Saturday, April 17, 2021

என் "இவளை" தொலைத்துவிட்டேன்.

 

இவள் எனக்கு இப்போது "யாரோவாக" தெரிகிறாள்!
நான் இவளை எப்போது தொலைத்தேன் என்று
நினைவில்லை. இவள் மதுரைப் பல்கலை கழகத்தில்
முதுகலை தமிழ் இலக்கியத்தில் தெ.பொ.மீ தங்க விருது
(GOLD MEDALIST) பெற்ற நாளில் எடுத்தப் புகைப்படம்
என்று புகைப்படக்குறிப்பு சொல்கிறது.
அதுவும் எனக்கு மறந்தே போய்விட்டது. !!

தமிழ் இலக்கியம் படித்த இவள்
ஏன் பன்னாட்டு வங்கி வேலைக்கு
கணக்கெழுதப்போனாள்?
தாவரவியல் படித்துவிட்டு வங்கி வேலைக்குப்
போக முடியும் என்றால் தமிழ்ப் படித்துவிட்டு மட்டும் வங்கி
வேலைக்குப் போக முடியாதா என்ன?
எல்லாமே என் வாழ்க்கையில் எதிர்கொண்ட
சவால்களும் அவற்றை நான் எதிர்கொண்ட
கதைகளுமாக இன்னும் எழுதப்படாமல்.. அப்படியே..

இந்தப் புகைப்படத்தில் இருப்பவளைத் தொலைத்து
விட்டதில் எனக்கு வருத்தமில்லை!.. ஆனால்
இந்த இவளின் அறிவும் துணிச்சலும் வாசிப்பும்
சேர்ந்தே தொலைத்துவிட்டதற்காக
வருத்தப்படுவதைத் தவிர
இனி.. என்ன செய்ய முடியும்!
(இவள் வாசிப்பின் இராட்சசி..
இவள் கைப்படாத தமிழ் ஆங்கில சமூகவியல்
புத்தகங்கள் மதுரைப் பல்கலை கழக நூலகத்தில்
இல்லை என்ற அளவுக்கு வாசித்து தீர்த்தவள் ... !)
இவள் இப்போது எனக்கு "யாரோ"வாக தெரிகிறாள்.

7 comments:

  1. தொலைக்க வில்லை...புதிய பரிமாணம் !

    ReplyDelete
  2. அவள் உங்களுக்குள் சாரமாக கரைந்து போயிருக்கிறாள். முளைத்து வளராமல் எந்த மரமும் இல்லை; எந்த விருட்சமும் இல்லை. அதே அவளின் அல்லது அவள்களின் நேரடி பிரதியாக,பிரதிகளாக வளர சாத்தியமில்லை. அது சாத்தியமாயின் பரிமாணங்கள் தொலைந்துவிடும். அனுபவங்கள் அர்த்தமற்றுவிடும். அதாகப்பட்டது அவள் வளர்ந்து கிளைபரபரப்பி இவளாக சடைத்து நிற்கிறாள்.

    ReplyDelete
  3. அவள் இவளே... இவள் அவளே... நீங்கள் மறந்து போனாலும் நாங்கள் மறுப்பதற்கில்லை மகளே... வாழ்க உம் தமிழ் தொண்டு. அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும்

      Delete