Saturday, September 26, 2026

ஜய ஜய..சங்கர... மீள்வாசிப்பு

 ஜேகே ஒரு மீள் வாசிப்பு.

( ஜய ஜய சங்கர நாவல்)

💥💥💥💥



"ஆத்ம ஷேமம், லோக ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தை முழுமையாக அறிந்துள்ளவன் நான்" என்ற பிரகடனத்துடன் 'ஜெய ஜெய சங்கர ' புனைவு உலகத்திற்குள் நுழைகிறார் ஜேகே. 


" புனைவு என்றதும் பொய்யல்ல, சத்தியம்" என்று ஜேகே சத்தியமும் செய்கிறார். 

கதையின் ஆரம்பத்திலேயே அவர் தன் நம்பிக்கைகளின் எதிர்மறையாக , தன் சமகாலத்தில் நிலவிய சமூக அரசியலை எவ்விதமான ஆழமான தர்க்கமோ விசாரணையோ இன்றி கிளிப் பிள்ளையின் மொழியில் ஆரம்பிக்கிறார்.

" கால மழையில் கரைந்து போகிற ஒரு சிலையை எழுப்பி அதன் கீழ் ' கடவுளை நம்புகிறவர் முட்டாள்' என்றும் அது மாதிரியான இன்னும் ஏதேதோ மொழிகளையும் கல்லில் செதுக்கி வைத்திருக்கிறது" 

(பக்9)

இந்த வரிகள் ஒரு சாதாரண வாசகனுக்கும் அவர் குறிப்பிடும் சிலை யும் அவர் யார் என்பது அவர் அரசியலும்' இன்னும் ஏதேதோ மொழிகளில் செதுக்கியிருந்த அடுத்த இரண்டு வாசகங்கள் என்ன?' என்பதும் ஜேகே எழுதாமலேயே வாசிக்கப்படுகிறது. அந்த வாசகங்களை எழுதுவதற்கு கூட ஜே கே வுக்கு இருக்கும் வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படுகிறது. 

இந்தப் புள்ளியில் இருந்துதான் அவருடைய ஒட்டுமொத்த  ஜய ஜய சங்கர நாவல் உலகமும் விரிகிறது. ஜேகே காலமெல்லாம் ஒரு பூணூல் போடாத பிராமணனாக வாழ்ந்திருக்கிறார். என்னதான் உழைக்கும் மக்களின் கதைகளை அவர் எழுதியிருந்தாலும் அவருக்குள் இருந்த பிராமணியம் , பிராமண மேலாண்மையை கொண்டாடும் சூத்திர மனநிலை அவருடைய ஆதர்ச கதபாத்திரங்களின் வழியாக வெளிப்படுகிறது. 

தமிழ் சமூகத்தில் தந்தை பெரியாரின் தாக்கம், அம்பேத்கரின் நூற்றாண்டு,தலித்துகளின் எழுச்சி இதெல்லாம் ஜே கே என்ற மாபெரும் தமிழ் எழுத்தாளரின் ஆள் மனதில் மூர்க்கமான எதிர்ப்பு உணர்வை உருவாக்குகின்றன. 

காந்தியின் ஆலய நுழைவு போராட்ட காலத்தில் ஆரம்பிக்கும் கதை இந்தியாவில் எமெர்ஜென்சி காலம் வரை நீள்கிறது. 

காந்தியின் ஆசிரமம் ஆசிரம வாழ்க்கை இதன் ஊடாக ஒரு பண்பட்ட ஆதியின் குடும்பத்தைக் கட்டமைக்கும் ஜேகே அதே ஆதி என்ற கதை பாத்திரத்தை கொண்டு தான் தன் சமகால சமூக அரசியலை கேலியும் கிண்டலும் செய்கிறார்.

" எங்க ஊர்ல சேரியில யாரும் சிவலிங்க தரிசனம் பண்ணனும்னு துடியா துடிக்கல. சும்மா இருக்கிற சங்கை நீங்க யாரும் ஊதி கெடுக்க வேண்டாம் " 

என்று மகாலிங்கம் ஐயர் தன் தம்பி சதாசிவம் ஐயரிடம் சொல்வதில் ஆரம்பிக்கும் சமூக அரசியல் அதன் பின்வரும் பக்கங்களில் ஒவ்வொரு விதத்திலும் பல்வேறு தருணங்களில் வெளிப்படுகிறது. 

கதைப்போக்கில் மகாலிங்கம் ஐயர் நந்தனாரையும் பாணாழ்வாரையும்  ஏற்றுக்கொள்கிற வணங்குகிற உணர்ச்சி மயமாகி மெய்சிலிர்த்து போகிற சனாதன அப்பா என்று மகாலிங்க ஐயருக்கு சங்கரன் கொடுக்கும் உணர்ச்சிப்பூர்வமான மன அலை கடைசிவரை ஓயவில்லை.

