Wednesday, May 19, 2021
CPI (M) மாநிலக்கட்சியாகிறதா?
காலம் இப்படித்தான் நைனா... (கி..ரா.. )
எந்த அறிஞர் அண்ணாவைப் பற்றி
நாலு வார்த்தை உங்களுக்குப் பேச வரலியோ...
Sunday, May 16, 2021
காதலும் கம்யுனிசமும் ( தோழர் கவுரியம்மாவை முன்வைத்து)
காதலும் கம்யுனிசமும் இரண்டும் மிகவும் நெருக்கமானவை.
ஒவ்வொரு இட துசாரிக்குள்ளும் ஒரு தீவிரக்காதல்
உள்ளம் காதலித்துக்கொண்டே இருக்கிறது.
Tuesday, May 11, 2021
MADAM CM VS 1 (NUMBER ONE) VS POWER
1 (one) vs
madam CM in power house
இரண்டு திரைப்படங்கள்.
1 நம்பர் ஒன் தான் ம ம்முட்டி யின் நடிப்பில்
நிமிர்ந்து நிற்கும்
மலையாள திரைப்ப டம். முடிவெட்டும் அப்பாவுக்கு
மகனாகப் பிறந்த
கடக்கல் சந்திரன் கேரளாவின் முதல்வராகி தன்
அரசியல் கனவுகளில்
என்னவெல்லாம் செய்கிறார், எதைச் செய்ய
முடியாமல் போகிறது
என்பதை முன்வைக்கும் கதையோட்டம்.
அச்சு அசலில் நம்
அரசியல் வாதிகள் சிலரின் உடல்மொழியைக்
கொண்டுவந்திருக்கிறார்
ம ம்முட்டி. அது ரசனைக்குரியதாகிறது.
எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட
வேட்பாளரும் அவருடைய ஜன நாயக க்
கடமையை அதாவது
தொகுதி மக்களின் மேம்பாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அவர்களை பதவியிலிருந்து
இறக்கும்
துருப்புச்சீட்டும்
அதாவது உரிமையும் அவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய
தொகுதி மக்களுக்கு
உண்டு. தொகுதியில் 50% விழுக்காடு மக்கள் அவர் மீது
அதிருப்தி காட்டினால்
அவர் பதவி விலக வேண்டும். இது right to recall உரிமை. அரசியலில் பகை, தனி மனித தாக்குதல்கள்,
பணத்திற்கு விலை
போகும் தொகுதி
மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ஓட்டுகளை முடிவு
செய்யும் சுயசாதி
அபிமானம்… இதெல்லாம் இருக்கும் இந்திய அரசியலில்
கடக்கல் சந் திரம்
ஒரு கனவு.
இனிமையான கனவு.
கனவுகள் நிஜமானால் இனிமையாக இருக்கும்
என்ற இன்னொரு கனவுக்குள்
நம்மைத் தள்ளும் 1, the only one
கதையில் நிறைய
ஓட்டைகள். இருந்தாலும் இந்தக் கனவு நமக்கு இன்று
தேவைப்படுகிறது.
அரசியலில் யதார்த்தம் என்னவாக இருக்கிறது?
MADAM, CHIEF MINISTER
இந்தி திரைப்படம்.
இதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அரசியல் தலைமை.
ஆனால் பெரிய வேறுபாடு
இவர் பெண், அதுவும் இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் தலித் பெண். இவருடைய அரசியல் பயணம்,
தாராவாக நடிக்கும்
ரிச்சா சட்டாவின் பாப் கட், கதை, கதையில் வரும்
மாஸ்டர் இவை எல்லாம்
உத்திரபிரதேசத்தின் மாயாவதி, கன்சிராம் இருவரையும் நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்படுகிறது.
அதிகாரத்திற்கு
வரும் வரை பேசக்கூடிய சமூக அறங்களை ஆட்சி
அதிகாரத்திலிருக்கும்
போது கடைப்பிடிக்க முடிவதில்லை!
அதிகாரத்தின் மாற்றமுடியாத
குணாதிசியம் இதுதான்.
இக்கதையில் ஆட்சி
அதிகாரத்தில் அமர்பவள் பெண், அதிலும் தலித்
பெண். அவளும் என்னவாகிறாள்?
