நீ இந்துவா..?
ஆம்..
வா..
நாம் இருவரும் சேர்ந்து இந்து ராஜ்ஜியத்தை
ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம்.வா..
“வருகிறேன். ஆனால் என் கேள்விக்கு மட்டும்
பதில் சொல்.
நீ இந்துவா
?”
என்ன கேள்வி இது..
? நாமிருவரும் இந்து..
“ஆனால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது
அது எப்படி நீயும் நானும் இந்துவாக
இருக்க முடியும் என்று?”
இப்போது தானே சொன்னாய்.. நீ இந்து என்று”
-
ஆம்.. இப்போதும் சொல்கிறேன்.
நான் இந்து தான்
-
என்று. ஆனால் என் சந்தேகம்
எல்லாம் நீ இந்துவா
-
என்பதைப்
பற்றி தான்…
“குழப்புகிறாயே..
குழப்பமில்லை.
என் கடவுளர்கள் எல்லாம் அடர்த்தியான
மீசையும்
கையில் அரிவாளுமாக .. இருக்கிறார்கள்.
அது எப்படி உன் கடவுள்கள் மட்டும்
க்ளீன் ஷேவ் செய்த மாதிரி.. மொழு மொழுனு!
ஷாருக்கான் மாதிரி!
அப்புறம் என் கடவுள்கள் அனைவருமே நான்வெஜ்
சாப்பிடுவார்கள். அவர்களுக்கு பெரிசா
கோவில்
கட்டிடமெல்லாம் வேண்டாம். ஊர் எல்லையில்
கூரையில்லாத வெட்டவெளியில் இருப்பார்கள்.
அது ஏன் உன் கடவுள்களுக்கு மட்டும்
அரண்மனை
மாதிரி கோவில் கட்டனும்னு சொல்ற….
இன்னொரு சந்தேகம்.. என் கடவுள்களின் மனைவியர்
எல்லோரும் எங்க பொம்பளங்க மாதிரி
சிம்பிளா இருக்கிறப்போ
அது எப்படி உன் கடவுள்களின் மனைவியர்
மட்டும்
எப்போதும் ஆபரணம் பூட்டி அலங்காரத்தோடயே
இருக்க முடியுது.. வீட்டில எதுவும் வேலையே
செய்ய
மாட்டாங்களோ..
உன் கடவுளுக்கும் என் கடவுளுக்கும்
தோற்றம்,
நடை, உடை, உணவுப்
பழக்கம்,
உறவு, வழிபாடு, பூசை, பூசாரி, உறைவிடம்,
மனைவியர் , பிள்ளை குட்டிகள்,
சண்டைச் ச ச்சரவுகள்…
இத்தியாதி எதுவுமே ஒன்றுபோலில்லை.
அதனாலே தான் ..
கேட்கிறேன்..
நான் இந்துதான்..
நீ இந்துவா என்று.
இப்போ நீ “ நீ தான் இந்து
“னு
கோர்ட்லே போயி நீ உத்தரவு
வாங்கிட்டு வந்திடுவே!
அப்போ நான் யாரு?
நான் இந்து இல்லைனு ஆயிடும்!
இப்போ.. பாரு
..
சத்தியமா.. என் முண்டைக்கண்ணி
அம்மன் சத்தியாமா
எனக்குப் புரியல..
கோழி அறுத்து பொங்கல் வச்சி
பூசைப் போட்டு
மாடசாமிக்கூட என் மைனி
அருள் வந்து ஆடும் போது
வா..
அவ இந்து தானா ?
என்று கேட்போம்.
என் ஆத்தா..
அவ என்ன சொன்னாலும்
சொல்றது படி கேட்டுக்கறேன்..
அவ..
ஏட்டி.. என்ன கேள்வி கேட்க
வந்துட்டேனு
என்னை ஓங்கி அடிச்சானா
என்ன செய்யறதுனு
எனக்கும் பயமாதான் இருக்கு..
“ஆத்தா.. நீ இந்து தானே னு
பாவிமவன் நீ கேட்டு
அவ மயங்கி விழுந்திட்டானா
போச்சு.. போ..
அது சாமிக்குத்தமாயிடும்.
பாத்துக்கோ.. சொல்லிப்பிட்டேன்.
இப்பவும் கேட்கிறேன்.
நான் இந்து
என்றால்
நீ இந்து வா என்று!
No comments:
Post a Comment