இருட்டுக்கடை அல்வா..
திருநெல்வேலியின்
அடையாளமாகிப்போனது..
புதுமைப்பித்தன்,
புதியமாதவி , பொதிகைமலை,
சிந்துப்பூந்துறை,
தாமிரபரணி, தென்னிந்தியாவின்
ஆக்ஸ்போர்ட் என்பதைச்
சொல்லும் கல்லூரிகள்,
சுலோச்சனா முதலியா
பாலம்.. நெல்லை டவுண்,
நெல்லையப்பர் கோவில்,
ஜானகிராமன் ஹோட்டல்,
திரு நெல்வேலி
ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன்
இப்படியாக பல அடையாளங்கள்
எங்க ஊருக்கு
இருக்கிறது என்றாலும்
இந்த அடையாளங்கள்
பிற ஊர்களுக்கு
இருக்கும், இருக்கிறது! ஆனா
இந்த இருட்டுக்கடை
அல்வா இருக்கே..
இதுமட்டும்.. எங்க
ஊரின் ஸ்பெஷல்.. காரணம்
தாமிரபரணி தண்ணியும்
காற்றும் இல்லாத
இட த்தில இருட்டுக்கடை
அல்வா இருக்காதாமே!
அடேங்கப்பா..
இருட்டுக்கடை அல்வாவை
சூடா வாங்கி அப்படியே
அதில ஒரு துண்டை
எடுத்து வாய்க்குள்ள போட்டு
அது நெய்யில வழுகிட்டு
தொண்டைக்குழிக்குள்ள
போற சுகமும் ருசியும்
இருக்கே.. அதெல்லாம்
அனுபவிச்சாதான்
தெரியும்.
திரு நெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை
பிரபலமாக்கியதில்
சினிமாக்களுக்கும் பங்குண்டு.
அப்புறம்.. இதை
வச்சிக்கிட்டு திரு நெல்வேலிக்காரங்க
அல்வா கொடுக்கிறதில
கில்லாடிகள் என்று
இன்னொரு தலபுராணமும்
உண்டு.
இருட்டுக்கடை அல்வா
சரித்திரம் தெரியுமா
ரொம்பவும் விசித்திரமா
இருக்கு.
சொக்கம்பட்டி ஜாமினில்
மிக அதிகமாக
குதிரைகள் இருந்தன.
அவற்றைப் பராமரிக்க
வட நாட்டிலிருந்து
லாலா என்ற இனத்தவர்களை
அழைத்து வந்தார்கள்.
லாலாக்களும் குதிரைகளுக்கு
விதம் விதமாக உணவு
சமைத்துப் போட்டார்கள்.
குதிரைகளுக்கு
வைத்த உணவை குதிரைப்படை
வீர ர்களும் சாப்பிட்டு
அதன் ருசியைப் போற்றினார்கள்.
எப்படியோ இச்செய்தி
ஜாமீனுக்கு எட்டியது.
ஜாமீன் குடும்பமும்
லாலாக்களை தங்கள்
சமையலறையில் பயன்படுத்திக்
கொண்டனர்.
இப்படியாக சமையலில்
கொடிகட்டிப் பறந்த
லாலாக்கள் சொக்கம்பட்டி
ஜாமீன் ஆட்சி முடிவுக்கு
வந்தப் பின் பல
தலைமுறைகள் வாழ்ந்த நெல்லை
மண்ணை விட்டு சொந்த
ஊருக்குத் திரும்பவில்லை.
அவர்கள் ஆரம்பித்த
தொழில் தான் “அல்வா”
ராஜஸ்தானைச் சேர்ந்த
கிருஷ்ணசிங் என்பவரின்
மகன் பிஜிலி சிங்
என்பவர் தான் அல்வாவைத்
திருநெல்வேலிக்குக்
கொண்டு வந்தார்
என்று பதிவு செய்கிறார்
முத்தாலங்குறிச்சி
காமராசு. ( தென்னாட்டு
ஜாமீன்கள்)
எங்க தாமிரபரணி
தண்ணி இப்படியாக
குதிரைக்கு வச்ச
கோதுமையை அல்வா ஆக்கி
இருட்டுக்கடை அல்வா
ஆக்கி..
திரு நெல்வேலி
சீமைக்கு அடையாளமாக்கி..
அட டா..
அடடே அல்வா வரலாறு இனிக்கிறதே...
ReplyDelete