Thursday, January 4, 2018

ஏ சி மின் கசிவுகள்



தொடர்ந்து ஏ சி மின் ககசிவுகளால் ஏற்படும் தீ விபத்துகளை
ஒரு ப்ரேக்பாஸ்ட டேபுள் செய்தியாக வாசித்துவிட்டு கடந்து
செல்கிறோம். இம்மாதிரியான விபத்துகள் எந்தவொரு நடுத்தர
வர்க்கத்தின் குடியிருப்பிலும்  ஏற்படக்கூடியது என்பதைக்
 கவனத்தில் கொள்ள மறந்துவிடுகிறோம்.
அதிலும் குறிப்பாக ஏசி மின் கசிவுகளால்
ஏற்படும் விபத்துகள் இரவு நேரத்தில் வீட்டிலிருப்பவர்கள்
அசதியாக தூங்கும் போது ஏற்படுகின்றன என்பதால்
உடனடிக் கவனிப்புக்கான வாய்ப்புகள் அரிது.
ஏசி  பயன்பாடுகளை விட்டுவிடலாம் என்பது
கற்பனைக்கு நன்றாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு
பெருநகர வாழ்வில் ஏசி முக்கிய இடம் பெற்றுவிட்டது.

அண்மையில் எங்கள் கிராமத்தில் மாடியில் ஒரு சிறிய அறை
கட்டினோம். உடனே கிராமத்தில் பலர் அப்படியே ஒரு ஏசியையும்
போட்டுவிடக்கூடாதாண்ணே என்று சங்கரிடம் கேட்டது எனக்கு
ஆச்சரியமாகத்தான் இருந்தது. .
மாடியில் சன்னலைத் திறந்தால் ஜிலு ஜிலுனு வேப்ப மரக்காற்று
வீசும் போது எதற்காக ஏசி..?!! இப்படித்தான் நுகர்வோர் சந்தை
கிராமத்தையும் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது.

நேற்று மும்பை அந்தேரி குடியிருப்பு 4வது மாடியில்
 இரவில் ஏற்பட்ட ஏசி மின் கசிவு வீட்டிலிருந்தவர்களை
காவு வாங்கிவிட்டது.
இம்மாதிரி விபத்துகளைத் தவிர்ப்பதற்கு முடியும்.

* தரமான ஏசி யுனிட்டுகளை வாங்கவும்.
*ஏசி யுனிட்டை எக்ஸ்டென்சன் கொடுத்து இணைப்பதை
 தவிர்கவும்.
*24/7 எப்போதும் ஏசி பயன்படுத்துவதைக் கட்டாயம்
 தவிர்க்க வேண்டும்.
*ஏசி பெட்டியை காற்றோட்டமான இடத்தில்
வைத்திருப்பது அவசியம்.
* இவை அனைத்தையும் விட அதி முக்கியமானது
 உங்கள் ஏசியை சர்வீஸ் செய்வது முக்கியம்.
 மழைக்காலம் முடிந்தப் பின் கட்டாயம் சர்வீஸ்
 செய்து தூசு அழுக்குகளை எடுத்து
யுனிட் இணைப்புகள், சுழலும் ஃபேன், தண்ணீர்
 வெளியேறும் பைப் இத்தியாதி.. கவனிக்கவும்.

3 comments:

  1. சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  2. தமிழகத்திலும் இப்போதெல்லாம் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்று சொல்பவர்களைப் பார்க்க முடிகிறது. கிராமத்து வீட்டில் நல்ல காற்று ஸ்வாசிக்கக் கிடைக்கிறதே என நகரங்களில் இருப்பவர்கள் நினைக்கிறோம்....

    பயன்படுத்துபவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருப்பது நலம். வருடா வருடம் சர்வீஸ் செய்வது மிகவும் அவசியம்.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்கள்.
    //கிராமத்தில் பலர் அப்படியே ஒரு ஏசியையும்
    போட்டுவிடக்கூடாதாண்ணே என்று சங்கரிடம் கேட்டது எனக்கு
    ஆச்சரியமாகத்தான் இருந்தது.//
    :)
    இப்படி இந்தியாவில் பல சொல்வார்கள். வேலை அதிகம்.நேரம்கிடைக்கவில்லை என்றால் வேலைகாரரை வைத்து கொள்ள கூடாதா என்பார்கள்,கார் வைத்து கொள்ளலாமே என்பார்கள் சொகுசு வாசிகள்.

    ReplyDelete