தொலைதூரத்தில் உன் மூச்சுக்காற்று தீண்ட முடியாத
மலைச்சாரலில் அலைந்து திரிகிறேன்.
அலைபேசிகளின் காற்றலைகள் எட்டமுடியாத தூரத்தில்
கொட்டும் பனிமலையில் எலும்புகள் சிலிர்க்கின்றன
தொங்கிக்கொண்டிருக்கும் நரிலதா மலர்களின் கவிதைமொழியில்
எனக்காக காத்திருக்கிறாய்..
சூடான மூச்சுக்காற்று என்னருகில்.
மலர் செடி கொடி மரம்
வனம் வானம் ... அடியே
நோக்குமிடமெல்லாம் உன் களிநடனம்.
நிறைவேறாத ஆசைகளும் காதலும்
என்னைக் கொத்தி தின்னுகின்றன.
கரு விழிகள் பிதுங்கி கைவிரல்கள் நடுங்க
கருச்சிதைவு.
பஞ்சாட்சர மந்திரம் எழுதி
அதில் " அ , இ , அரி, ஓம் " கீறிய பீஜாட்சர மந்திரத்துடன்
அருகில் வருகிறான் அகத்தியன்.
காவிரி கொணர்ந்தவன் தோற்கிறான்.
வானம் பொய்த்த பூமியில்
தற்கொலை செய்து கொள்கிறான்.
சமைந்த மூன்றாம் நாள் கிருஷ்ணபட்சத்தில்
என்னைப் பிடித்த மோகினி
சுக்லபட்சத்தில் முழுநிலவாய் ..
சிதை நெருப்பாய் சுடுகிறாள்.
வெந்து தணியுமோ இக்காடு?
கருவைப் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் கவிதையை ரசித்தேன்.
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteஇரண்டு பாராக்களும் தனித்தனியே புரிகிறது .
ReplyDeleteசேர்த்துப் பார்த்தால் என்ன தொடர்பு என்பது புரியவில்லை .
மற்றபடி கவிதை நன்றாயுள்ளது