தெய்வமென்றால் அது ஆடு மேய்க்கும் ஆதியின் உருவமாகவே கையில் ஒரு தொறட்டிக் கம்புடன் சங்கரனின் உள்ளே தரிசனம் தருகிறதாக கதை நெடுக ஊடாடும் ஆதி + சங்கரன் பிரதி பிம்பங்கள் நிஜத்தில் என்னவாக இருக்கின்றன? ஏன்? 

ஆதியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்ட கதையில்

" கும்பிடறேன் சாமி"

" சொல்லு சாமி சொல்லு" என ஓர் அடிமையாகவே நிற்கிறான், சங்கரன் முன்னால் ஆதி.

ஆதியை  தன் வழிபாட்டு பிம்பமாக ஏற்றுக்கொள்ளும் சங்கரனுக்கு  தன் உயிரைக் காப்பாற்றிய ஆதி தீண்டிவிட்ட தனது உலர்ந்த வஸ்திரங்களை தொட முடியாமல் தவிக்கிறான் சங்கரன்.

" ஆதி, கையாலேயே எடுத்து அந்தத் துணியை ஜலத்திலே போட்டுடேன். நான் பிழிஞ்சு எடுத்துண்டுடறேன்" என்றான் சங்கரன்

ஆதி சிரித்தான், சங்கரனும் சிரித்தான்." ஈரம் இருந்தால் தீட்டு கிடையாது. எல்லாம் உலர்ந்து போனால் தீட்டுதான்" என்று விசித்திரமாய் முனகினாள் சங்கரன்.

" அதெல்லாம் சரிதான் சாமி... ஒருத்தரை ஒருத்தர் தொட்டுக்கறது.. எல்லாருக்கும் ரொம்ப முக்கியமோ "என்பதாக சமாதானம் கூறினான் ஆதி. (பக்50)

 இவைதான் இந்த நாவலின் மிக முக்கியமான மையக்கருத்து. 

ஒடுக்கப்பட்டவன் ஜாதிய படிநிலையில் அடித்தட்டில் இருப்பவன் இந்து மத மேலாண்மையை ஆதியை போல ஏற்றுக்கொள்ள வேண்டும். 

எப்படி சங்கரன் இந்து தர்ம சனாதன மேலாண்மையை உணர்த்தும் கதை பாத்திரமாக ஜேகே படைத்திருக்கிறாரோ அதற்கு இணையான ஆதி கதை பாத்திரத்தையும் ஒரு ஒடுக்கப்பட்டவன் சங்கரனால் தீண்டப்படாதவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை யும் சேர்த்தேதான் ஜேகே தன் படைப்பு உலகில் வாசகனுக்கு கொடுக்கிறார். 

மற்றபடி கதை யின் பிற்பாதியில் இடம்பெறும் ஆசிரமம் குறித்த கனவுகள், பொதுவுடமை இயக்கம், சிங்காரம் , தோழர்களின் செயல்பாடுகள் இவை எல்லாம் கதையின் மையக் கருத்துக்கு எந்த வகையிலும் முட்டுக் கொடுக்கவில்லை.

ஒருவேளை ஜே கே தானும் ஒரு பொதுவுடமைவாதிதான் என்று சிங்காரம் வழியாக பல கருத்துகளை உதிர்க்கிறார். அவை எதுவும் கதையின் மையப்புள்ளியின் வட்டத்தில் இல்லை. அந்தப் பகுதி எந்த வகையிலும் ஆதியையும் சங்கரனையும் பாதிக்கவில்லை.

ஆதியின் அடுத்த தலைமுறை சங்கரனின் ஆன்மீகத்தை சமூக மேலாண்மையை விமர்சனம் இன்றி ஏற்றுக்கொள்கிறது என்பதையும் ஜே கே கதையில் கொண்டு வருகிறார்.

பிம்பங்கள்

அதன் அடையாளங்கள்

அதன் காரணங்கள்

தெய்வமாகவே மனதில் வரித்துக் கொண்டாலும் தீண்டாமை குறித்த குற்றவுணர்வு யாருக்கும் இல்லை. அவ்வப்போது தன் சக மனிதரிடம் நெருங்கும் சந்தர்ப்பங்களிலும் கூட நெருங்காமல் விலகி இருப்பதில் சங்கரன் கடைப்பிடிக்கும் ஆசாரம்,

இந்த தீண்டாமை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் ஆதி..

அப்படியான ஆதிதான் சங்கரனுக்கு தேவை, அந்த ஆதிகளின் பிம்பங்கள் சங்கரனை ' ஆதிசங்கரனாக'  மாற்றுகின்றன.

சனாதனமும் அதைக் காப்பாற்றும் சங்கரனின் துறவு வாழ்க்கையும் எந்த மாதிரியான ஆதி மாந்தர்களை ஏற்றுக்கொள்ளும் , தன் சித்தப்பாவாகவே இருந்தாலும் சதாசிவம் ஐயரை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுவதும் இதனால்தான்.

ஜே கே பற்றி எழுதும் எழுத்தாளர் கெளதமன் அவர்கள் (கணையாழி இதழ்  ஏப் 2025)  சொல்லியிருப்பதும் இந்த உண்மையைத்தான்.

