ME too வின்
அரசியல்
மீ டூ சர்ச்சைக்குள்
ஒலிக்கும் குரல்களை
அடையாளம்
காண வேண்டியதும் இருக்கிறது.
மீ டு இயக்கமாக
வளர்ந்திருப்பது கவனத்திற்கு
உரியதாகிறது.
மீ டூ வை ஆதரிக்கின்றீர்களா என்று
கேட்கும்
என் இனிய தோழியருக்கு தனிப்பட்ட முறையில்
என் கருத்தைச்
சொல்லி இருக்கிறேன்.
பொம்பள வேணாம்
னு சொன்னா அதற்கு அர்த்தம்
வேணும்னு
தெரிஞ்சுக்கோ என்று வளர்க்கப்பட்டிருக்கும்
ஆண் மைய சமூகத்தில்
மீ டூ ஒரு அதிர்ச்சி வைத்தியம் தான்.
அதாவது பெண்
வேண்டாம் என்று சொன்னால்
அதற்குப்
பொருள் “வேண்டாம்.. டாம்” என்பது மட்டும்தான்!
இதை ஆண்கள்
புரிந்து கொண்டாக வேண்டும்.
பாலியல் தொழில்
செய்யும் பெண்ணின் உடலைக் கூட
அவள் விருப்பமின்றி
ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது
என்பது தான்
ஆண் பெண் பாலியல் உறவு நிலை சார்ந்த
இன்றைய பெண்களின்
நிலைப்பாடு.
பெண்ணுடல்
அரசியலை தனிப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் சுய
அனுபவமாக
சுருக்கி விடுவதும் அதுவே பெண்ணியமாகவும்
பெண் விடுதலையாகவும்
திட்டமிட்டு நடக்கும் அரசியல் என்பதை
சமூக அரசியல்
தளத்தில் களத்தில் நிற்கும் பெண்கள்
மிகவும் சரியாகவே
புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மீ டூ வாகட்டும்,
டில்லியில் நிருபயா சம்பவம் நடந்தப் போதும் சரி..
வைக்கும்
கேள்வி ஒன்றுதான்!
பெண்ணுடல்
சாதியின் பெயரால் அனுபவிக்கும்
வன் கொடுமைகளைப்
பற்றி அதன் அரசியல் பற்றி
அந்த அரசியலின்
இன்னொரு முகமாக இருக்கும்
மதங்கள் பற்றி
மீ டூ வுக்கு அக்கறை இருக்கிறதா?
என்று கேட்டால்…
அதற்கான பதில்
இத்தருணத்தில் எவரிடமும் இல்லை.
தன் சுய அனுபவத்தை
இத்தனை ஆண்டுகளும்
தனக்குள்
வைத்துக்கொண்டு அழுத்தப்பட்ட
உணர்வுகளுடன்
வாழ்ந்தப் பெண்கள்… அதே போல
இன்னொரு பெண்
உடல்…
தெருவில் நிர்வாணமாக்கப்பட்ட போதோ
அல்லது வல்லாங்கு
செய்யப்பட்டு அவர்கள்
தங்களுக்கு
நேர்ந்த கொடுமைகளுக்காக
கோர்ட் வாசலில்
பல ஆண்டுகள் காத்திருந்தப் போதோ
அல்லது காஷ்மீரில்
வட கிழக்கு மா நிலங்களில்
தேசியம் என்ற
ஒரே போர்வைக்குள் பெண்ணுடல்
துண்டாடப்பட்ட
போதோ…
அந்த அரசியலை
அவர்கள் பேசவில்லை!
(விதிவிலக்கு
அருந்ததி ராய் .. )
அது அரசியல்..
இது பெண்ணியம்
என்று பிரித்துவிட்டால்…
சுயம் சார்ந்த்து
மட்டுமே பெண்ணியமாக
சுருங்கிவிடும்.
அப்படித்தான்
பெண்ணியம் இருக்க வேண்டும்
என்ற பெண்ணிய
நிலைப்பாடு என் போன்றவர்களுக்கான
பெண்ணியம்
அல்ல.
இந்த முரண்
சாதியும் வர்க்கமும் இருக்கும் வரை
பெண்ணிய தளத்திலும்
அதன் பிரதிபலிப்பாக
இருக்கவே
செய்யும் என்ற புரிதலுடன் தான்
இதை எல்லாம்
கவனிக்கிறேன்.….
பெண்ணுடலுக்கு
சாதியில்லை
மதமில்லை
மொழியில்லை தேசமில்லை
என்ற புகழ்பெற்ற வாசகம்
பொய்யானது
என்பதையும் அதே நாங்களும்
எங்கள் எழுத்துகளில்
கையாளும் போலித்தனமும்
என் முகத்தில்
அறைகிறது….
பெண்ணுடலுக்கு
சாதியில்லை என்றால்
கயர்லாஞ்ச்சி
சுரேகாவின் உடல் நிர்வாணமாக்கப்பட்டு
நடுத்தெருவில்
வன்புணர்வு செய்யப்பட்டிருக்காது!
பெண்ணுடலுக்கு
மதமில்லை என்றால்
காஷ்மீர்
கதறி இருக்காது,
பெண்ணுடலுக்கு மொழியில்லை என்றால்
ஈழத்தில்
அவள் உடலைச் சிதைத்திருக்க மாட்டார்கள்.
