Monday, February 3, 2020

திமுக ப்ராஜெக்ட் மேனேஜர் பிராசாந்த் கிஷோர்

மோடி, மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன் மோகன், ஸ்டாலின்...! யார் இந்த பிரசாந்த் கிஷோர்...?

திமுக வுக்கு பிரசாந்த் கிஷோர் தேவைப்படுகிறாரா?
புதிதாக தோட்டம் போடுபவனுக்கு செடி வளர்ப்பது எப்படி?
 என்ற பயிற்சி தேவைப்படலாம். ஆனால் திமுக வுக்கு..! 
இப்படி ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரை வைத்துக் கொண்டால் தான்
 வெற்றி பெற முடியும் என்ற நிலை திமுக வுக்கு வந்தவிட்டதை
 திமுக ஒத்துக் கொள்கிறதா? அல்லது தன் வசம் 
ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் அதிமுக பக்கம்
 கிங்க் மேக்கர் பிரசாந்த் கிஷோர் சேர இருப்பதை 
தடுத்து நிறுத்தி விட்டதாக நினைத்து தங்களின் 
புத்திசாலித்தனத்தை எண்ணி எண்ணி பூரித்து போயிருக்கிறதா...
திமுக வுக்கு இது சரிவா..
இல்லை பிரசாந்த் கிஷோரின் ப்ராஜெக்ட் கம்பேனிக்கு சரிவா..
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ..
பிரசாந்த் கிஷோர் தோற்றுப்போன இடங்களும்
உண்டு. வெற்றி பெற்ற இடங்களிலும் அதற்கான
முழுமையான காரணம் பிரசாந்த் கிஷோர் மட்டுமல்ல..
 இதை மட்டுமாவது திமுக அறிவாலயம்
கவனித்துக் கொண்டால் நல்லது..
அது என்ன கொள்கை, உடன்பிறப்பு..சித்தாந்தம்,
கத்தரிக்காய் வெண்டைக்காய்னு யாரும் யோசிக்க வேண்டாம்.. 
வெங்காயம் தான் எல்லாம்..
சரவணா.. பாவம்.. தொண்டர்கள் தான்.

#திமுக_பிரசாந்த்கிஷோர்

No comments:

Post a Comment