சரத் பவாருக்கு "பத்ம விபுஷன்" விருது..
நாலு தடவை மராட்டிய மாநில முதல்வராக இருந்தவர்
இந்தியாவின் முன்னாள் இராணுவ அமைச்சர்.
10 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயத்துறறை அமைச்சராக
இருந்தவர்.. அரைநூற்றாண்டு கால அரசியல்வாதி..
இத்தியாதி இத்தியாதி காரணங்களுக்காக அவருக்கு
பத்மவிபுஷன் விருது வழங்கியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் சோனியகாந்தியின்
"வெளிநாட்டவர்... இந்தியரல்லர்" என்ற அடையாளத்தை
முன்னிறுத்தி அகில இந்திய காங்கிரசு கட்சியை உடைத்தவர், பிளந்தவர்...
காங்கிரசு கட்சியை உடைத்தவர்கள் பலருண்டு. அவர்கள்
எல்லாம் இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் அதே காங்கிரசு
பெயரை விட்டுவிடாமல் NATIONAL CONGRESS PARTY - NCP
என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து இன்றுவரை தன் அரசியல்
வியாபாரத்தில் இலாபம் காட்டும் ஒரே நபர் ...
பிஜேபி அரசு இதற்காக அவருக்கு "பாரதரத்னா" கொடுத்திருக்க
வேண்டும்...
அதைவிட குறைந்த "பத்மவிபுஷன்" விருது கொடுத்ததை
வன்மையாக கண்டிக்கிறோம்.
:( விருதுகள் எப்போதுமே இப்படித்தான்...
ReplyDeleteதிறமை வேண்டுமென்ற அவசியமில்லை.
இந்திய கிரிக்கெட்டே இவர் கையில் தான் இருந்தது, அதை வைத்தே பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து, நாட்டுக்காக உழைத்த நல்லவர்கள் பட்டியலில் இடம்பிடித்தவரும் கூட..
ReplyDelete