Friday, November 30, 2018

ஜெயமோகனின் வெள்ளையானை


 Image result for வெள்ளையானை

 நாவல் வெளிவந்தவுடன் வாசித்த அடிக்கோடுகள்
இன்றும் அதே புள்ளியில் என்னைக் கொண்டு வந்து
 நிறுத்தி இருக்கின்றன. அந்தப் புள்ளியில் நின்று கொண்டு
மீண்டும் வெள்ளையானையைப் பார்க்கிறேன்.
தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் அதில் மடிந்த இலட்சக்கணக்கான
தலித்துகள் , தொழிலாளர்களின் முதல் போராட்டம்
ஆங்கிலேயர்களை விட தலித்துகளைக் கொடுமை செய்த
ஆதிக்கச்சாதியினர்.. 
இந்த வரலாற்றின் பின்புலத்தை
ஒரு ஆங்கில ஆட்சியின் கேப்டன் ஏயிடன் கதைப் பாத்திரத்தில்
கொண்டுவரும் போது..
புதினத்தின் இறுதிப்பகுதியில்
ஏயிடனுக்கும் காத்தவராயனுக்கும் நடக்கும் உரையாடல்கள்.
இந்த உரையாடல்கள் ஏன்?
யதார்த்த நிலையை மீறிய உரையாடல்பகுதியை
ஜெயமோகன் வைத்திருக்கும் இடம்..
மீண்டும்  மீண்டும்  அதே பக்கங்களை வாசிக்க வைக்கிறது.
ஜெ.மோ என்ன சொல்ல வருகிறார்?
 நான் அதைத் துறந்துவிட்டேன் என்று தன் வைணவ மத
அடையாளத்தை நம்பிக்கையைத் துறந்த காத்தவராயன்
ஏயிடனுடன் பேசும் நீண்ட உரையாடல்
காத்தவராயனுக்கு ஐஸ் ஹவுஸ் தாக்குதல் 
ஏன் விசித்திரமாபிரமையைக் கொடுத்த து
பாயும் குதிரைகளுக்கு நடுவில்
அவன் கண்கள் கண்ட அந்த முகம், அதிலிருந்த நாம ம்..

அது உக்கிரமான பரவசத்துடன் சிதறித் தெறிக்கும் எங்கள்
ரத்த த்தைப் பார்த்து கொண்டிருந்த து. அதன் நாவில் எச்சில்
ஊறிக்கொண்டிருந்த து. நான் அந்த்த் தெய்வத்தைப் பார்த்து
விட்டேன். அது என்ன என்று தெரிந்து கொண்டேன்
தீவிர வைணவ பக்தியில் இருந்தக் காத்தவராயன் தான்
இத்தனையும் சொல்கிறான். அத்துடன் நிறுத்தவில்லை.
தான் இதுவரை நம்பியிருந்த படித்த வைணவத்திற்கு
மாற்றாக அவன் தான் அர்த்தம் புரியாமல் அடிக்கடி
சொல்லியபுண்ணியம்கருணை , தர்ம்ம் என்ற மாற்று
கலாச்சார வடிவத்தை முன்வைக்கிறான்.
அயொத்திதாசரின் இயற்பெயர் காத்தவராயன் என்பதால்
இந்த உரையாடல் பகுதி இன்னும் கனமுள்ளதாகிறது.
ஆனால் அது மட்டுமல்ல..
இந்திய சமூக வரலாற்றில் தர்ம ம் அருளிய  ஞானத்தின் விதை
தோற்கடிக்கப்பட்ட து எங்களைப் போலவேஎன்று
காத்தவராயன் சொல்லும் வரலாற்றில் இந்திய
வரலாறு ஆட்சி அதிகாரம் ஒடுக்கப்பட்டவர்களின்
மறைக்கப்பட்ட கதைகள் போராட்டங்கள் என்று
வெள்ளையானை சொல்லாத இன்னும் சில வரலாற்று
பக்கங்களுக்கு வாசகனை இழுத்துச் செல்கிறது.
சித்தார்தனின் தாய் கனவில் கண்ட தும் வெள்ளையானையைத்
தான்.  ஸ்ரீனிவாச அய்யங்காருக்கு வெள்ளையானை புனிதமானது.
டாக்டர் சொல்கிறார்  வெள்ளையானை என்பது தோல் குறைபாடு
உடையஅல்பினோயானை!

யுதரான ஏசு ரோமானிய அரசனின் முகத்துடன்
வடிவமைக்கப்பட்ட து.. ..வாசகனை இன்னும் ஆழமாக
காத்தவராயன் கண்ட காட்சிக்குள் தள்ளுகிறது.

இங்கே அடையாளங்கள் என்பது வெறும் அடையாளங்கள்
மட்டுமல்ல.
அடையாளங்களின் இரத்தம் தோய்ந்த கதைகளைத்
துடைத்து புனிதப் படுத்தினாலும்
அடையாளம் தன் அதிகாரத்தின் ஆணவமுகத்தை
காலம் தோறும் காட்டிக்கொண்டே இருக்கிறது.
வெள்ளையானை
தம்ம வாழ்வை அழித்தொழித்த வெள்ளையானை
அல்பினோ வெள்ளையானை.
ஆனாலும் வெள்ளையானைஐராவதம் வெள்ளையானை
புனிதமானது.
கருப்பான யுத இனத்தில்/ தீண்டப்படாதவர்
இனத்தில்  பிறந்த ஏசுவுக்கு
அழகான ரோமானிய அரசனின் முகம்..
ஆஹா..
காத்தவராயனுக்கு மட்டுமல்ல..
நமக்கும் புரிந்து விடுகிறது..
வெள்ளையானைஅது என்ன என்று.
(மீள்வாசிப்பு பக் 387 – 398)


1 comment:

  1. ஜெயமோகன் இந்த கதையில் எல்லா இடத்திலும் பார்பனீயத்தையும் மற்ற ஆதிக்க சாதியையும் மயிலிறகால் தடவுவது போல குற்றம் சொல்லி , இங்கு வந்து பல வழிகளில் சமத்துவத்தையும் , கல்வியையும் தந்த வெள்ளைக்காரனை , அவன் கொள்ளை அடித்து போனதை மட்டுமே சொல்லி குமுறுவார். மிக நுட்பமாக பார்ப்பனர் இந்த மண்ணில் சிரித்து வந்த அவலங்களை சொல்லாமல் செல்வார். இது மாதிரி மறைப்பது மிக மிக அநீதி. பார்ப்பான் செய்ததை விட மோசம்.

    ReplyDelete