Sunday, February 2, 2020

அண்ணாவின் இறையாண்மை


இறையாண்மைக்கு புதுவடிவம் கொடுத்தவர்
அறிஞர் அண்ணா..
இந்த நாளின் நினைவுகள் இன்றும் அதே
கனத்துடன் எனக்குள் நிழலாய் படிந்திருக்கிறது.
அப்பாவின் நண்பர்கள் கூட அழுவார்களா!
அதுவும் ரோட்டில் அழுதுக்கொண்டே ..சென்ற காட்சிகள்.
இதெல்லாம் நிழல்படமாய் இப்போதும்.
திமுக வின் தலைவர் என்று மட்டுமே
தமிழகம் அறிஞர் அண்ணாவைப் பார்க்கிறது.
ஆனால் ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும்
மொழி இன வழி உணர்வின் மூலம் ஒரு
கூட்டாச்சி த த்துவத்தையும் அதுவே ஒவ்வொரு
மா நிலமும் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான
சரியான வழியாகவும் இருக்க முடியும் என்பதை
இன்று இந்தியாவின் பிற மா நிலங்கள் புரிந்து
கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் அண்ணாவின்
 தேசியக்கொள்கை இந்தியாவுக்கானது மட்டுமல்ல, 
அவர் தேசியத்திற்கான ஒரு புதிய உள்ளடக்கத்தைக் கொடுத்தார்.
அதாவது ஒவ்வொரு தேசியத்தின் உயிரிலும்
 ஒரு பொதுமொழி ஒரு பொதுமதம் அல்லது 
இனம் ஒரு பொது எதிரிச்சமூகம் ொதிந்து
 ைக்கப்பட்டிருக்கிறது. அண்ணா இதற்கு மாறான
ஒன்றை சிந்தித்தார். நிலப்பரப்பையும் அதன் எல்லைகளையும்
 இறையாண்மைக்கான உயிர் நாடியாக் கருதிடும்
 தேசியத்துக்கு மாற்றாக நாடு என்பதை 
நிலப்பரப்பாக மட்டும் அல்லாமல்
மக்களாகவும் மக்களுடைய உணர்வுகளின் தொகுப்பாகவும் 
பார்த்த அண்ணா மக்களுடைய எண்ணங்களையே 
இறையாண்மைக்கான உயிர் நாடியாகப் பார்த்தார்.
 இறையாண்மைக்கான அர்த்தம் அறுதியிடப்பட்ட தல்ல என்றார். 
உலகில் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் மக்கள் தங்களின்
தாயகத்தைத் தாங்களே ஆண்டு கொள்வதற்கான உரிமையை 
அவர் தேசியமாக்க் கண்டார் என்றாலும் 
பிறப்பின் அடிப்படையில் அல்லாமல்
உணர்வின் அடிப்படையிலானதாக 
அதன் குடியுரிமையைச் சிந்தித்தார்.
“சமத்துவம் என்பது எல்லோரையும் 
சமமாக நட த்துவது அல்ல, 
எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிப்பது” எனும் லாஸ்கியின் கூற்றே
அண்ணா முன்னிறுத்திய தேசியம்.
தேசக் கட்டுமானத்தில் நவீனக் கருத்தாக்கம் புறம் தள்ளிய 
கலாச்சாரப் பிரதி நிதித்துவத்தையும் 
பன்மைத்துவத்தையும் தனது தாய் நாடு கருத்தாக்கத்தின் 
பிரதான இட த்தில் கொண்டு வந்து பொருத்தினார். 
தனது கனவுக்கான உயிரை அவர் தன் மொழியின் 
தொன்மையிலிருந்தே எடுத்துக்கொண்டார்..

அண்ணாவின் கனவு.. 
அவர் சிந்தனையின் முதிர்ச்சியிலிருந்து பிறந்தது. 
அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அளவுக்கு 
அவர் கட்சியின் அரசியல்வாதிகள் தவறினார்களோ
அல்லது அறியாமலேயே அரசியல் நடத்தினார்களோ..
தெரியாது..
இன்று அவர் நினைவு நாளில்..(03 பிப்ரவரி)
அவர் சிந்தனைத் துளியின் அர்த்தங்களை
மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்கிறேன்.
அண்ணாவின் அடுக்குமொழியை அண்ணாவின்
மேடைப்பேச்சுகளை மட்டுமே பலகாலம்
பேசிப் பேசி.. அண்ணாவின் ஆளுமையைக்
குறைத்துவிட்டோமோ என்று கூட பல தருணங்களில்
நான் நினைத்த்துண்டு.

மாபெரும் சிந்தனையாளர். 
தேசியக்கருத்துருவாக்கத்தில் அவர் தான் 
இந்திய தேசியவாதிகளுக்கும் மாற்று கருத்தை
முன்வைத்தவர். அதனால் தான் வாஜ்பாய் போன்றவர்களும் 
அண்ணாவைக் கொண்டாடினார்கள்.
வாஜ்பாய் தன் கவிதைகளின் தமிழாக்கத்தை அறிஞர்
அண்ணாவுக்கே சமர்ப்பித்தார் என்பதும் நினைவுக்கு
வருகிறது.

அண்ணாவைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளவும்
அறிந்து கொள்ளவும் என் போன்றவர்களுக்கு
இன்னும் நிறைய இருக்கிறது

No comments:

Post a Comment