அதிகாரத்தை தொடர்ந்து வசப்படுத்த
அதிகாரத்தின் இரத்தப்பசிக்கு
தீனி போட வேண்டி இருக்கிறது.
அவள் அதைச் செய்கிறாள்..
முதல் பட த்தின்
இனிமையாக கனவுகள் இதிலில்லை.
நிஜங்கள் கனவுகளைப்
போல இனிமையானதாக இருப்பதில்லை.
இரண்டு படங்களையும்
அடுத்தடுத்துப் பார்த்தேன்.
இரண்டு
படங்களும் அரசியல் டிராமா கதைகள்.
ஒன்று
இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறது.
இப்படித்தான்
இருக்கிறது என்று இன்னொன்று சொல்கிறது.
MADAM
cm இந்திய அரசியலைக் காட்டி என் முகத்தில் அறைகிறது.
மெல்ல
மெல்ல அதை மறக்க நினைக்கிறேன்.
மம்முட்டியின்
கனவுகள்.. விரிகின்றன.
கனவுகள்
தான் இனிமையானவை.
Tuesday, May 4, 2021
கழுதைப்பாதையில் ...
பொதி சுமக்கும்
கழுதைகளும் மனிதர்களும்
கழுதைகளும்
மனுஷனைப் போலத்தான் என்பது நிஜமான வார்த்தை.
“ முதல்லே அது சொல்ற பேச்சை நாம கேட்டாத்தான் நாம்மோட பேச்சை அது கேட்கும்…. கழுதை உடம்பில எங்க தொட்டா என்ன நடக்கும்னு தெருஞ்சு வச்சிருக்கனும். கழுதையும் மனுஷன் மாதிரிதாண்டா”
மூவண்ணா
சொல்லியதை சுப்பண்ணா நினைத்துக்கொள்ளும் இட த்திலிருந்து கழுதைப்பாதை ஆரம்பமாகிறது.
சுப்பண்ணா சொல்வது போல கழுதைகள் மனிதர்
குளிப்பாட்டி
சுகம்
கண்டபின் மனிதன் சொல்லைக் கேட்டு பாரத்தை சுமந்து’கொண்டு மலையேறுவதும் மலைச்சரிவில் பாரத்துடன்
இறங்குவதுமாக
வாழ்க்கையை
சுமந்தலைகின்றன. கழுதையை ஒட்டிக்கொண்டு
ராவும்
பகலும் கழுதையோடு கழுதையாக பயணிக்கும்
மக்களும்
அவர்களின் வாழ்க்கையும் மலையிலும் தரையிலும்
மாறி மாறி
கழுதைகளைச் சுற்றி சுற்றி வருகின்றன.
கண்ணாலத்திற்கு முந்தியே வேட்டைக்குப்
போய்விட்டு வருவது தான்
முதுவாக்குடி
ஆண்களுக்குப் பெருமை.. இந்த வேட்டை காட்டு விலங்களை
வேட்டையாடும் வேட்டை அல்ல, தனக்குப் பரிசம் போட்டிருக்கும் பெண்ணை திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் பெண்ணின் தோழியர் அவளை மறைத்து வைத்திருக்கும் இட த்தை தேடி அவளைத் தூக்கி வந்து – அவளும் விரும்பியே வருகிறாள் – அவனும் அவளும் ஆசைத்தீர உடலுறவு கொள்ளும் இரவாக மாறுகிறது. இந்த வேட்டையை அனுமதிக்கும் அதே முதுவாக்குடி ஜனங்கள் தான் தரைக்காட்டு காரியை முதுவாக்குடியில் சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை! முதுவாக்குடியின் கட்டுப்பாடுகளையும் மீறி திருமணம் செய்து கொண்டு குடிசைப்போட்டு வாழ்ந்த ராக்கப்பன் கங்கம்மா கழுத்து அறுபட்டு இறக்கிறார்கள். அவர்களின் குடிசை தீக்கிரையாகிறது. கங்கம்மா சிலையாகி தெய்வமாகி .. கனவில் வந்து ஆட்சி செய்கிறாள். செவ்வந்தி கதையாக அதைச் சொல்லி திரிகிறான்.