"ஜெயகாாந்தன் எனும் ஆளுமைையின்

அடித்தளம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அறிவார்ந்த  மூத்த தோழர்களாால் வடிவமைைக்கப்பட்டது 

என்று அவரும் மற்றும் பலரும் 

எழுதியுள்ளதைை நான் படித்திருக்கிறேேன்.அதில் உண்மைையும் உள்ளது. ஆனாால் 

அவருடைைய மொத்த வாழ்வின் போக்கைை நிர்ணயிக்கும் அடித்தளம் அவர் வளர்ந்த 

அக்ரஹாாரத்திலே கட்டமைைக்கப்பட்டதாக

அவருடைைய எழுத்துகளில் இருந்தே நான்அறிகிறேேன்.

பத்து வயதுவரைை அமைைந்த அக்ரஹாார வாாழ்க்கைைச் சூழல், வாழ் நாளின் இறுதிவரைை அவரைை பிராாமணத்துவ

ஈர்ப்பில் அழுத்தமாக வைத்திருந்தது. அந்த ஈர்ப்பு  தனக்குள் தன்னைபிராமணனாகவே அவரைை கற்பிதம் செய்து கொள்ளத் தூண்டியது. பிற்காாலத்தில் 'தனது தொழிலால் தானொரு பிராாமணன்' என்றே அவரைை அறைைகூவ வைைத்தது. 

அவருடைைய சமஸ்கிருதஈர்ப்பும் , 

ய க்ஞோபவீத (கள்ளப் பூணூல் - 

சிந்தைையில் ஆயிரம்) ஈர்ப்பும் தொடங்கிய காலமும் அதுதான்.

சனாதனம் பற்றி ஒன்றுமே அறியாத 

வயதில், அதில் மயங்கி,குழந்தைமையோடு 

அதை ஆதரித்தது போலவே திராாவிடம்பற்றிய எந்த அறிதலோ புரிதலோஇல்லாாமலேயே அதைக் கடுமைையாகஎதிர்க்கும் சிறுபிள்ளைை மனமும் அவருக்கு அந்தப் பருவத்திலேயே உரு வாகி விட்டது. இந்த இரு எதி ரெதிர் நிலைைகளைையும் கட்டமைைத்துக் காப்பாாற்றிஆயுள் முழுவதும் பேணுவதே அவரது முழு வாாழ்க்கைையானது. இடையிடைையேஅவருக்கு ஏற்பட்ட நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்குமான வாழ் நாள் குழப்பங்களைையும் அவர் இறுதிவரைைஇழந்துவிடாாமல் பாாதுகாாத்து வந்தார்.

ஜேகே என்ற எழுத்தாளுமையின் புதிர்கள் விடுபடுகின்றன. மேற்பூச்சுகள் உலர்ந்து விடுகின்றன.

ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தில் ஜேகே யார்? அவர் கனவு கண்ட சமூகமும் அதன் மனிதர்களும் ஜய ஜய சங்கர புனைவுகளின் ஊடாக , இல்லை இல்லை, அவரே சொல்வது போல் உண்மைகளின் ஊடாக மிகத் தெளிவாக வெளிப்படுகிறார்கள்.

நன்றி: மானுடம் போற்றுவோம்

இதழ் 36

செப்- அக் 2026


Sunday, September 6, 2026

Words are Matter.


(Times of india chennai. Dated 04 sept 2026)

🔥🔥🔥

 "I strongly condemn this caste-insensitive language"

🔥🔥🔥

Letter to the Editor

Subject: “From Pariah to Pampered” — Words Matter

I am happy that people are increasingly coming forward to adopt street dogs and give them a loving home. It is indeed heartening to see greater compassion towards Indian dogs.

However, I am deeply disappointed that the concern shown towards dogs has not been accompanied by a corresponding social sensitivity towards the people whose caste name has historically been used as a derogatory expression.

The title of the article, “From Pariah to Pampered,” and the repeated use of the word “pariah” in the article are deeply offensive.

The Times of India

Does the editorial team of a reputed newspaper like The Times of India, particularly its Chennai edition, not recognize the historical and caste implications of this word?

Or is there an assumption that no one will question it?

Is this merely ignorance—or does it reflect a certain social arrogance and caste privilege that allows such words to be used casually?

The article could simply have used “street dog,” “Indian dog,” or “Indie dog.” These expressions are clear, accurate and already used throughout the article itself. Why was it necessary to use a term carrying such a painful caste history?

There is something deeply disturbing about celebrating the transformation of a “pariah” into a “pampered” dog while ignoring the fact that Paraiyar/Pariah is connected to the history and identity of an oppressed caste community.

Words are not innocent when they carry centuries of social humiliation.

A newspaper with the reach and influence of The Times of India has a responsibility to be conscious of the historical and social implications of the language it uses. Animal welfare and social justice should not stand in opposition to each other.

I strongly condemn this insensitive usage and urge the editorial team to reconsider the terminology and acknowledge the hurt it can cause to members of the community whose name has been historically used as an insult.

I strongly condemn this caste-insensitive language.

Puthiyamaadhavi

Mumbai

The Times of India article — “From pariah to pampered”