Wednesday, November 3, 2021

தமிழக அரசுக்கு ஏன் இத்தனை குழுக்கள்???

 அரசுக்கு ஏன் இத்தனை குழுக்கள்??!!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி இருக்கிறதா?!!
எதிரிக்கட்சியாவது இருக்கிறதா?
கடிவாளம் இல்லாத குதிரைக்கு
அதன் காலடி நிழலே எதிரி.
சரவணா..
எந்த ஒரு மாநிலத்திலும் இத்தனை குழுக்கள்
அரசுக்கு இல்லை!

அமைச்சர்கள், அமைச்சரின் உதவியாட்கள், (அடியாட்கள் அல்ல)
மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை அதிகாரிகள்,
இதற்கெல்லாம் கட்டிடங்கள், கட்டிடங்களில் நடமாடிக்
கொண்டிருக்கும் மனிதர்கள்..
இதையும் தாண்டி அடிப்படையாக
இருக்கும் பஞ்சாயத்து போர்டுகள்
(கட்டபஞ்சாயத்தை சொல்லவில்லை)
கவுன்சிலர்கள் .. இப்படியாக அரசு நிர்வாகம் என்பது
மேலிடத்திலிருந்து அடிமட்டம் வரை..
ஒரு நிர்வாக ஒழுங்குமுறையில் இருக்கிறது.
இருக்கிறதாகத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அப்படி இல்லை போலிருக்கிறது சரவணா…!
இவர்களை எல்லாம் கண்காணிக்க
இப்போது அறிவிக்கப்படும் குழுக்களைப் பார்க்கும் போது..
ஆஹா.. ஆஹா .. ஆஹா தான்!
வேறு என்ன சொல்லட்டும்?
ஆமாம். இந்த குழுக்களின் வேலை என்ன?
எதற்காக இத்தனை குழுக்கள்?
அரசுக்கு உதவும் இக்குழுக்களுக்கு
அரசு எதாவது கொடுக்கத்தானே செய்யும்?
என்ன கொடுக்கிறார்கள்??
இந்த குழுக்களின் அதிகார வரையறை என்ன?
சரவணா…
இப்படி எதையுமே யாரும் கேட்க வேண்டாம்.
இம்மாதிரி எதாவது ஒரு குழுவில் இடம்பிடிக்க
என்ன செய்ய வேண்டும்? !
கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தீபாவளிப்பரிசு
ஆன்லைனில் அனுப்பப்படும். பணம் கட்டி வாங்கிக்
கொள்ளுங்கள்.

#தமிழகஅரசு_குழுக்கள்

No comments:

Post a Comment