ராக்கப்பன் கங்கம்மாவின் காதல்
திருமணத்தில் முடிந்தாலும்
அவர்கள்
கணவன் மனைவியாக வாழவில்லை..
கணவன் மனைவியாக
வாழ்பவர்களின்
ஆண் பெண் உறவு சொல்ல முடியாத வலிகளையும்
ஏக்கங்களையும்
சுமந்து அலைகிறது.
“மூவண்ணா தன் எதிரே கால்நீட்டி அமர்ந்திருந்த அங்கம்மாளின் கையை ஆசையாக எட்டிப் பிடித்து இழுத்தார். அங்கம்மாள் கோபத்துடன் ‘ஆமா பகல்ல ஏத்துனாலும் ரவையில ஏத்துனாலும் வெளக்கு எரியவா போகுது?’ என்றதும் மூவண்ணாவுக்கு முகம் வாடியது. உள்ளமும் உடம்பும் அந்தப் பேச்சால் பொசுங்கிக் கருகின. சுடுமணலில் சுமையுடன் நடைக்குத் தவிக்கும் கழுதையின் வேதனையைப் போலானது “ (பக் 134)
இந்த அங்கம்மாவும்
அவள் தங்கை தங்கம்மாவும் அவர்களின் கணவன்மார்
மூவண்ணா , சுப்பண்ணாவுக்கு செய்யும்
செய்யும் துரோகத்தின் சுவடாக
கதையின்
இறுதிப்பகுதிவரை சுமையை இழுத்துச் செல்கிறது கழுதை.
அங்கம்மாவின்
குழந்தை ஆசை, அதற்கு உடன்படும் தங்கம்மா தன்
புருஷனை
அவனறியாமல் அங்கம்மாவை உடலுறவு கொண்ட இரவும்
அதை உணர்ந்த
தருணமும்… அந்த
உணர்வுகளும் அங்கம்மாவின் அலறலும்
சுப்பண்ணாவின்
சாபமும்.. நாவலின்
இறுதியில் கழுதைகளுடன் சேர்ந்து
அந்த கழுதைப்பாதையில்
எரிந்து சாம்பாலாகிவிடுகிறது.
கதை நெடுகவும்
ஆண் பெண் உறவுகளும் அதில் பெண்களின் ஏக்கம்,
தாய்மைக்காக
ஏங்கித் தவிக்கும் இரவுகள்,
அதனால் ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படும் மன உளைச்சல்கள், தான் விரும்பிய
ஆண் கிடைக்கவில்லை
என்றவுடன் அவன் திருமண நாளில் தற்கொலை
செய்து
கொள்ளும் பெண், காதலனை பொருளாதர வசதிக்காக மறந்துவிட்டு
அதன் பின்
அதே குழந்தை ஏக்கத்தில் அவனை நினைத்து தேடி அலையும்
நாகு – எர்ராவூ காதல்..
“செல்வம் என்னை விட்டுட்டுப் போனது மாதிரி நீயும் போயிடாதே.
ஏம் பக்கத்திலேயே
இரு. அதுபோதும்
எனக்கு. கல்யாணமெல்லாம் வேணாம். நீயும்
நானும் கடைசிவரைக்கும் இப்படியே இருப்போம் : என்று தன் படுக்கையில்
படுத்திருக்கும் தாயின் முன்னால் கதறி அழும் கோமதி..
இப்படியாக
இந்த நாவலில் பாதை நெடுக மனிதர்களும் அவர்களின்
ஒவ்வொரு
கதையும் ஒரு மாலையில் கோர்த்திருக்கும் பூக்களைப் போல
ஒவ்வொன்றாக
கண்ணியில் இணைகின்றன.
மலைக்காடும் காட்டுப்பாதையில் பாரத்தை தரைக்கும் மலைக்கும்
சுமந்து
செல்லும் கழுதைகளும் கழுதை ஓட்டிகளும்..
அவர்கள் வாழ்க்கையில் எட்டிப்பார்க்கும் காலத்தின் மாற்றங்களுடன் கதை
பயணிக்கிறது. மலைக்காட்டு மனிதர்கள் டிரெயினில்
ஏறி பயணிக்கும்
காலம்
வந்துவிடுகிறது. அவர்களுக்கும் தங்கள் பிள்ளைகளை நாலு
எழுத்து
படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
வெள்ளைக்கார
ர்களின் மிசினரி பள்ளிக்கூடங்கள் வந்துவிடுகின்றன.