பெண்ணுடலுக்கு
தேசமில்லை என்றால்
இந்திய பாகிஷ்தான்
பிரிவினையில் நவகாளியில்
பெண்களின்
கதறல் ஒலித்திருக்காது.
ஆண் சமூகம்
ஏற்படுத்தி வைத்திருக்கும்
அத்தனைப்
பிரிவுகளும் பெண்ணுடலுக்கு உண்டு
உண்டு.. பெண்ணுடல்
அந்த எல்லைகளைக்
கடக்கும்
யுத்தம் … இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.
அதனால் மீ
டூ பேசுபவர்கள் மேட்டுக்குடி பெண்கள்
என்ற புகாரில்
இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்.
கலகம் என்பதும்
புரட்சி என்பதும் எப்போதுமே
கீழிருந்து
தான் கிளம்ப வேண்டும் என்பதில்லை.
மேலிருந்து
வரட்டும்.. வரட்டுமே என்று சொல்கிறேன்.
அதை வெறும்
காற்றில் கரைந்து விடும் வெற்றுக் குரலாக்காமல்
தனி நபர்களின்
விளம்பர உத்திகளைத் தூக்கி எறிந்துவிட்டு
இச்சமூகத்தின்
அடுத்தக்கட்ட வளர்ச்சியாக முன்னெடுக்க
வேண்டும்.
செய்வோமா தோழியரே…
வாருங்கள்
என் நண்பர்களே..
நீங்களின்றி இது சாத்தியமில்லை
என்பதை நானறிவேன்..
சேர்ந்தே
பயணிப்போம்…
//கடக்கும் யுத்தம் … இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.
ReplyDeleteஅதனால் மீ டூ பேசுபவர்கள் மேட்டுக்குடி பெண்கள்
என்ற புகாரில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்.
கலகம் என்பதும் புரட்சி என்பதும் எப்போதுமே
கீழிருந்து தான் கிளம்ப வேண்டும் என்பதில்லை.
மேலிருந்து வரட்டும்.. வரட்டுமே என்று சொல்கிறேன்.//
மேட்டுக்குடி பெண்கள் என்று சின்மயி போன்ற செல்வந்தர்களை சொல்கிறீர்களா?
அல்லது தமிழக கண்ணோட்டத்தில் ஜாதி, பேதம் பார்த்து பார்ப்பான்களிடமிருந்து கலகம் புரட்சி வரட்டும் என்று சொல்கிறீர்களா?
இரண்டும் தான்.
DeleteYou need to respond to the responses, Madam!
ReplyDelete1) You are saying adultery is LEGAL. You dont have a problem there. Is that correct? (one of your posts)
2) Me-too is good too.
Now here is my question..
For both scenarios, inappropriate sexual advances is the first step. both for adultery and for misconduct. Correct?
Such a sexual advance is accepted in the "adultery case" and it goes further. SO IT IS LEGAL??
The same sexual advance when it is rejected, they started bitching about it saying "me-too"?
You dont know the result when one is making the sexual advances towards another person.
My question is women who involved in adultery's stand on, "Me-too movement"?
Are they going to come and say, that guy touched me inappropriately but I loved his touch (though I am in another boring relationship), so we took it to the next step?
What is their stand here for the inappropriate sexual advances before the adultery getting started?
Can you answer me, please?
I never support adultery. நீங்கள் வாஜ்பாய் கவுர் பதிவை சொல்கிறீக்ரள் என்று நினைக்கிறேன். அந்த உறவில் இருவருக்குமே இருந்த வெளிப்படைத் தன்மையை வியந்திருந்தேன். அங்கே கவுர் வாஜ்பாய் இருவரும் விரும்பியே தங்க்கள் உறவைத் தொடர்கிறார்கள். ஆனால் இன்றைய மீ டு இயக்கத்தின் அடினாதமே எந்த ஒரு பெண்ணையும் அவள் விருப்பமில்லாமல் எந்த ஓர் ஆண்மகனும் அவன் யாராக இருந்தாலும் பாலியல் உறவில் சீண்டலாகவோ தொடுதலாகவோ கூட அவளைத் துன்புறுத்தக் கூடாது என்பது தான். இரண்டையும் நீங்கள் குழப்பிக் கொள்ளும் அளவுக்கு நிச்சயம் விவரமில்லாதவராக இருக்க முடியாது. எனக்கு டெஸ்ட் வைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
ReplyDeleteசேலம் பகுதியில் ராஜலட்சுமி என்ற ஏழை பெண்ணிடம் உண்மையிலேயே பாலியல் கொடுமை நடத்தபட்டு அவர் கொலையும் செய்யபட்டுள்ளார். சீமானும் இசையமைப்பாளர் பிரகாஷ், திருமாவளவனும் கண்டித்துள்ளார்கள். தனக்கு 14 வருடங்களுக்கு முன்பு சுவிஸ்லாந்து நாட்டில் நடந்தது என்று காலில் விழுந்து வணங்கி எழுந்த பின் பாஸ்போட்டை தேடிக்கொண்டிருக்கும் சின்மயி அடித்துவிட்டதிற்கு ஆதரவாக போராடி கொண்டிருக்கும் போராளிகள் யாருமே இந்த கொடூரத்தை கண்டு கொள்ளவில்லை.
ReplyDelete