Saturday, December 4, 2021

ஓளவையும் மகாகவி பாரதியும்

 

மகாகவி பாரதி விதந்து கொண்டாடிய ஒரு புலவர்

ஒளவை. பாரதி எழுதிய "தமிழ்நாட்டு நாகரிகம்" என்ற

கட்டுரையிலிருந்து சில வரிகள்: 

“ஒரு தேசத்தின் நாகரிகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே

மேலான அடையாளம். திருஷ்டாந்தமாக ஆங்கிலேய நாகரித்துக்கு

ஷேக்ஸ்பியர் முதலிய மஹா கவிகளின் நூல்கள்வ் அளவுக்கருவியாகத்

கருதப்படுகின்றன. ‘நாங்கள் இந்திய தேசத்து ராஜ்யாதிகாரத்தை

இழக்க ஒருப்படுவோமேயன்றி ஷேக்ஸ்பியரை இழக்க

ஒரு நாளும் ஒருப்படமாட்டோம்’ என்று நாம் மறுமொழி

சொல்வோமென்று ‘மெக்காலே’ என்னும் ஆங்கிலேய

ஆசிரியர் சொல்லுகிறார்.

இந்த மாதிரியாக பெருமைப்படுத்தி நம்மவர்

கம்பனைச் சொல்லலாம்;

திருவள்ளுவரைச் சொல்லலாம்;

சிலப்பதிகாரமியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்;

இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும்,

கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே

தம்மனைவரிலும் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்ட

ஒளவைப் பிராட்டியை மிகவும் விசேஷமாக எடுத்துச்

செல்லக்கூடும். “தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம்

இழந்துவிடப் பிரியமா?” என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின்,

“மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும்

பெரிதில்லை, அவற்றைத் தமிழ் நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள

வல்லது. ஓளவைப்ப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும்

சம்மதப்படமாட்டோம். அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத

தனிப் பெருஞ்செல்வம்” என்று நாம் மறுமொழி உரைக்கக்

கடமைப்பட்டிருக்கிறோம். “

                (பாரதியார் கட்டுரைகள் : பக் 323,324 – பழனியப்பா

                     பிரதர்ஸ் வெளியீடு)

 இதை வாசிக்கிற தமிழ் வாசகப்பெருமக்களுக்கு

ஒரு ஷந்தேஹம் வரலாம்.

யாமறிந்தப் புலவரிலே வரிசையில்

மகாகவி பாரதி ஒளவையை மறந்துவிட்டது ஏன்?

ஏன் ? ஏன்?

என்னிடமும் பதில் இல்லை.

ஆனால்…

ஒளவை என் ஆதித்தாய்

என்ற பெருமிதம் என்னை ஆட்கொண்ட

தருணத்தைக் கொண்டாடுகிறேன்.

“யாமறிந்த புலவரிலே ஓளவையைப் போல

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை.

உண்மை;  வெறும் புகழ்ச்சி இல்லை

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம், ஒருசொல் கேளீர்

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

ஓளவை தமிழ் செழிக்கச் செய்வீர்.

ஓளவை பெண்கள் வாழச்செய்வீர்.

ஒளவைகளைக் கொண்டாடுங்கள்.

அவள் உங்கள் ஆதித்தாய்.

அவள் உங்கள் அறிவுத்தாய்.

அவள் உங்கள் பெருமிதம்,

அவள் உங்கள் தமிழ் அமுது.

 

No comments:

Post a Comment