மருதுவும்
சன்னாசியும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில்
சேர்க்க
வ ந்திருப்பதாக முதலாளியிடம் சொல்கிறார்கள்.
“போடிப்பட்டி பள்ளிக்கூட த்தல சேர்த்துக்கோ. வீடு பிடிச்சி
உன் பொம்பளைங்க இங்க தங்க கூடாது “ என்று ஆணையிடுகிறார்.
குடும்பத்தோடு
காப்பிக் காட்டில் வேலை செய்ய ஒத்துக்கொண்டவர்கள் அவர்கள். அதை மீறும் அதிகாரம் அவர்களுக்கில்லை
என்பதை நினைவூட்டுகிறார்.
பள்ளிக்கூட
த்தின் இடம் கட்டிடம் சூழல் அதை அப்படியே எழுத்தில்
கொண்டு
வந்திருக்கும் செந்தில்குமார்…
இது ஒரு காலத்தின் கதையாக
மாறுகிறது. இந்திய வரலாற்றில் கிறித்தவ
மிஷினரி பள்ளிக்கூடங்களின்
வளர்ச்சியும்
பங்களிப்பும் கதையோடு கதையாக கதையுடன் சேர்ந்து
எழுதப்பட்டிருக்கிறது.
‘நம்மள மாதிரி மலங்காட்டில கஞ்சிக்குத் தவதாயப்படாம பிள்ளைகளாவது
வேலைக்கு
வயித்துக்குத் தின்னுக்கிட்டு இங்கே இருக்கட்டும்” என்று சன்னாசி சொன்னான். அதைக் கேட்ட மருது “ நம்ம பிள்ளைகள நாலு காசு சம்பாதிச்சி கொண்டுட்டு வர்ற துட்டில திங்கற சோறுதான்
நம்ம உடம்பில
தங்கும். அதுவரைக்கு உசிரக் கையில
பிடிச்சிட்டு மலங்காட்டில வேல செய்யனும்: (பக் 287)
காட்டுத் தீயில் முவண்ணாவின்
300 கழுதைகளும்
எரிந்துப்
போகும் காட்சி கழுதைகள் தாயா பிள்ளையா சேர்ந்து நின்று
ஒன்றாகவே
தீக்கிரையாகி இருக்கின்றன
.. மூவண்ணா தன் கழுதைகளின்
மரணத்தை
தன் மனைவி அங்கம்மா செய்த துரோகம் தான் தன் கழுதைகள்
தீயில்
மாட்டிக்கொண்டு இறந்துவிட காரணமாக இருந்தன என்று
சொல்லி
சொல்லி அடிக்கிறார். அந்தப் பெண்கள் அடியை வாங்கிக்
கொள்கிறார்கள். அவர்களும் அதையே நம்புகிறார்கள்.
காடு தரை
மலை கழுதை ஆடு மாடு.. எல்லா வாழ்க்கையிலும்
பாதை நெடுக
பெண்களின் பாதங்களில் முட்செடிகள்..
அவள்
கழுதைபாதைக்கு
தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொதி சுமக்க
வேண்டும். மலை
ஏற வேண்டும். சரிவில் இறங்க
வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெறாத
அவள் வாழ்க்கை
அர்த்தமிழந்த
வாழ்க்கையாகிவிடுகிறது. பெண் என்றால்
அவள் அவன் வாரிசுகளின் விளை நிலமாக இருக்க வேண்டும்.
நிலம் தரிசாக இருந்தாலும்
மழைமேகத்தை
யாரும் குற்றம் சொல்வதில்லை.
தரிசு
நிலத்தைத்தானே கட்டாந்தரை என்று சொல்கிறார்கள்.
கழுதைப்பாதையில்
பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்
இல்லை
என்றாலும் அவர்களின் ஏக்கமும் தேவையும் குழந்தையைப்’
பெற்றெடுப்பதாகவே
இருக்கிறது. இனக்குழு ரெஃப்ட்க் எவ்ஃப்வ்வாழ்க்கையில்
பெண்ணின்
இடம்… வாரிசு
காய்க்கும் மரம்.. கழுதைபாதையும் விதிவிலக்கல்ல,
நாவல் : கழுதைப்பாதை
எழுத்தாளர் : எஸ்.
