Sunday, November 8, 2020

ஹர்சத் மேத்தா

 ஹர்சத் மேத்தா…

SCAM 1992 - SONY தொலைக்காட்சியில்
ஒரு தொடராக வெளிவந்திருக்கிறது.
அந்த 90 களில் நானும் வங்கியில் வேலை
பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஹர்சத் மேத்தாவின் அந்த பங்குச் சந்தை சாலைகளில்
நடந்திருக்கிறேன்.
எகானாமிக்ஸ் டைம்ஸ் வாசிக்காமல்
ஆபிஸ்க்குள் நுழைய முடியாது.
ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியான செய்திகள்..
பரபரப்புகள்.. எப்போது வேண்டுமானாலும்
நம்மீதும் பாய்ந்துவிடலாம் என்ற எச்சரிக்கைகள்..
அப்போது நான் EXPORT DEPARTMENT – DOCUMENTRY CREDIT கவனித்துக்கொண்டிருந்தேன்.
கோடிகள் எல்லாம் ரொம்பவும் சின்ன தொகை..
ஏற்றுமதி இறக்குமதி விதிகள் மாறிக்கொண்டே இருக்கும்!
FAX வந்து குவியும்..
ஹர்சத் மேத்தா பெயரை உச்சரிக்காத நாளே இல்லை!
அதன் பின் நடந்த எல்லாமே .. நாடறியும்.
நேற்று இத்தொடரைப் பார்க்கும்போது
பழைய நினைவுகள் அலை அலையாக எழுந்தன…
இத்தொடரில் ஒரு வசனம்.. சிபிஐ விசாரணையில்
ஹர்சத்மேத்தா கூட்டாளி உடைந்தக் குரலில் கேட்கும்
உரத்தக்குரல்… “

“PMO OFFICE “ பிரதம மந்திரியைக் கூப்பிட்டு விசாரிப்பீர்களா?”

இதை வெறும் வசனமாக நினைத்து கடந்து
போய்விட முடியவில்லை. இந்திய நாட்டில்
ஆயிரக்கணக்கான கோடிகளில் நடந்திருக்கும் பணம் கையாடல்.. ஏமாற்றுவேலை… ஊழல்.. எல்லாமே அதிகார மையத்தின்
துணையுடன் மட்டுமே நடந்திருக்கின்றன. நடக்கின்றன..
ஆனால்… டில்லி இதில் மாட்டிக்கொள்வதில்லை.
ஒருவகையில் பார்த்தால் ஹர்சத் மேத்தா பாவம் தான்…
அவருக்கு எல்லாத்தையும் செய்திட்டு..
வெளி நாட்டுக்கு ஓடிப் போகிற ஐடியா
இல்லாமல் மாட்டிக்கொண்டார்.


ஹர்சத் மேத்தாவின் முடிவு தான் இம்மாதிரி
கதைகளின் முடிவை வெளி நாட்டு பயணத்துடன்
நிறைவு செய்திருக்கிறதோ என்னவோ…
இந்தியாவிலிருந்து வெளி நாட்டுக்கு தப்பி ஓடிய
விஜய்மல்லையா முதல் நீரவ் மோடி வரை
இந்திய விமான நிலையத்திலிருந்து தான்
புறப்பட்டிருக்கிறார்கள்!..
கதையில் இந்த இடமும் ரொம்பவும் முக்கியம் தான்
நண்பர்களே..
பங்குச்சந்தை ..ஊகவணிகம்..
பங்குகளின் ஏற்றமும் இறக்கமும் திட்டமிடப்பட்டவை.
யாருக்காகவோ தனிப்பட்ட லாபத்திற்காக
பங்குச்சந்தை பங்குகள் ஏறி இறங்கி விளையாடுகின்றன.
இன்னும் சில கம்பேனிகள் .. லெட்டர் பேட் கம்பேனிகள் தான்.
ஹர்சத் மேத்தா செய்த தவறுகளிலிருந்து இன்றைய கார்ப்பரேட் ஜாம்பவான்கள் பாடம் கற்றுக்கொண்டார்கள்.
ஆம்.. இவர்களை
யாரும் எதுவும் செய்துவிடமுடியாது. காரணம்..
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
ரிமோட் இவர்கள் கையில் தான்.
இதற்குப் பெயர் தான் ரிமோட் எகனாமிக்ஸ்.!

#ஹர்சத்மேத்தா
#Harshad_mehta_scam
Image may contain: 9 people, including Arun Kumar, text that says "SCAM SCAM1992 THE HARSHAD MEHTA STORY"

Comm

2 comments:

  1. அருமை. வணிகம்,பங்குச்சந்தை என்ற பெயரில் திறந்தவெளியில் கொள்ளையடிப்பதைப் பற்றி சுருக்கமாக அதேவேளை ஆழமான பார்வை. அதை தங்கள் சொற்களில் பதிந்துள்ளவிதம் அருமை.

    ReplyDelete
  2. இத்தொடர் ஹிந்தியில் மட்டும் தான் காணக் கிடைக்குமா. அல்லது ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் பார்க்க முடியுமா? உங்கள் பதிவு, தொடரைப் பார்க்கத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete