காட்சி 1
எனக்கும் என் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை...
- கட் கட் கட்..
வசனத்தை தப்பு தப்பா பேசறீங்க-
எனக்கும் என் அம்மா ஆரம்பித்திருக்கும் கட்சிக்கும்
எந்த தொடர்பும் இல்லை..
- கட் கட் கட்.. ரெண்டு வரி..
இத ஒரே டேக் கில ச்சொல்லி இருக்க வேண்டாமா..
என்ன இது இன்னிக்கு
இப்படி உளறுதீங்க..
யோவ்.. அது யாருய்யா.. வசனம் எழுதினது?
மாற்றி யோசிய்யா..
அப்பா தான் கட்சி ஆரம்பிக்கனுமா..
ஏன் அம்மாவின் அரசாட்சியை மறந்தீட்டீங்களா..
மறதிக்குப் பொறந்த மண்ணாங்கட்டிகளா..
பெண்கள் மெயின் ரோல் கதைன்னா..
என்னனு தெரியுமாடே..
- ஆரம்பிச்சிட்டாங்கய்யா...
இன்னிக்கு சூட்டிங்க்
நடந்து முடிஞ்ச மாதிரிதான்..
என்னத்தையும் சொல்லட்டும்.
வாய்ஸ் கொடுக்கும் போது பார்த்துக்கலாம்..
கசமாலம்.. பிடிச்சதுக.. கொரொனா கசமாலம்..
காட்சி 2
தந்தையின் கட்சியுடன்
எனக்கு எந்த தொடர்பும் இல்லை..
நைனா.. இந்த அரசியல் அப்படியே ஜிவ்வுனு எகிறுது..
இதுவரைக்கும் யாராவது இந்த வசனம் பேசி இருக்காங்களா..
தளபதி ன்ன்னா சும்மாவா..
மெர்சலாகுதில்ல.. ஒட்டு மொத்த தமிழகமும்..
காட்சி 3
எய்யா... இங்க வா..
அவரு உங்க அப்பாக்காரர் தானே...
ஆத்தா.. இது என்ன கேள்வி?
இல்லப்போ.. அவரோட கட்சி பேரு கூட
"அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் "
அப்படின்னு டிவிக்காரன் சொல்றான்..
ஆமாம் ஆத்தா..
அப்போ அந்த தளபதி விஜய் யாருடே..
நீ இல்லையா..
இது என்னடே .. அப்போ இது புதுசா
டபுள் ஆக்ட் விஜய் தளபதி இயக்கமா...
ஆத்தா...
நீ யாரு ஆளு.. தப்பு தப்பா பேசுதே...
அட போடே..
அந்தக் காலத்தில எம்ஜியாரோட டபுள் ஆக்ட்
நீரும் நெருப்பும் காட்டாததையா நீங்க
காட்டிட போறீக..
சரிதான் போடே...
அகில இந்திய வாம்..
என்ன நினைப்பில டே கில்லி ஆட வருதீக...
நல்ல நக்கல். ஆனாலும் ரசிக்கும்படியாக இருக்கு
ReplyDelete