செந்தில்குமார்.
வெளியீடு; எழுத்து
– பிரசுரம்
பக் 319 விலை ரூ
375/
Wednesday, April 21, 2021
நீர்வளரி....மூச்சுத்திணறுதே
மூச்சு முட்டுது நைனா..
நீர்வளரியில் மூழ்கி எந்திருக்க முடியல
மொழிப்பொருள் தெய்வமே..
கருணைக்காட்டு..
எப்படியும் என்னைக் காப்பாத்திடு..
தமிழ்லல எழுதியிருக்காருய்யா,,
ஒவ்வொரு வரியும் புரியுதுய்யா.
ஆனா மொத்தமா சேர்த்து வாசிச்சா
தலை சுத்திக்கிட்டு யாரோ தண்ணிக்குள்ள வச்சு
அமுக்குறமாதிரி மூச்சை முட்டுது நைனா,, நீர்வளரி நாவல்..
கோணங்கி எழுதியது. 780 பக்கமெல்லாம்
பயமுறுத்தலை நைனா. இத மாதிரி இரண்டு மடங்கு
பெரிசெல்லாம் வாசிச்சிருக்கோமில்ல,
அத்த விடு நைனா, வாசிக்கிறவனை தலைமயிரைப் பிய்ச்சுக்கிட்டு உட்காரவைக்கறதெல்லாம்
ரொம்ப பயம்ம்ம்மா இருக்கு நைனா.
இப்போ இந்த 780 பக்கத்துக்கும்
உங்களையோ அல்லது நீர்வளரியில்
முங்கி எந்திரிச்சவுங்களையோ
உரை எழுதச் சொல்ல முடியுமா என்ன?!!
ஒருவேளைநீர்வளரி எங்கள மாதிரி வாசகர்களுக்காக
எழுதப்பட்டதல்ல என்று சொல்லலாம்,!
"என் எழுத்துகளைப் புரிந்து கொள்ள ஒருவன் பிறப்பான்"
என்று சொன்ன பிரபலமான எழுத்தாளர்களையும்
வாசித்துவிட்டோம்..
இது என்ன நைனா.. நீர்வளரி கண்ணாமூச்சிக் காட்டுது!
பிட்டு பிட்டா புரியுது. ஆனா சேர்த்து ஒன்னா வாசிக்கும்போது
மூச்சு முட்டுது.
15 நாளா நீர்வளரியோட முங்கி எந்திரிச்சி
நீஞ்சி .. பெரிய யுத்தம் நடக்கு.
ஏன் நைனா.. இப்படி எல்லாம் சோதனை நடத்தறீங்க?
ஒவ்வொருகாதையும் அதன் களமும் காலமும்
வால்காவிலிருந்து கங்கை சுட்டுகிறமாதிரி
ஒரு பாயிரமாவது இருந்திருக்கலாம்.
பயணிக்க எளிதாக இருந்திருக்கும்!
"முதற்புல் கூட் முளைக்கவில்லை, முதல்மரம் எதுவும்
படைக்கப்படவில்லை, செங்கல் எதுவும் பதிக்கப்படவில்லை,
கட்டடம் எதுவும் அமைக்கப்படவில்லை, நிலமெல்லாம்
கடலாக இருந்தது " முதல் கதையில் (பக் 86) "
"ஆழமான கடலிலே வளர்ந்து வந்தவை ஆணுமல்ல,
பெண்ணுமல்ல,சர்வ நாசமிக்க சூறைக்காற்றுகள் அவை.
சுமேர தீபிகாவில்கண்ணுக்குத்தெரியாத பல காற்றுகள்
சுழன்று சுற்றி பறவைகளாக மாறிவ்டும். யார் பார்வைக்கும்
தெரியாதபடி கூழாங்கற்கள் கீழே நழுவிஇறங்கி
கொண்டிருக்கிறது சுமேரதீபிகா" (பக் 87)
இது இன்னும் நல்லாவே புரியுது நைனா. கவித்துமாகவும் இருக்கு.
