து கொண்டால்??
இது யூதக்காதலியை விட ஆபத்தானது என்று
நம்பூதிரிகள் நினைக்கிறார்கள்.
உள் நாட்டு கலகம் வருகிறது.
பாண்டியர்கள் எதிர்க்கிறார்கள்.
அரசனைக் சலீமாவிடமிருந்து விடுவிக்க
யூதக்காதலியை மீண்டும் வரவழைக்கிறார்கள்.
கதையில் திருப்புமுனை…
யூதக்காதலி அரபுக்காதலியை விரட்டிவிடவில்லை.
அரசனின் இரு காதலியரும் தோழியர் ஆகிவிடுகிறார்கள்.
 
கதையின் முடிவில் 
சேரமான் தன் அரசை தன் உடன் பிறந்த சகோதரிகள், தம்பி மற்றும் உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு 
 சலீமாவுடன் கப்பல் ஏறி அரபு நாட்டுக்கு போவதாக முடியும்.
 
அதாவது சேரமானின் காதலி சலீமா..
சலீமாவுக்காக தன் அரியணையை விட்டுவிட்டார் சேரமான்.
கதையில் குலசேகர ஆழ்வாரின் கதை உண்டு.
வைணவம் உண்டு.
கதையில் கண்ணதாசனின் மெய்யியல் 
அதீத புனைவுகள் உண்டு.
 
சேரமான் காதலியில் சேரனின் காதல் வெற்றி பெறுகிறது.
ஆனால்.. என்ன இருந்து என்ன…!
கண்ணதாசனைக் கொண்டாடுபவர்களுக்கும்
கதையின் முடிவு உவப்பானதாக இல்லையோ.
ஆகையினால்,
கண்ணதாசனின் சேரமான் காதலி
காணாமல் போய்விட்டாள். 
 
17 அக்டோபர் , கண்ணதாசன் நினைவு நாள்.
காணாமல் போன
அவருடைய “சேரமான் காதலி”யையும் வாழ்த்துவோம்.
காதல் வாழ்க
சேரமானின் காதல் வாழ்க.
சேரனின் காதலியர் வாழ்க.

Friday, September 16, 2022

கிழவனின் கைத்தடி.

கவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி – உண்மை இதழ்

பெரியாரியம் இலக்கியமாவதில் இருக்கும்
அடிப்படை சிக்கல்களைப் பேசுவதில்லை நாம்.
நம்மையும் அறியாமல் அதை எல்லாம் எழுத்தில்
கொண்டுவருவது இலக்கியமாக முடியாது என்ற
கருத்து நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான் இலக்கிய அந்தஸ்த்தை தீர்மானிக்கும்
வானளாவிய அதிகாரம் எப்போதும் வலதுசாரிகள்
கூடாரத்தில் இருக்கிறது..
அதையும் மீறி பெரியாரியத்தின் சமூக அரசியலை
எழுத்தில் கொண்டுவரும்போது மிக எளிதாக
அதையும் “உரக்கப்பேசும்” கவிதைகள் எப்படி
கவிதைகளாக முடியும் ? என்ற விமர்சனங்கள்
வரும், வந்திருக்கின்றன.
மொழியை வசப்படுத்தும் பயிற்சியில் நாம்
அவர்களைத் தாண்டி பயணிக்கும்போது
அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்
“கள்ள மவுனம்”
இது முந்தைய அடியைவிட அபாயமானது,
பெரும் மன உளைச்சலைத் தரக்கூடியதுதான்.
இந்த “கள்ள மவுனம்” அந்தப் பக்கம் மட்டுமல்ல,
இந்தப் பக்கமும் இருக்கும். இருக்கிறது.
காரணம்.. பெரியார் தான்!
ஜால்ரா போடுவதில்லை.
திராவிட அரசியலை விமர்சிக்க தயங்குவதில்லை.
கூட்டத்தோடு ‘கோவிந்தா’ போடுவதில்லை.
இப்படி எல்லாம் இருந்தால்
கள்ளமவுனம்
வாழும்போதே நமக்கான கல்லறையாக
நாமே தோண்டிக்கொண்ட புதைகுழியாக
இருக்கிறது.
என்ன செய்ய முடியும்..?
சரவணா..
இந்த ஒரு நாளில் மட்டும்
தந்தை பெரியாரைக் கொண்டாடுவதை தவிர.!
புதைகுழியில் சிக்குண்ட
எம் போன்றவர்கள் பலருண்டு.
கிழவனின் கைத்தடியைப் பிடித்துக்கொண்டு
புதைகுழியில் மிதக்கிறேன்.
 
