சர்தார் வல்லபாய்
படேலின் இரும்புக்கரங்கள் தான்
இதையும் செய்தன.
இந்திய வரலாற்றின் இந்தப் பக்கங்களைப்
பற்றிப் பேசப்படவில்லை.
குறிப்புகள் கிடைப்பதில்லை.
562 சமஸ்தானங்களை
இணைத்து ஒன்றுபட்ட இன்றைய
இந்தியாவை
சர்தார் படேல் உருவாக்கியதில் இந்தப் பக்கம்
மட்டும் அச்சிடப்படவில்லை.
ஐதராபாத் சமஸ்தானத்திற்கு
இந்தியா இராணுவம்
அனுப்பிய நாள் 12-9-1948.
அதன் பின்
5 நாட்களில் அதாவது 18-9-1948ல்
நிஜாம் சரணடைந்துவிட்டார்.
ஆனால் இந்திய
இராணுவம் 21-10-1951 வரை
3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியது?
யாரை எதிர்த்து
?! ஏன்?
தெலுங்கனா
பகுதியில் வாழ்ந்த விவசாயிகள்
பண்ணையார்களுக்கு
எதிராகப்
போராடி நிலத்தை கைப்பற்றி விவசாயம் செய்து
விளைந்த தை
தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த
குழு வாழ்க்கையை / சமதர்ம வாழ்க்கையை இந்திய இராணுவம்
எதிர்த்து
போராடியது.. விவசாயிகள் தங்கள் நிலங்களை மீண்டும்
பண்ணையார்களிடம்
கொடுத்தாக வேண்டும் என்று ஆணையை
எதிர்த்து
போரிட்டார்கள். அதுவும் இராணுவப் பயிற்சி இல்லாத
விவசாயிகள்
3 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் போராடி இருக்கிறார்கள்.
இந்திய இராணுவம்
21-10-1951 தன் வெற்றியை அறிவித்தது.
தெலுங்கானாவில்
மலர்ந்திருந்த ஒரு சோஷலிச அமைப்பு முறை
வாழ்க்கை
இப்படியாக இரும்புக்கரம் கொண்டு அழிக்கப்பட்ட து.
இந்த தெலுங்கனா
வரலாற்றை எழுதுவதும் பேசுவதும் அறிந்து கொள்வதும்
இந்தியர்களுக்கு
மறுக்கப்பட்டிருக்கிறது.
(செய்தி ஆதாரம்
“ சிந்தனையாளன் இதழ் நவ 2018)
No comments:
Post a Comment