அப்படியேே வாசிச்சிட்டே வந்தப்போ துரைசாமி பேசற பின் நவீனத்துவ கவிதை சூப்பரா இருக்கு.
"எனக்கும் சாயைகளுக்கும் சம்பந்தம் என்னவென்று சொல்லிமனக்கலக்கத்தை காக்கையில் இருட்டில் பூசி
காட்சியற்ற இருப்பை அடைந்தேன். ஆயினும் காக்கையின்
கரைவு ஒலி] எங்கிருந்தாலும் என்னைத் தொட்டது. சலூனில் மொட்டைஅடித்துக்கொண்டு தாடியை மழித்தாலும் ,
காக்கையில் ஓட்டம்என் பிம்பத்தோடு சேர்ந்து பறக்கிறது. ....
.தீவாந்திர தண்டனைக்குப் பிறகு கால வித்தியாசத்துடன்
சமகாலக் காக்கைகள் கூட்டமாகப்பறக்கின்றன.
அதன் மோகத்திலிருந்து என்னால் தப்ப முடியவில்லை"
ரொம்பவும் ரசித்த இடம் .. இந்த வரிகள்.
ஆனாா ரசனையுள்ள வரிகளும் புரிந்தப் புள்ளிகளும்
விரவிக்கிடந்தாலும் ஏன் நைனா.
. இடியாப்பம் மாதிரி இருக்கு..!
நானும் என்னவெல்லாமோ உத்திகளுடம்
வாசித்தாகிவிட்டது! ம்கூம்... ரொம்ப மூச்சுமுட்டுது நைனா..
எங்கஊர்ல ஆக்சிஜன் சிலண்டர் வேற தட்டுப்பாடாகிவிட்டது.
இப்படி மூச்சுத்திணற வைக்கலாமா நைனா..?!!
நீர்வளரி... அப்படியே.. கொஞ்சம் கொஞ்சமா
என் வாசிப்பு நிலத்தை ஆட்கொள்ளமுடியாமல்
அமுக்கி ஒரேயடியாக நீரடிக்குள்
லெமுரிகாரிகையுடன் நானும் பயணிக்கிறேன்..!
புத்தகத்திற்குள் உள்ளே மூழ்கும் வார்த்தைகள்
மொழிச் சுழல்களில் நகரும் புயல" இந்தக் கடலடி
நீர் நூலகத்தில் எழுதியவர்கள் யாரேனும் ரகசியமாய்
எழுதிக்கொண்டிருந்த மஞ்சள் நீர் விளக்கொளி
மயங்கித் தோன்றும் இருளில் யாரோ நடந்து வருகிறார்கள்.
கடலுக்கு வெளியே மூழ்கும் நூலகம் அதன் நினைவை
ஒவ்வொரு நாளும் அறியாமலேயே
இன்னும் எழுதியபடியே.." (பக் 132/ 133)
நீர்வளரியில் நான் கனவு காணுகிறேன்..
எல்லா கனவுகளும் புரிவதில்லை தானே.. நீ
நீர்வளரி நாவல்
எழுத்தாளர் கோணங்கி
அடையாளம் வெளியீடு 2020.
பக் 780. விலை.660/
Saturday, April 17, 2021
என் "இவளை" தொலைத்துவிட்டேன்.
Saturday, April 3, 2021
இலண்டன் - திரள் சமூக கலை இலக்கிய குழுமம்.
இலண்டன் - திரள் சமூக கலை இலக்கிய குழுமத்தின்
பார்வைக்கு:
வணக்கம் நண்பர்களே.
உங்கள் விசித்திரமான
அணுகுமுறை தான் என்னை இதை எழுத வைத்திருக்கிறது, இதற்காக , நான் மிகவும் வருந்துகிறேன்.
காரணம்
அழைப்பிதழில் பெயர்
போட்டு அந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற முதல் நிகழ்வாக உங்களின் நேற்றைய
நிகழ்வு அமைந்துவிட்டது.
27/3/21 திட்டமிடப் பட்ட உங்கள் நிகழ்வு “பிரதிகளின்
மொழி அரசியல்”
மிகவும் அருமையான
மிகச்சிறந்த தலைப்பு. திட்டமிடப்பட்டபடி அன்று நிகழ்வு நடக்கவில்லை என்று அறிகிறேன்.