#பெரியாரிய_இலக்கியம்
 
#பெரியாரின்கைத்தடி
 
(செப் 17, 2022. )

 

 

Sunday, August 21, 2022

அபத்தமான கேள்விகள்! திருமா ரசித்தாரா?

 
 

    அபத்தமான கேள்விகளை தொல். திருமா ரசித்தாரா?
அவர் உடல்மொழி சொல்வதென்ன?
எதற்காக நடிகை மீனாவும் ஜெயலலிதாவும் தலைப்பு செய்தியானது?!!!
எப்போதுமே நேர்காணல்களில் வெளிப்படையான மொழியின் அர்த்தங்களைவிட முக்கியமானது அதை வெளிப்படுத்துபவரின் உடல்மொழி.
பல தருணங்களில் அந்த உடல்மொழி, மொழியால் வெளிப்படுத்த முடியாத அர்த்தங்களையும் வெளிப்படுத்தும்..
 
தொல். திருமா அவர்களின் உடல்மொழியிலும் அது வெளிப்பட்டது.
அவர் தன் இரு கை விரல்களையும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். நிதானமாக சிந்தனையுடன் தன் மொழியை வெளிப்படுத்த தன்னை தயார் செய்து கொள்ளும் உடல்மொழியின் வெளிப்பாடு அது!
 
    அடுத்து தன் நேர்காணலில் இருவருக்கும் நடுவில் இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் தன்னை நோக்கிப் பார்த்து சிரிப்பதாக தொல்.திருமா சொல்கிறார். மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உத்திகளில் ஒன்றுதான் அந்த உடல்மொழி. அந்த உடல்மொழியைக் கூட எதிரில் இருப்பவர் அபத்தமாக அணுகுவது ! .. பார்ப்பவருக்கு எரிச்சல் தருகிறது.
 
    சில தலைவர்களின் மனைவியர் +60 அல்லது +70ல் மரணித்துவிடுகிறார்கள். மரணம் இயற்கையானது. ஆனால் இதே இந்த ஆசாமிகள் தனித்திருக்கும் அந்தப் பெரியவரின் 'இல்லாள்" பற்றிய நினைவுகளைக் கொண்டாடுவார்கள். 
சில நேரங்களில் "ஏகபத்னி விரதம்" கொண்டவர் ரேஞ்சுக்கு போய்விடும் இவர்களின்  கொண்டாட்ட  மன நிலை. அப்போதெல்லாம்  நினைக்கமாட்டார்கள் வயதானக் காலத்தில் கவனிக்க துணை இல்லாத ஃபார்முலாவை! அதாவது துணைதான் கூடவே இருக்கும்னு அட்வைஸ் சொல்கிற இச்சமூகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.
இதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்கள் விஷயத்தில் வேற மாதிரி யோசிப்பார்கள். 
    இவர்களுக்கு எப்போதுமே  தங்களை பரபரப்பாக விற்பனை செய்து கொள்ள பெண்கள் தேவைப்படுகிறார்கள்! சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆளுமை தனி மனித உணர்வு அதன் விளைவுகள் இப்படி எதைப் பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை.
 
    அண்மையில்தான் நடிகை மீனாவின் கணவர் மறைவு. அவரைப் பற்றிய ஊடகச்செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் “ நடிகை மீனாவை காதலித்தாரா, திருமா? என்று தலைப்பு செய்தியாக போட்டு “திருமணம் பற்றி மனம் திறக்கும் திருமா !” என்று விளம்பரப்படுத்தி இருப்பது கேவலமாக இருக்கிறது. மீனா மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெண்களைப் பேசி பரபரப்பாக்கி தன்னை விற்றுக்கொள்ளும் இவர்களை என்ன செய்யலாம்?!