அது உங்கள் அமைப்பு சார்ந்த பிரச்சனை. அதில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. அதே நிகழ்வு
அதே தலைப்பில் 3/4/21 நேற்று நடைபெற்றிருக்கிறது.
வாழ்த்துகள்.
ஏப்ரல் 01 காலையில் சுவிஸ் ஊடறு றஞ்சி அவர்கள் என்னைத்
தொடர்பு
கொண்டு 03 ஆம்
தேதி பேச முடியுமா என்று கேட்டவுடன் நானும் இசைவு கொடுத்தேன். அதன் பின் நிகழ்வு இருக்கிறதா
இல்லையா என்பதை
இருமுறை நானே றஞ்சியுடன்
தொடர்பு கொண்கு கேட்டுக்கொண்டிருந்தேன். அழைப்புதழ் தயாராகிறதாக சொல்கிறார்கள் என்று
அவரும் அவருக்கு
கிடைத்தச் செய்தியை
என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் நிகழ்வு
நடக்கும் 03/4/21 நேற்று காலை 10.39 மணிக்கு றஞ்சி
எனக்கு அழைப்பிதழ்
அனுப்புகிறார். மாலையில் நடக்கும் நிகழ்வுக்கு
காலையில் தான்
அழைப்பிதழ் அனுப்பி உறுதி செய்யப்பட்ட து.
இதில் றஞ்சி மீது
எனக்குத் துளியும் வருத்தமில்லை.
றஞ்சி என்னைத் தொடர்பு கொண்ட து கெளரி பாராவின்
வேண்டுதலால். இதுவும் ஓகே. ஆனால் கெளரி பாராவுக்கு வாசன்
அவர்களுக்கோ ஏன்
திரள் குழுமத்திற்கு நான் புதியவள் அல்ல. ஏற்கனவே
அவர்கள் அழைத்து
31 அக்டோபர் 2020 ல் நடந்த நிகழ்வில் நான் கலந்து
கொண்டிருக்கிறேன்.
அப்போது வாசன் தான் என்னை நேரடியாக
தொடர்பு கொண்டு
கால அவகாசம் கொடுத்து நட த்தினார்.
அப்படி இருந்தும்
திரள் அமைப்பிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு
கொண்டு நிகழ்வை
உறுதிப்படுத்தவில்லை. காலையில் வாசன்
அனுப்பி இருந்த
உள்பெட்டி மெசஞ்சர் செய்தி மாலையில் நான்
பார்த்துவிட்டு
கடந்து செல்வதை தவிர வேறு வழி?
நீங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து அழைக்கவில்லை
என்று நான்
ஆதங்கப்படவில்லை.
ஆனால் 24X7 நாங்கள் ஓய்வாக இருப்பதாகவோ
அல்லது நீங்கள்
எப்படி எந்த முறையில் அழைத்தாலும் ஓடோடி
வந்துவிடுவோம்
என்றோ உங்கள் “மவுனமொழியின் பிரதி அரசியல்”
உணர்த்தியது. சகமனிதரை
எப்படி நட த்துகிறோம் என்பது தான்
பிரதி நிதியின்
சமூக அரசியல். எந்தக் கடவுச்சீட்டும் அதை தீர்மானிப்பதில்லை.
பிரதிகளின் மொழி அரசியல் < பிரதி நிதிகளின்
மவுன மொழி
அரசியலாக மாற்றியதில்
நீங்கள் சொல்ல விரும்பியது என்ன?
ஏன்?
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு என் வாழ்த்துகளும்
அன்பும்.
நிகழ்வில் கலந்து
கொள்ளவில்லை என்ற வருத்தமில்லை எனக்கு. ஆனால்
அதை இப்படி வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்காக வருந்துகிறேன்.
Thursday, April 1, 2021
அசுரனுக்கு வாழ்த்துகள். ரஜினி வாழ்க!!
இந்திய அரசு வழங்கும் திரையுலகின் மிக உயரிய விருது
தாதாசாகேப் பால்கே விருது.
இந்த விருது இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்





